Google Goggles-மொபைல் தேடலில் புதுமைக்கு ஒரு Android Application | கற்போம்

Google Goggles-மொபைல் தேடலில் புதுமைக்கு ஒரு Android Application


வெறும் வார்த்தைகளை கொடுத்து தேடும் பணி உங்களுக்கு சலிப்பை தருகிறதா? உங்கள் முன்னே இருக்கும் பொருள் என்ன? எந்த நிறுவனம் செய்தது? எப்போது? என்றெல்லாம் அறிய ஆவலா? இதோ உங்களுக்கான அப்ளிகேஷன் தான் Google Goggles. 

உதாரணமாக ஒரு பொருளை பார்க்கிறீர்கள், அது அழகாக உள்ளது. அது போன்ற ஒன்றை வாங்க விருப்பம் உங்களுக்கு ஆனால் அதனைப் பற்றிய தகவல் தெரியவில்லை. உடனே எடுங்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலை, Google Goggles என்ற இந்த மென்பொருள் மூலம் அந்த பொருளின் நிறுவனத்தின் பெயரை ஒரு போட்டோ எடுங்கள். முடிந்தது வேலை, அதைப் பற்றிய அத்தனை தகவல்களும் உங்கள் கையில் இப்போது. 

இது கீழே உள்ளவற்றை எளிதில் கண்டுபிடிக்கிறது. products, famous landmarks, storefronts, artwork, and popular images found online.அதேபோல வார்த்தைகளை English, French, Italian, German, Spanish, Portuguese & Russian போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதியும் உள்ளது.

Required Android Version: 2.1 and Up
சிறப்பம்சங்கள்:

- barcode களை ஸ்கேன் செய்ய இயலும்.
- QR களை ஸ்கேன் செய்ய இயலும்.
- பிரபலமான landmark-களை கண்டறிய உதவுகிறது.
- ஓர் படத்தை ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யலாம்.
- business cards or QR codes போன்றவற்றை ஸ்கேன் செய்து Contact களை Add செய்யலாம்.
- எழுத்துகளை Optical Character Recognition (OCR) கொண்டு ஸ்கேன் செய்யலாம்.
- paintings, books, dvd, cds போன்ற எதையும் தேட முயற்சிக்கிறது.
- Sudoku puzzle-களை ஸ்கேன் செய்தால் விடையை தருகிறது.

Screen Shots:










Video: 

4 comments

பயனுள்ள தகவல் சகோ!

Reply

பல முறை இந்த அப்ளிகேசன் எனக்கு பயன்பட்டிருக்கிறது. நன்றி சகோ.!

Reply

நானும் முயற்சிக்கிறேன்...
ஆனா, அதுக்கு முதல்ல ஆன்டிராய்டு மொபைல் வேண்டுமோ?

அதுக்கு ஏதாச்சும் (தரவிறக்க) லிங்க் இருந்தா கொடுங்க பாஸ்! :D

Reply

Nalla Pathivu Nanbare adsense vaangiten come in my blog. http://kavithaigaltamilil.blogspot.in

Reply

Post a Comment