Browser Cookies-களை Clear செய்வது எப்படி?

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் Browser Cookies என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ? என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் அவற்றின் அடிப்படை தகவல்களை சொல்லி இருந்தேன். இன்றைய பதிவில் தேவை இல்லை என்றால் எப்படி அவற்றை Clear செய்வது என்று பார்ப்போம். 


Google Chrome 

Browser- ஐ ஓபன் செய்து Settings >> Show advanced settings… >> Content Settings >> Cookies பகுதிக்கு வரவும். 
இதில் Block third-party cookies and site data என்பதை கிளிக் செய்து விட்டால், third-party cookies Block ஆகி விடும். 
இப்போது இதில் Manage Exceptions என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்தின் முகவரி கொடுத்து அந்த தளத்தின் Cookies-களை Allow, Block, Clear On Exit என்று Set செய்யலாம். 
அடுத்து All Cookies and Site Data என்பதை கிளிக் செய்யவும். இதில் உங்கள் ப்ரௌசெரில் உள்ள Cookies எல்லாமே வரும். அவற்றை Remove All கொடுத்து நீக்கி விடலாம். 

Firefox 

Browser- ஐ ஓபன் செய்து Tools >> Options >> Privacy >> Remove Individual Cookies பகுதிக்கு வரவும். இப்போது கீழே உள்ளது போல படம் வரும். 
இதில் Remove Cookies என்பது குறிப்பிட்ட தளத்தை தெரிவு செய்து அந்த தளத்தின் Cookies களை நீக்க, Remove All Cookies மூலம் எல்லாவற்றையும் நீக்கி விடலாம். 

Internet Explorer

Browser- ஐ ஓபன் செய்து Tools >> Internet Option >> Privacy  பகுதிக்கு வரவும். இப்போது கீழே உள்ளது போல படம் வரும். 
இதில் நகர்த்தும் வசதி கொண்டு Cookies – களை கட்டுப்படுத்த முடியும். Sites என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்திற்கு Cookies சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை செய்யலாம். 

Opera

Browser- ஐ ஓபன் செய்து Settings > Preferences > Advanced > Cookies  பகுதிக்கு வரவும். இப்போது கீழே உள்ளது போல படம் வரும். 
இதில் Manage Cookies என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட Cookies-களை நீக்க முடியும். 
 - பிரபு கிருஷ்ணா
  • http://www.blogger.com/profile/13015853424438092418 koodal bala

    Useful Post

  • http://www.blogger.com/profile/00066990886259137382 Tamil nesan

    மிக்க நன்றி நண்பா…

  • http://www.blogger.com/profile/03500057590054163808 பால கணேஷ்

    மிக எளிமையான புரியும் படியாக விளக்கியிருக்கிறீர்கள். நான் இதைப் பயன்படுத்தினேன். மிக்க நன்றி நண்பரே.

  • http://www.blogger.com/profile/05232943809680695408 திண்டுக்கல் தனபாலன்

    (Google Chrome)

    Settings–>Show advanced settings–>Content Settings–>Cookies–>Block third-party cookies and site data–>Click

    இவையெல்லாம் செய்து விட்டேன்…

    பிறகு வந்து உங்களுக்கு கருத்துரை சொல்ல வந்தால் முடியவில்லை… ஏன்…? என்று தெரியவில்லை… உங்கள் தளத்தை Refresh செய்யாதலால் இப்படியா…?

    Comment as-ல் திண்டுக்கல் தனபாலன் (Google) வரவில்லை…
    Google Account என்று வருகிறது…

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      இவ்வாறு செய்வதால் நீங்கள் log-in செய்த அனைத்து கணக்குகளும் Log-out ஆகும் ஆகிவிடும். மீண்டும் Sign-in செய்தால் போதும்.

  • http://www.blogger.com/profile/00895343797588608185 Uzhavan Raja

    அனைவருக்கும் பயன்படும் தகவல்..நன்றி நண்பா..

  • http://www.blogger.com/profile/00866928602375270563 வரலாற்று சுவடுகள்

    //
    இதில் Block third-party cookies and site data என்பதை கிளிக் செய்து விட்டால், third-party cookies Block ஆகி விடும்.
    //

    block செய்தால் அதன் பின் இணையம் திறப்பததிர்க்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வது போல் தெரிகிறதே பிரபு!

  • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

    @ வரலாற்று சுவடுகள்

    நீங்கள் பார்க்கும் தளத்தில் விளம்பரம் ஏதேனும் இருந்தால் இது மாதிரி ஆகலாம். அத்தோடு அதை பிளாக் செய்ய வேண்டியது கட்டாயமான ஒன்று அல்ல. என்ன கூகுள் உங்களை பின் தொடரும் அவ்வளவே :-)