உங்கள் கூகுள் கணக்கின் தகவல்களை டவுன்லோட் செய்வது எப்படி?

கிட்டத்தட்ட இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார். சர்ச், மெயில், சோசியல் நெட்வொர்க் என்று பட்டியல் நீளும் இதில் கட்டாயம் ஒன்றை பயன்படுத்துகிறோம். இதில் சிலவற்றில் நம் தகவல்களை  நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். எப்படி என்று பார்ப்போம். 

இதில் நீங்கள் கீழ்கண்ட கணக்குகளில் இருந்து உங்கள் தகவல்களை ஒரே இடத்தில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 
  • Plus One’s
  • Buzz Posts
  • Google Plus Circles [ஒரு ஈமெயில் ஐடியில் இருந்து மற்றொன்றுக்கு மொத்தமாய் நண்பர்களை Move செய்தல்]
  • Contacts
  • Google Drive Data’s
  • Picasa Web Albums
  • Profile
  • Steam [கூகுள் பிளஸ் பதிவுகள்] 
இவற்றில் எதை வேண்டும் என்றாலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதை கூகுள் Take Away, Take Out, Data Liberation என்ற பெயர்களில் வழங்குகிறது. 
முதலில் Google Takeaway என்ற முகவரிக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் Log-in செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே Log-in ஆகி இருந்தால் கீழே உள்ளது போல வரும். 
இப்போது Choose Services பகுதிக்கு சென்று உங்களுக்கு எதன் தகவல்கள் வேண்டுமோ அதை கிளிக் செய்யுங்கள்.  
இப்போது உங்கள் எல்லாம் கணக்கிடப்பட்டு மொத்த File, Size இரண்டும் காட்டப்படும். 
இப்போது Download செய்து கொள்வதானால் செய்து கொள்ளலாம். ஏதேனும் Format- களை மாற்ற வேண்டும் என்றால் Configure என்பதை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். 
முடித்து Create Archive என்று கொடுத்தால் டவுன்லோட் ஆகி விடும். 
நேரடியாக டவுன்லோட் செய்ய முடிந்தவை இவை மட்டும் தான், மற்ற கூகுள் கணக்குகளின் தகவல்களையும் நம்மால் டவுன்லோட் செய்ய முடியும். அதற்கான வழிகளை இன்னொரு பதிவில் காண்போம். 
- பிரபு கிருஷ்ணா
  • http://www.blogger.com/profile/00866928602375270563 வரலாற்று சுவடுகள்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  • http://www.blogger.com/profile/05232943809680695408 திண்டுக்கல் தனபாலன்

    பயன் தரும் பகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…

  • http://www.blogger.com/profile/07286829313885219000 Abdul Basith

    நல்ல தகவல் சகோ.!

  • http://www.blogger.com/profile/17557225781662548519 Ravi Xavier

    மிக்க நன்றி நல்ல தகவல்.

  • http://www.blogger.com/profile/00895343797588608185 Uzhavan Raja

    பயனுள்ள தகவல்..நன்றி நண்பா..

  • http://www.blogger.com/profile/06280783374875733331 Gnanam Sekar

    பயனுள்ள தகவல் , நன்றி நண்பா