Blogger- இல் Contact Form வைப்பது எப்படி?

நமது வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வலைப்பூவின் மூலம் தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன. பலர் தமது ப்ரொஃபைலில் தங்கள் ஈமெயில் ஐடி தந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஸ்பாம் மெயில்கள் வருவது தவிர்க்க முடியாது. இன்னும் சிலர் கமெண்ட் மாடரேசன் வைத்திருக்கும் நிலையில், ஏதேனும் சொல்ல விரும்பினால் அதில் சொல்லி, இதை வெளியிட வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர். அவ்வாறு வைக்காத போது தொடர்பு கொள்வது ஒரு பிரச்சினை தான்.

அதாவது, உங்கள் ஈமெயில் ஐடி தெரியாமலே உங்களுக்கு அடுத்தவர் ஈமெயில் அனுப்பலாம். இந்த வசதியை www.emailmeform.com இலவசமாகத் தருகிறது. இத்தளத்துக்குச் சென்று நீங்கள் ஒரு கணக்கு துவங்கிக் கொண்டு, சில விவரங்களை அளித்து உங்கள் EMAIL FORM எப்படித் தோன்ற வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும். 
எப்படி என்று பார்ப்போம், 
அதில் கணக்கை தொடங்கிய உடன் Add Form என்பதை தெரிவு செய்து Templates பகுதிக்கு வரவும். அதில் Contact From என்பதை தெரிவு செய்யுங்கள். அதில் Customize என்பதை தெரிவு செய்யுங்கள். 
இதில் மூன்று பகுதிகள் இருக்கும். 
Add Field – இதில் தேவையான பகுதியை கிளிக் செய்து தெரிவு செய்து கொள்ளலாம். இதில் File, email, Dropdown என பலவற்றை சேர்க்கலாம். 
Field Settings – இங்கே பெயர், எழுத்துரு மாற்றம் போன்றவற்றை செய்யலாம். உதாரணமாக Name என்று உள்ளதை பெயர் என்று மாற்ற விரும்பினால் அதை செய்யும் பகுதி. 
Form Settings – இதில் Form Title, Description, Alignment போன்றவற்றை மாற்றலாம். இதில் உள்ள Confirmation Options பகுதியில் Success Message என்பதை கொடுத்து விட்டு  Open in a new window / tab என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
எல்லாம் முடிந்த பின் Save Form கொடுத்து Save செய்து விடுங்கள். 
இப்போது My Forms பகுதிக்கு நீங்கள் உருவாக்கிய Form-இல் Code என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். 
இப்போது வரும் பகுதியில் HTML Only என்பதை கிளிக் செய்து வரும் கோடிங்கை உங்கள் ப்ளாக்கில் Page/Post – ல் HTML பகுதியில் Paste செய்து விடுங்கள். 
அவ்வளவு தான் இனி அழகான Form உங்கள் வலைப்பூவில் இருக்கும். உங்கள் வாசகர்கள் எளிதில் உங்களை தொடர்பு கொள்ள முடியும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. 
* நீங்கள் emailmeform தளத்தில் எந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்து உள்ளீர்களோ அதற்கு தான் இந்த மின்னஞ்சல்கள் வரும். 
About The Author: 
 
சகோதரி  சுமஜ்லா ‘என்’ எழுத்து இகழேல் என்ற தளத்தில் கவிதை, கதை என பலவகையான பதிவுகளை பகிர்ந்து வருகிறார். veethi.com என்ற தளத்தில் SEO Consultant ஆக செயல்படுகிறார்.

நீங்களும் கெஸ்ட் போஸ்ட் எழுத - கற்போமில் பதிவு எழுத விருப்பமா?

www.veethi.com நடத்தும் VEETHI VISUAL CONTEST புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.

 Veethi Visual Contest

போட்டி பற்றிய அறிவிப்பு இங்கே: Veethi Visual Contest

  • http://www.blogger.com/profile/00866928602375270563 வரலாற்று சுவடுகள்

    உபயோகமான அருமையான பதிவு!

    confirmation message ஐ எப்பிடி edit பண்ணுறதுன்னு ரொம்ப நாலா தெரியாம இருந்தது! இந்த பதிவின் வாயிலாக அறிந்துகொண்டேன்! மிக்க நன்றி!

  • இனறையவானம் . அதமிழ்ச்செல்வன்

    நல்ல பதிவு,உங்கள் வலைபக்கத்திலிருந்து நிறைய கற்க முடிந்தது.நன்றி
    இனறையவானம் . அதமிழ்ச்செல்வன்
    indrayavanam blogspot.in

  • இனறையவானம் . அதமிழ்ச்செல்வன்

    linkwithin. எனது பதிவில் இணைத்துள்ளேன் 200 பதிவுகளுக்கு மேல் உள்ள எனது வலைபக்கத்தில் 3 பதிவுகக்கு மேல் தெரியவில்லை இதை எப்படி சரிசெய்வது
    இனறையவானம் . அதமிழ்ச்செல்வன்
    indrayavanam blogspot.in

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      Width: 3 Stories என்று உள்ளதை 5 என்று வைக்கவும்.

  • http://www.blogger.com/profile/05232943809680695408 திண்டுக்கல் தனபாலன்

    மிக்க நன்றி நண்பரே… (TM 4)

  • http://www.blogger.com/profile/02595564915198017281 அம்பாளடியாள்

    பயனுள்ள இப் பகிர்வுக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .

  • http://www.blogger.com/profile/07286829313885219000 Abdul Basith

    பயனுள்ள தகவல்.

  • http://www.blogger.com/profile/02070509755733925596 Arif motorstar

    :-)

  • http://www.blogger.com/profile/08875676041631246184 Min malar

    உபயோகமான பதிவு. நன்றி!

  • http://www.blogger.com/profile/11010429960282584179 ஹாரி பாட்டர்

    நல்ல தகவல் நண்பா

  • http://www.blogger.com/profile/00895343797588608185 Uzhavan Raja

    நல்ல அருமையான பதிவு..நண்பா..

  • http://www.blogger.com/profile/10314133526907994111 Rana.Velubhaarathi

    நண்பரே எண் வலைதளத்தில் தமிழில் சரியாக தெறியவில்லை என்ன செய்ய ப்ளீளீளீளீளீளீளீளீஸ்……………

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      இது நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர் பிரச்சினையாக இருக்கும். வேறு ஒன்றை பயன்படுத்துங்கள்.