Blogger : Mobile View என்றால் என்ன? அது ஏன் அவசியம் ? | கற்போம்

Blogger : Mobile View என்றால் என்ன? அது ஏன் அவசியம் ?


வலைப்பூ வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சந்தேகங்களில் இதுவும் ஒன்று. Template பக்கத்தில் Mobile View என்று ஒன்று உள்ளதே, அதை என்ன செய்ய வேண்டும் என நினைப்பதுண்டு அதைப் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காண்போம். 

Smartphone, Tablet என்று பெருகிவிட்ட இன்றைய நாளில் நிறைய பேர் நம் வலைப்பூவை அவைகளில் படிக்க ஆரம்பித்து விட்டனர். நாம் கணினியில் படிக்கும்படி நமது Template-ஐ வடிவமைத்து இருப்போம், ஆனால் அதில் நிறைய  மொபைலில் படிக்க/பார்க்க முடியாது, எனவே மொபைல் போனில் இருந்து படிப்பவர்களுக்கு நம் வலைப்பூ எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். 

பழைய பிளாக்கர் இன்டெர்பேஸ் என்றால் Settings >> email & mobile என்பதற்கு செல்லுங்கள்.

புதிய பிளாக்கர் இன்டெர்பேஸ் : Blogger >> Template இதில் சென்றால் உங்களுக்கு "Mobile" என்பது இருக்கும்.  அதில் கீழே உள்ளது போல இருந்தால் உங்கள் வலைப்பூவை மொபைல் போனில் படிக்க முடியாது. 


இப்போது கீழே உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள்.  வரும் புதிய விண்டோவில் "Yes. Show mobile template on mobile devices." என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது கீழே உள்ளது போல வரும். 


இதில் Default என்று உள்ளதை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். அதில் ஏற்கனவே உள்ள 7 வகையான Template-களை பயன்படுத்த முடியும். கடைசியாக உள்ள Custom என்பது நீங்கள் பிளாக்கரில் வைத்து இருக்கும் Template ஆகும். 



குறிப்பிட்ட ஒன்றை தெரிவு செய்து Prview என்பதன் மீது கிளிக் செய்தால் குட்டி விண்டோவில் உங்கள் வலைப்பூ மொபைலில் எப்படி இருக்கும் என்பது காட்டப்படும். 

வேறு தளத்தில் இருந்து Download செய்த Template-களை பயன்படுத்தும் நண்பர்கள் Custom என்பதை தெரிவு செய்யக் கூடாது. அந்த Template-கள் மொபைலில் படிக்கும் போது சரியாக தெரியாது, படிக்க முடியாது. இதனால் மொபைலில் படிக்க விரும்பும் வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடலாம். 

ஏற்கனவே பிளாக்கரில் உள்ள Template-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதே பெயருள்ள Template-ஐ நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம், அல்லது Custom என்பதை தெரிவு செய்து கொள்ளலாம். 

மொபைலில் படிக்கும் போது Sidebar எதுவும் தெரியாது. ஆனால் உங்கள் பதிவு அவர்களுக்கு தெளிவாய் படிக்கும் வண்ணம் இருக்கும். 

கற்போம் தளம் Android Mobile-லில் 
  

              
    Post Title
                  Photobucket
                          Post

இதை மேலே சொன்ன Preview என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணினியிலேயே நீங்கள் பார்க்க முடியும். மொபைல்களில் உங்கள் வலைப்பூ எப்படி தெரிகிறது என்று இன்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



- பிரபு கிருஷ்ணா

15 comments

அவசியமான பதிவு சகோ. மொபைலில் limited இணைய இணைப்பு பயன்படுத்தும் போது மொபைல் டெம்ப்ளேட் இல்லாத தளங்களை பார்க்கும் போது data அதிகம் எடுத்துக் கொள்கிறது.

Reply

நேற்று இந்த விஷயத்தை பற்றி நீங்கள் எழுதிய பிறகு தான் செட்டிங்க்ஸ்ல் போய் கவனித்து பார்த்தேன்! அதில் இயல்பு நிலையில் இப்படி இருந்தது!

show mobile templates on mobile => default

preview தட்டி பார்த்தேன் பதிவை படிக்கும் வகையில் இருந்தது including comments! அதனால் மாற்றம் செய்யாமல் அப்பிடியே விட்டுவிட்டேன்! இது குறித்து நீங்க பதிவு எழுதுனா., அதன் பிறகு மாற்றம் கொண்டு வரலாம்னு நினைச்சேன்! இதுதான் பெஸ்ட்ங்றபோது அப்பிடியே இருக்கட்டும்னு விட்டுட்டேன்!

வேண்டுகோளை ஏற்று மிகவும் விரிவாக எழுதியமைக்கு ரொம்பவும் நன்றி நண்பா! bloggers அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம் இது!

Reply

setting => email & mobile => show mobile template => Yes. Show mobile template on mobile devices => choose mobile template => default

இப்படி இருப்பது தானே நண்பா சிறந்தது! ஒரு சந்தேகத்திற்க்காக கேட்டேன்!

Reply

மொபைல் டெம்ப்லேட்டில் ஒரு பிரச்சினை இருக்கிறது.மொபைல் டெம்ப்லேட் வைத்திருந்தால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் வாக்களிக்க முடியாது.

Reply

சிறப்பான அவசியமான பகிர்வு

Reply

நீங்கள் மற்ற டெம்ப்லேட் பயன்படுத்தினால் உங்கள் வாசகரால் உங்கள் பதிவை படிக்கவே முடியாது. ரொம்ப கடினமான வேலை அது.

Reply

நண்பர் வரலாற்று சுவடுகள் சொன்னது போல் நானும் check செய்து பார்த்தேன்... சரியாக தான் உள்ளது... நன்றி... (TM 7)

Reply

தங்கள் தளத்தின் MObile View நன்றாக தெரியவில்லை Simple template-ஐ தேர்வு செய்யவும் .

http://www.karpom.com/2012/08/blogger-mobile-view.html?m=1

Reply

thanks for sharing:

Visit & Join us:
LATEST MOBILE STORE

Latest Mobile Features, Spec, Price, Games, All Applications and Downloads...

Reply

சிறப்பான பயனுள்ள தகவல்! பகிர்வுக்கு நன்றி!
இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

Reply

அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - பயன் படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

நன்றி நண்பா...

Reply

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021

Reply

Good News பிரபு....

Reply

Post a Comment