Outlook மின்னஞ்சலின் அடிப்படைகளை தெரிந்துகொள்வோம் | கற்போம்

Outlook மின்னஞ்சலின் அடிப்படைகளை தெரிந்துகொள்வோம்


Hotmail மூடு விழா கண்ட பிறகு, அதுனுடைய புதல்வனான Outlook இப்பொழுது மின்னஞ்சல் சேவையை வழங்கி வருகிறது!  Outlook மின்னஞ்சலை பொறுத்தவரை இதன் தோற்றம் ஜி மெயில் மற்றும் யாஹூ மெயில் சேவையை பயன்படுத்ததி போரடித்து போனவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது என்று கூட சொல்லலாம்! தனிப்பட்ட முறையில் இந்த  Outlook  மின்னஞ்சல் சேவை எனக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது :)

சரி வாருங்கள் Outlook Mail இன் அடிப்படைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
மைக்ரோசாப்ட் இந்த சேவையை முடிந்த அளவு எளிமையாக வடிவமைத்துள்ளனர். 

  • நீங்கள் உங்கள் inbox இல் மின்னஞ்சல் அனுப்பியவருக்கும் subject க்கும் இடையே மௌஸை கொண்டு சென்றீர்கள் என்றால் உங்களுக்கு சில ஐகான் தோன்றும், கீழ்கண்ட படத்தை பாருங்கள்.


இந்த ஐகான்கள் நீங்கள் உடனடியாக அந்த மெயிலை நீக்குவதற்கும்,  பின்பு படிக்கலாம் என ஒதுக்குவதற்கும் வழிவகை செய்கிறது.

  • அடுத்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியவரின் மீது  மௌஸை கொண்டு சென்றீர்கள் என்றால் கீழ்கண்ட திரை ஒன்று தோன்றும்.


இதன் மூலம் அவருக்கு reply  செய்வது, அல்லது அந்த மெயிலை நீக்குவது, அல்லது வேறு ஒரு Folder இல் சேமிப்பது போன்றவற்றை செய்யலாம். சரி Folder இல் சேமிப்பது  எப்படி ? பாப்போம்.

  • Outlook ஐகானுக்கு கீழே உள்ள Folder என்ற பகுதியில் சென்று New Folder ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள்.



  • பின்பு உங்களது inbox இல் உள்ள மெயில்களை இழுத்து (Drag/Drop) folder இல் போடலாம். அல்லது mark செய்வதன் மூலம் உங்களுக்கு Move என்ற ஆப்சன் மெயில் பக்கத்தின் மேலே காண கிடைக்கும். அதன் மூலமும் Moove செய்யலாம்.



  • நான் பெர்சனல் என்ற Folder உருவாக்கி உள்ளேன் இதில் சில மெயில்களை மூவ் செய்துள்ளேன். இப்படி தனி தனி Folder இல் போட்டு வைப்பதன் மூலம் உங்கள் வேலை எளிதாகிறது.


இப்படி இன்னும் நிறைய வசதிகள் Outlook இல் இருக்கிறது. புதியதாக ஒன்றும் இல்லை தான், எனினும் எளிமையாக இருக்கிறது.  Outlook ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம் வரும் பதிவுகளில்.

சூர்யபிரகாஷ்.K.P

20 comments

எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கமான பதிவு நண்பரே!

நமக்குத்தான் gmail என்ற பெட்டிக்கடையை தவிர வேறெங்கும் கிளைகள்... ச்சே.. அக்கௌன்ட் இல்லை :)

Reply

//நமக்குத்தான் gmail என்ற பெட்டிக்கடையை தவிர வேறெங்கும் கிளைகள்... ச்சே.. அக்கௌன்ட் இல்லை :)//

ஹா ஹா,

நன்றி நண்பரே

Reply

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி .தொடர வாழ்த்துக்கள் .

Reply

விளக்கமாக தெரிந்து கொண்டோம்...
தொடருங்கள்...

நன்றி…
(த.ம. 3)

Reply

தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சகோ

Reply

நிச்சயமாக,

நன்றி நண்பரே

Reply

தங்களின் பதிவு பயனுள்ள தாக உள்ளது ...

நன்றி சூர்யா சார்

Reply

அவுட்லுக் பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாகவே இருக்கின்றது. பகிர்விற்கு நன்றி சகோ!

Reply

விளக்கமான பதிவு நிறைய தெரிந்துகொண்டேன்.. நன்றி நண்பரே....

Reply

ஏற்கனவே வைத்துள்ள லைவ் ஐடியை பயன்படுத்தி உள்ளே சென்று பார்த்தேன். நன்றாக உள்ளது

Reply

நன்றி சகோ

Reply

தங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே

Reply

நன்றி நண்பரே

Reply

நன்றி நண்பரே

Reply

எனக்கும் பிடித்துள்ளது. ஆனால் ஜிமெயிலை விட்டுக் கொடுக்க மனமில்லை.

:D :D :D

Reply

ஹா ஹா,

நன்றி நண்பரே

Reply

அன்பின் சூரியபிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - ஜிமெயிலில் உள்ள வசதிகள் தான் - பயன் படுத்திப் பார்ப்போம் - நல்வாழ்த்துகள் - நடபுடன் சீனா

Reply

நல்லாத் தான் இருக்கும் போல.. ஆனா, இந்த மைக்ரோசாப்ட் காரன நம்ப முடியாதே!!

Reply

நன்றி அய்யா

Reply

ஹா ஹா, சும்மா யூஸ் பண்ணி பாருங்க பாஸ்.

Reply

Post a Comment