August 2012 | கற்போம்

Browser Cookies-களை Clear செய்வது எப்படி?

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் Browser Cookies என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ? என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் அவற்றின் அடிப்படை தகவல்களை சொல்லி இருந்தேன். இன்றைய பதிவில் தேவை இல்லை என்றால் எப்படி அவற்றை Clear செய்வது என்று பார்ப்போம். 

Google Products and Services - இதெல்லாம் கூகுள் ஏரியா


கூகுள் இன்று இணையத்தின் தூண் என்றால் அது மிகையாகாது. இணையத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது வேர் பரப்பி நிற்கும் மிகப் பெரிய ஆலமரம் தான் அது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஜிமெயில், கூகுள் பிளஸ், பிளாக்கர், அட்சென்ஸ் என்ற பலவற்றை பற்றி தெரியும். இன்னும் தெரியாத பல உள்ளன. என்னென்ன என்று பார்ப்போம். 

Google search  


கூகுள் தனது கடையை விரித்த போது விற்ற முதல் பொருள் இதுதான். இன்றுவரை இதில் அது தான் கிங் என்றும் நிரூபித்து வருகிறது. சில சமயங்களில் Google.com, google.co.in என்று பார்த்து இருப்பீர்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டொமைனில் இயங்கி வரும் இது மொத்தம் 198 டொமைன்களில் உள்ளது. 

வெறும் சர்ச் என்ற வார்த்தையோடு நின்று விடாமல் இதில் பல வசதிகளை வழங்குவது தான் இதன் சிறப்பு. 

  • Accessible Search - பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு
  • Google Alerts  - நீங்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை தேட விரும்பினால், அதன் தற்போதைய தேடுதல் முடிவுகளை மின்னஞ்சலில் பெற. 
  • Blog search - வலைப்பூக்களில் தேடி தரும். 
  • Google Books - புத்தகங்களை தேட. 
  • Google Custom Search - குறிப்பிட்ட தளங்களில் இருந்து தேடுதல் செய்ய. 
  • Google Image Search - படங்களை தேட
  • Google News  - செய்திகளை தேட/ அறிந்து கொள்ள. 
  • Knowledge Graph   - பல தேடுதல்களில் முக்கிய தகவல்களை முகப்பிலேயே காட்டும் வசதி. 
  • Google Doodle - பலரை, பல விசயங்களை நினைவு கூறும் கூகுள் நினைவகம். 
இது மட்டும் இன்றி Experimental Search, Google Finance, Google Groups, Hotpot, Language Tools, Movies, Google News archive, Google Patent Search , Google Schemer, Google Scholar, Google Shopping, SMS, Suggest, Google Video (Closed), Voice Local Search , Web History போன்ற அனைத்தும் இதன் சர்ச் டூல்ஸ். 

Advertising


விளம்பரங்கள் தான் கூகுள்க்கு பிரியமான ஒன்று. அதற்காக நிறைய உழைக்கிறது. ;-) 

  • AdMob - மொபைல் வழி விளம்பரங்கள். 
  • Google AdSense - தளத்துக்கு சம்பந்தமான விளம்பரங்களினை காட்டும் தயாரிப்பு. 
  • Google AdWords - கூகுள் மூலம் விளம்பரம் செய்ய. 
  • Adwords Express - லோக்கல் AdWords என்று சொல்லப்படும் இது பெரும்பாலும் இடம் சார்ந்த விளம்பரங்களுக்கு. (ஹோட்டல், தியேட்டர் போன்று)
  • DoubleClick - Publisher, Advertiser, User என எல்லோரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வசதி. 
இதில் DoubleClick for Publishers by Google, Google Grants, TV Ads, Google Website Optimizer, Meebo போன்றவையும் அடக்கம். 

Communication and Publishing


இங்கே தான் நாம பயன்படுத்தும் நிறைய வரும். 

  • Gmail - கூகுள் வழங்கும் மின்னஞ்சல் சேவை. 
  • FeedBurner - News Feed உருவாக்க உதவும் வசதி. 
  • YouTube - காணொளிகளை காண. 
  • Blogger - கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை. 
  • Google Docs - Word, Excel, Presentation போன்றவற்றை ஆன்லைன் மூலம் செய்ய. 
  • Google Drive - ஆன்லைன் storage வசதி. 
  • Google+ - கூகுளின் சமூக வலைத்தளம். 
  • Orkut  - காணாமல் போன சமூக வலைத்தளம். 
  • Google Buzz - தமிழர்களின் விருப்பான இடமாக இருந்தது. இப்போது இல்லை
  • Picasa Web Albums - படங்களை பகிர உதவும் தளம். 
  • Google Sites - குருந்தளம் என்று சொல்லலாம். 
  • SMS Channels  -பல வகைகளில் குறுஞ்செய்திகளை பெற உதவும் தளம். 
  • Google Apps  - சொந்த டொமைன் மூலம் கூகுளின் பல வசதிகளை பயன்படுத்தும் வசதி. 
இதில் Google 3D Warehouse, Google Bookmarks, Google Business Solutions, Google Calendar, Google Friend Connect (Closed), iGoogle (Closed), Marratech e-Meeting, Panoramio, Picnik (Closed), Google profile, Google Reader, Speak To Tweet, Google Voice (USA), Web Fonts போன்றவையும் உள்ளன.

Development 


  • Webmaster Tools - உங்கள் Website கூகுளில் எப்படி உள்ளது என்பது பற்றிய தகவல்களுக்கு. 
  • Google Page speed - உங்கள் தளம் லோட் ஆகும் நேரம், மார்க், மற்றும் பல தகவல்களை தரும். 
இதில் AngularJS, Google App Engine, Google Closure Tools, Google Code, Dart, Google Go, OpenSocial, Google Swiffy, Google Web Toolkit போன்றவையும் உள்ளன. 

Map


கீழே உள்ள அனைத்தும் Map என்ற ஒன்றுக்காக உள்ளவை.
  • Google Maps - இடங்களை தேட. 
  • Google Maps Coordinate 
  • Google Mars
  • Google Moon
  • Google Sky 
  • Google Transit 
  • Google BodyG
  • Google Map Maker 
  • Google Building Maker

Statistics 


புள்ளியியல் என்று சொல்வோமா, தகவல்களை திரட்டி, அதை அலசி தருவது. அந்த வசதிகள் தான் கீழே உள்ளவை. 
  • Google Analytics - தளங்களின் Traffic தகவல்களை சில உபரிகளுடன் சேர்த்து தரும். 
இதில் Correlate, Google Fusion Tables, Google Insights for Search, Google Refine, Trendalyzer, Google Trends, Zeitgeist. 

Operating systems


ஆம் இயங்கு தளங்களிலும் கால் பதித்துள்ளது கூகுள். 

  • Android - Samrtphone Operating System
  • Google Chrome OS - லினக்சை அடிப்படையாக கொண்டது. முழுக்க முழுக்க இணையம் சார்ந்து இயங்கும். 
இதில் Google TV யும் உள்ளடக்கம். 

Software / Appications

இவை கணினிகளில் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டவை. 
  • AdWords Editor 
  • Google Chrome 
  • Google Earth 
  • Gmail Notifier
  • IME
  • Google Japanese Input 
  • Picasa 
  • Picasa Web Albums Uploader
  • Google Pinyin
  • Quick Search Box
  • Wireless access 
  • SketchUp
  • Google Toolbar
  • Visigami

Mobile applications


மேலே உள்ள பல வசதிகளை மொபைல் மூலமும் பயன்ப்டுத்தம் முடியும். Youtube, Gmail, Calender,  என பல. 

Hardware

இவை கூகுள் உருவாக்கி இருக்கும் சாதனங்கள்

  • Motorola Mobility - Motorola நிறுவனம். 
  • Nexus One - கூகுள் போன்
  • Nexus S -  கூகுள் போன்
  • Galaxy Nexus -  கூகுள் போன்
  • Project Glass - ஒரு கண்ணாடி இணையத்தோடு நம்மை ஒருங்கிணைக்க
  • Nexus 7 - Tablet Computer
Google Mini, Google Search Appliance, Nexus Q போன்றவையும் இதில் உள்ளடக்கம். 

Services


இதில் Google Crisis Response, Google Fiber, Google Public DNS போன்றவை இருக்கின்றன. 

இதில் பலவற்றில் கூகுள் தோல்வி அடைந்து அவற்றின் சேவைகளை நிறுத்தி இருக்கிறது. Google Buzz, Friend connect போன்றவை போல பல. அவற்றை இன்னொரு பதிவில் காண்போம். 

ஆனால் கூகுளிடம் இருந்து நான் கற்றுகொண்ட ஒன்று, தோல்வி தான் வெற்றிக்கு புதிய பாதையை தரும். 

- பிரபு கிருஷ்ணா 

உங்கள் கூகுள் கணக்கின் தகவல்களை டவுன்லோட் செய்வது எப்படி?

கிட்டத்தட்ட இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார். சர்ச், மெயில், சோசியல் நெட்வொர்க் என்று பட்டியல் நீளும் இதில் கட்டாயம் ஒன்றை பயன்படுத்துகிறோம். இதில் சிலவற்றில் நம் தகவல்களை  நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். எப்படி என்று பார்ப்போம். 

பேஸ்புக்கில் மொபைல் எண்கள் பத்திரம்


இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பலரும் அதில் தமது பல தகவல்களை பகிர்ந்து வருகிறோம். குறிப்பாக மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண். இதில் அலைபேசி எண்ணை பகிர்வதில் பல பிரச்சினைகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதை பதிவில் காண்போம். 

எனது Timeline க்கு வந்தால் என் நண்பர் எனது அலைபேசி எண்ணை பார்க்க முடியும். 

இதே போல நீங்களும் பகிர்ந்து இருக்கலாம். கடந்த வாரத்தில் ஒரு நாள் நண்பர் Bladepedia கார்த்திக் அவர்களின் சாட் செய்யும் போது அவரது அலைபேசி எண் கேட்டேன், அவர் தந்த உடன் SMS அனுப்ப அவரது எண்ணில் முதல் நான்கை Type செய்யும் போதே அவரது முழு பெயருடன் அவரது எண் அலைபேசியில் வந்து விட்டது. ஆனால் அவரது அலைபேசி எண்ணை அதுவரை நான் Save செய்யவில்லை.

நான் பயன்படுத்துவது Android Mobile. எனது பேஸ்புக், ஜிமெயில் நண்பர்களின் கணக்குகளை இதில் நான் Sync செய்துள்ளேன். இதன் மூலம் எனது தொடர்பில் இருக்கும் அனைவரின் மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண்(கொடுத்து இருந்தால்) எனக்கு வந்து விடும்.   

பின்னர் இதன் காரணத்தை தேடிய போது அவரது கூகுள் கணக்கில் அவரது அலைபேசி எண் இல்லை. ஆனால் பேஸ்புக் பக்கத்தில் இருந்தது. இதை உறுதி செய்ய இன்னும் சிலரின் Profile சென்று எனது அலைபேசியில் சோதித்து பார்த்தேன். 



இதே போல பலர் எண்களை காண முடிந்தது. இதில் சிலர் எண்கள் என்னிடம் உள்ளபோதும் பலரின் எண்கள் எனக்கு புதியவை. 

இதே போல நீங்கள் கொடுத்து இருந்து உங்கள் நண்பர் Android மூலம் Sync செய்தால் உங்கள் அலைபேசி எண்ணை அவர் காண முடியும். 

நம்மில் பலர் முகம் தெரியாத பலரையும் நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறோம்.  இது நமக்கு பல பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். குறிப்பாக பெண்கள்.  

எனவே இதில் Privacy வேண்டும் என்று நினைப்பவர்கள் முதல் வேலையாக உங்கள் Time Line க்கு சென்று உங்கள் Profile படத்திற்கு கீழே உள்ள About என்பதை கிளிக் செய்து Contact Info பகுதியில் இருந்து உங்கள் அலைபேசி எண்ணை நீக்கி விடுங்கள், அல்லது only Me என்று தெரிவு செய்து விடுங்கள். 



- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கில் ஒரு Page உருவாக்குவது எப்படி?


மிக பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை பகிர, உங்கள் திறமைகளை ரசிக்கும் நபர்களை ஒருங்கிணைக்க உதவும் ஒரு வசதி தான் Page. இதன் மூலம் உங்களை,உங்கள் படைப்புகளை, உங்கள் தொழிலை பிரபலப்படுத்த முடியும். அதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். 

1. முதலில் இந்த பக்கத்துக்கு செல்லுங்கள் - Create a Page

இதில் உங்கள் பேஜ் என்ன மாதிரியான ஒன்று என்று நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். எது என்று தெரியாவிடில் ஏதேனும் ஒன்றை 'இங்கி பிங்கி பாங்கி' போட்டு தெரிவு செய்யுங்கள். பின்னர் மாற்றிக் கொள்ளலாம்.

2. ஒன்றை தெரிவு செய்த பின் அதற்கு தலைப்பு கொடுங்கள். அடுத்த பக்கத்தில் உங்கள் Page க்கு Profile Picture ஒன்றை Uplaod செய்யுங்கள். [இப்போது இல்லை என்றால் Skip கொடுத்து விடலாம்], அடுத்து About பகுதியில், இந்த பக்கம் குறித்த விவரமும், உங்கள் website முகவரியும் தரவும். 

3. அவ்வளவு தான் உங்கள் Page Ready ஆகி விட்டது. இப்போது முதல் ஆளாக நீங்கள் Like செய்து விடுங்கள். அடுத்து Invite Friends மூலம் உங்கள் நண்பர்களை இந்த Page- ஐ லைக் செய்யும்படி அழைக்கலாம். 

4. இனி போஸ்ட் செய்ய ஆரம்பிக்கலாம். 

5. Edit Page என்ற பக்கத்தில் சில வேலைகள் செய்ய முடியும், அவற்றை பற்றி பார்ப்போம், 


அதில் கிளிக் செய்து Manage Permissions என்பதை கிளிக் செய்யுங்கள். 


Manage Permissions:

Posting Ability - இதில் கீழே படத்தில் உள்ளது போல செய்து Save Changes என்று கொடுத்து விடுங்கள். 


இப்போது இடது பக்கம் மெனு போல உள்ளத்தில் Your Settings என்பதை கிளிக் செய்யவும். அதில்  "Send notifications to yourname@mail.com when people post to, comment on, or message your page." என்பதை Unclick செய்து விடவும். 

Basic Information: 

இதில் நீங்கள் உங்கள் Page Category மாற்றம் செய்யலாம், பெயர் மாற்றம் என பல செய்யலாம். 

இதிலேயே User Name Change செய்யும் வசதியும் இருக்கும். அதில் சில வகையான Page - களுக்கு 25 Likes வந்த பிறகு தான் user Name Set செய்ய முடியும் என்று வரும். அப்படி வந்தால் அதற்கு பின் மாற்றம் செய்யவும். இதனால் உங்கள் page முகவரியை எளிதாக நண்பர்களுடன் பகிரலாம். இல்லை என்றால் நம்பர் எல்லாம் வரும். (உதாரணம் - கற்போம் பேஸ்புக் பேஜ் - கற்போம் ) 

Profile Picture:

இங்கே Profile Picture மாற்ற முடியும். 

Resources: 

இதில் எல்லாம் பயன்படும் என்றாலும் இரண்டு முக்கியம், Use social plugins - Like Box வைக்க, Link your Page to Twitter என்பது இங்கே இந்த பக்கத்தில் பகிர்வதை உங்கள் ட்விட்டர் கணக்கில் தானாய் பகிர. 

Admin Roles: 

உங்கள் பேஜ்க்கு இன்னும் நபர்களை சேர்க்க வேண்டும் என்றால் இதில் சேர்க்கலாம். இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் உங்கள் பக்கத்தை நிர்வகிக்க முடியும். 

இதில் அவரது வேலையையும் நீங்கள் குறிப்பிட முடியும், குறிப்பிட ஒன்றை தெரிவு செய்யும் போதே அதன் தகவல்கள் கீழே வருவதை கவனிக்கலாம். 


உங்கள் பேஸ்புக் Like Box - ஐ உங்கள் வலைப்பூவில் வைக்க [வலது புறம் கற்போம்க்கு உள்ளது போல]



இவை தான் ஒரு Page குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள். வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

இது குறித்து பிளாக்கர் நண்பன் அவர்களின் வீடியோ : 


- பிரபு கிருஷ்ணா

ஆப்பிள் Vs சாம்சங் - 5800 கோடி வழக்கு


நேற்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அதிர்ஷ்டமான நாள் என்று சொல்லலாம். ஆம் சாம்சங் மீது அந்த நிறுவனம் காப்புரிமை தொடர்பாக தொடர்ந்த வழக்கில்  கலிஃபோர்னியா கோர்ட் சாம்சங்க்கு 5800 கோடி அபராதம் விதித்து உள்ளது. அத்தோடு  சில மொபைல், Tablet மாடல்களை அமெரிக்காவில் விற்கவும் தடை செய்துள்ளது. 

இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் இரண்டும் தான் கொடிகட்டி பறக்கின்றன. இந்த நிலையில் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது, தான் Patent பெற்ற மாடல்கள் போன்றே சாம்சங் நிறுவனமும் வெளியிடுகிறது என புகார் தந்தது. இதில் Nexus S, Epic 4G, Galaxy S 4G, Samsung Galaxy Tab போன்றவை உள்ளடக்கம். இதில் HTC, Motorola போன்றவை மீதும் ஆப்பிள் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் சாம்சங் தான் முக்கிய எதிரி.

Style, User Interface என பல வகைகளில் ஒன்றாக உள்ளது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புகார். இதே போல பதிலுக்கு சாம்சங் நிறுவனமும் பல வழக்குகளை பதிந்தது. இரண்டும் மொத்தமாக பத்து நாடுகளில் 50 வழக்குகள் பதிந்து இருந்தன. 

பல நாடுகளில் வழக்குகள் இருக்க, நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா வில் நடந்த வழக்கின் முடிவில் தான் இந்த 5800 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க மதிப்பில்  $1,049,343,540. இந்திய மதிப்பில் 58244547728.18 கோடி.



இந்த வழக்கு தான் சாம்சங் வரலாற்றில் மிகப் பெரிய அடி. மேற்கூறிய மொபைல் மாடல்களை இனி அமெரிக்காவில் விற்க கூடாது என்று கோர்ட் கூறிவிட்டது. 

இத்தோடு இந்த வழக்கு முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் சாம்சங்க்கு அடி விழும் என்று சொல்லப்படுகிறது. 

முழுக்க முழுக்க ஆன்ட்ராய்ட் போன்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  ஆனால் இதில் கூகுள்க்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை என்பது ஆச்சர்யம் தான். ஆம் கூகுள் கடந்த வருடமே மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கி விட்டதால் அதற்கு 17,000 காப்புரிமைகள் கையில் உள்ளன. 

இதனால் சாம்சங்க்கு மாற்றாக LG, HTC, Motorola போன்றவை தங்கள் மொபைல் மாடல்களை அதிகமாக விற்பனை செய்ய ஒரு வாய்ப்பாக இது அமையும். ஆனால் இது இறுதி தீர்ப்பு அல்ல என்று சாம்சங் கூறி உள்ளது.

இதே போன்று ஆப்பிள் மற்ற நிறுவனங்கள் மீதும் வழக்குகள் தொடர்ந்து உள்ளது அவற்றின் தீர்ப்பு ஆப்பிள்க்கு சாதகமாக வந்தால் ஆப்பிள் தான் மொபைல் உலகின் தாதா என்று ஆகிவிடும்.

வழக்கின் விவரத்தை கீழே காணலாம். 



- பிரபு கிருஷ்ணா

Facebook Privacy Settings பகுதியில் நீங்கள் செய்ய வேண்டியவை


இன்று இணையத்தில் கிட்டத்தட்ட அனைவரும் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.  நம்முடைய தகவல்களை எல்லாம் பேஸ்புக்கிடம் நாம் தருகிறோம். அத்தகைய பேஸ்புக் பாதுகாப்பானதா? என்னென்ன செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம்? இதைத் தான் இன்றைய பதிவில் காணப் போகிறோம்.

இவை அனைத்தும் Facebook Privacy Settings பகுதியில் இருப்பவை. எனவே Home >> Privacy Settings பகுதிக்கு வரவும்.



உங்கள் பதிவுகளை யாருடன் பகிர்கிறீர்கள்? (Control Your Default Privacy)

தினமும் பேஸ்புக் பயன்படுத்தும் நபர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் பதிவுகளை Friends என்ற அளவில் பகிர வேண்டும். செய்திகளை, படங்களை பகிரும் போது ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டும் பகிர Post என்பதற்கு அருகில் Public என்று இருப்பதை கவனித்து அதை மாற்றி போஸ்ட் செய்யலாம்.




இதை எல்லா பதிவுகளுக்கும் செய்ய Privacy Settings >> Control Your Default Privacy பகுதியில்  Friends என்பதை தெரிவு செய்ய வேண்டும். இங்கே செய்யும் மாற்றங்கள் நீங்கள் பதிவிடும் போதும் அப்படியே இருக்கும்.


குறிப்பிட்ட நண்பர்களுடன் மட்டும் பகிர Custom என்பதை தெரிவு செய்யலாம்.




யார் உங்களை பார்க்கிறார்கள்? (How You Connect)

உங்கள் நண்பர்கள் உங்கள் Timeline க்கு வரும் போது நீங்கள் எழுதிய செய்திகள், படங்கள், உங்களைப் பற்றிய தகவல்கள் (மின்னஞ்சல் முகவரி, முகவரி, மற்ற பல) அனைத்தையும் அறிய முடியும். இதையே உங்கள் நண்பர் அல்லாத ஒருவர் வந்தும் பார்க்க முடியும். அதை தவிர்த்து உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் பகிர வேண்டும்.

இதற்கு Privacy Settings பகுதியில் How You Connect என்பதில் Edit Settings கொடுத்து கீழே உள்ள மாற்றங்கள் செய்யவும்.


இதில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் நான் Friends என்று கொடுத்து உள்ளேன். மற்ற இரண்டும் நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.

Photo Tagging மற்றும் Timeline - இல் பகிர்தல்

இது எல்லோருக்கும் பெரிய பிரச்சினை. கண்டபடி நம்மை பல போட்டோக்களில் Tag செய்வது, நமக்கு சம்பந்தம் இல்லாத செய்திகளை நம் Wall- இல் பகிர்வது என்பதையே சிலர் பேஸ்புக்கில் தொழிலாய் கொண்டுள்ளனர் அவர்களிடம் இருந்து இந்த பிரச்சினையை வரும் முன் தடுக்கும் விதமாக சில Settings Change செய்யலாம். கீழே படத்தில் உள்ளபடி Timeline and Tagging பகுதியில் செய்யவும்.


இது குறித்த விரிவான பதிவுகள்,


Apps, Games and Websites settings : 

1. Photo Tag க்கு அடுத்து மிகப் பெரிய பிரச்சினை இது தான். வரிசையாக இவர் இந்த Game விலையாட அழைக்கிறார், அவர் அந்த Application பயன்படுத்த அழைக்கிறார் என்பவை நமக்கு எரிச்சலை தரும். இவற்றை தடுக்க.

பேஸ்புக்கில் தேவை இல்லாத Games, Apps Request-களை தடுப்பது எப்படி?

2. உங்கள் பெயரை Search Engine-களில் யாரேனும் தேடினால் உங்கள் Timeline அவர்களுக்கு தோன்றும்.(Prabu Krishna on Facebook என்று தேடினால் நான் வருவேன்). இவ்வாறு வரக்கூடாது என்று நினைத்தால் Public search >> Edit Settings என்பதில் Enable public search என்பதை Unclick செய்து விடவும்.

3. பேஸ்புக் நமது தகவல்களை எந்த ஒரு Third Party தளத்துக்கும் விளம்பரத்துக்காக தரவில்லை என்று சொல்லுகிறது. ஆனால் இது எதிர்காலத்தில் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்கிறது. இவ்வாறு உங்கள் பெயர் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க Ads >> Edit setting >> Edit third party ad settings என்பதில் If we allow this in the future, show my information to என்பதில் No One என்று கொடுத்து விடுங்கள்.


4. பேஸ்புக்கில் இருக்கும் போது Sidebar - இல் உங்கள் நண்பர் அதை லைக் செய்துள்ளார், இதை லைக் செய்துள்ளார் என்று இருக்கும். இவை Facebook ads இவற்றில் உங்கள் பெயர் வருவதை தடுக்க Ads and friends >> Edit social ads setting பகுதியில் Pair my social actions with ads for  என்பதை No One என்று கொடுத்து விடுங்கள்.

யாருடன் Chat செய்கிறீர்கள்? 

நிறைய பேருக்கு தெரியாத முகங்களும் நண்பர்களாய் வர வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு வரும் போது சிலர் தேவை இல்லாமல் சாட்க்கு வந்து இம்சை தருவதும் உண்டு. அவர்களை தவிர்க்க குறிப்பிட்ட சிலருக்கு நீங்கள் Offline - இல் இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் Online-இல் இருக்கலாம். இது குறித்த பதிவுகள்.





- பிரபு கிருஷ்ணா

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?


பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும் பிரச்சினை, சில முக்கியமான தருணங்களில் சாட்க்கு வரும் நண்பர்கள். அதிலும் சில முகம் தெரியாத நண்பர்கள் வந்து அதை பார், இதைப் பார் என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இதை தவிர்த்து நீங்கள் பேஸ்புக்கில் சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருந்து, மற்றவர்களுக்கு எப்படி offline-இல் இருப்பது என்று பார்ப்போம்.  

1. பேஸ்புக்கில் நுழைந்த உடன் Chat பகுதிக்கு வரவும். அதில் settings icon >> Advanced Settings என்பதை கிளிக் செய்யவும். 



2.இப்போது கீழே வருத்துவது போல ஒரு விண்டோ வரும், அதில் "Only some friends see you…" என்பதை கிளிக் செய்யவும். அதில் யாருக்கு நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் பெயரை மட்டும் கொடுக்கவும். 





3. இப்போது Save செய்து விடுங்கள். 

வேலை முடிந்தது. இனி அவர்களுக்கு மட்டுமே நீங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள். யாரையேனும் நீக்க விரும்பினாலும், சேர்க்க விரும்பினாலும் இதே பக்கத்துக்கு வந்து செய்யலாம். 

இதே நிறைய பேருக்கு ஆன்லைனில் இருக்க வேண்டும், அடிக்கடி தொல்லை தரும் நபர்களுக்கு மட்டும் offline-இல் இருக்க விரும்பினால் பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி? என்ற பதிவை பார்க்கவும். 

- பிரபு கிருஷ்ணா

Blogger- இல் Contact Form வைப்பது எப்படி?

நமது வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வலைப்பூவின் மூலம் தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன. பலர் தமது ப்ரொஃபைலில் தங்கள் ஈமெயில் ஐடி தந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஸ்பாம் மெயில்கள் வருவது தவிர்க்க முடியாது. இன்னும் சிலர் கமெண்ட் மாடரேசன் வைத்திருக்கும் நிலையில், ஏதேனும் சொல்ல விரும்பினால் அதில் சொல்லி, இதை வெளியிட வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர். அவ்வாறு வைக்காத போது தொடர்பு கொள்வது ஒரு பிரச்சினை தான்.

பிளாக்கர்க்கு மிக அழகான Email Subscription Widget


நம் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க நினைப்பவர்களுக்கு நாம் Email Subscription என்ற வசதியை பயன்படுத்துகிறோம். பெரும்பாலோனோர் Feedburner மூலமாக இதை செய்கிறோம். அதற்கு மிக எளிதான கோடிங் உடன் அழகான Widget ஒன்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

அது கீழே படத்தில் உள்ளது போல இருக்கும். [கற்போம் தளத்தில் பதிவுகளுக்கு கீழே உள்ளது]


இதை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, 

1. முதலில் Blogger >> Layout பழைய Interface என்றால் Blogger >> Design 

2. இப்போது Sidebar - இல் Add A gadget >> HTML/Java Script

3. கீழே உள்ளதை Copy/Paste செய்யவும். 


<form name="f1" action="http://feedburner.google.com/fb/a/mailverify?uri=baleprabu" method="post" target="_blank"><input type="hidden" name="_submit" value="0001" /><table width="285" cellpadding="0" cellspacing="0" border="0"> <tbody><tr valign="bottom"><td width="15" height="15" style="font-size:1px;"> <img src="http://4.bp.blogspot.com/-jXV0gFRk0T8/UDE9GRzXbeI/AAAAAAAAINM/QsC8fBNkFN4/s1600/rsssub_nw_999999.gif" width="15" height="15" /></td> <td colspan="2" style="font-size:1px;background-image:url(http://4.bp.blogspot.com/-7ngaUA7LvKU/UDE9Nr-k_cI/AAAAAAAAINU/3aoTdiMemyM/s1600/rsssub_n_999999.gif);repeat:repeat-x;"><img src="http://1.bp.blogspot.com/-Ja_bAh0sHFY/UDE9l53_uVI/AAAAAAAAINc/oC4mYT_dSPg/s1600/spacer.gif" width="1" height="1" border="0" /></td><td width="15" height="15" style="font-size:1px;"><img src="http://1.bp.blogspot.com/-FH52z1Op0e8/UDE9x31lIPI/AAAAAAAAINk/tnIfsoATQVs/s1600/rsssub_ne_999999.gif" width="15" height="15" /></td></tr> <tr valign="top"><td rowspan="2" width="15" style="background-image:url(http://4.bp.blogspot.com/-ChPjV1Y4owo/UDE98s3iSUI/AAAAAAAAINs/dPyIMXywroY/s1600/rsssub_w_999999.gif);repeat:repeat-y;font-size:8px;"> </td><td nowrap="" bgcolor="#ffffff" style="text-align:center;font-family:verdana,arial,helvetica,sans-serif;font-size:12px;color:#333333;font-weight:bold;">Sign-Up To Our Free Newsletter!</td><td align="right"><img src="http://2.bp.blogspot.com/-SRGKSqQ6ems/UDE-ISXDylI/AAAAAAAAIN0/buo4OVubkPk/s1600/rsssub_emailicon.gif" width="29" height="23" /></td> <td rowspan="2" width="15" style="background-image:url(http://4.bp.blogspot.com/-UnDGThumikk/UDE-XVI42fI/AAAAAAAAIN8/vSlh9ucn6v0/s1600/rsssub_e_999999.gif);repeat:repeat-y;font-size:8px;"> </td></tr><tr valign="top"><td colspan="2" bgcolor="#ffffff">
<table border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr valign="middle"> <td style="padding:2px 5px;"><input type="text" id="email" name="email" value="Your Email Address" onfocus="value=&#39;&#39;" /></td> <td style="text-align:right;padding-left:5px;"><input type="submit" value="Sign Up Now!" /></td> </tr></tbody></table></td></tr><tr valign="top"><td width="15" height="15" style="font-size:1px;"><img src="http://3.bp.blogspot.com/-PuqU4L2oVfA/UDE-jUhzg3I/AAAAAAAAIOE/oN8RKf8THbw/s1600/rsssub_sw_999999.gif" width="15" height="15" /></td><td colspan="2" style="font-size:1px;background-image:url(http://2.bp.blogspot.com/-90_q3ia-Oag/UDE-t_9YAaI/AAAAAAAAIOM/QzlVmVF_TeA/s1600/rsssub_s_999999.gif);repeat:repeat-x;font-size:8px;"> </td><td width="15" height="15" style="font-size:1px;"><img src="http://4.bp.blogspot.com/-KGsh_5SJrI4/UDE-4tQ7fsI/AAAAAAAAIOU/Hpbzx98MZpI/s1600/rsssub_se_999999.gif" width="15" height="15" /></td></tr></tbody></table></form>



4. இதில் baleprabu என்று உள்ளதை உங்கள் Feedburner ID க்கு மாற்றிக் கொள்ளவும்.

5. உங்கள் Feedburner ID - ஐ அறிய, feedburner.google.com சென்று கீழே உள்ளது போல செய்யவும்.


இப்போது Widget - ஐ Save செய்து விடுங்கள்.

இந்த பதிவிற்கு ஐடியா கொடுத்த வரலாற்று சுவடுகள் அண்ணனுக்கு :-)  நன்றி

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கில் தேவை இல்லாத Games, Apps Request-களை தடுப்பது எப்படி?


பேஸ்புக்கில் நமக்கு உச்சகட்ட எரிச்சலான Photo Tag க்கு அடுத்து பெரிய எரிச்சலை தருவது Games, Application Request கள். உங்கள் நண்பர் அதை விளையாடுகிறார், இதை பயன்படுத்துகிறார் என்று சொல்லி நிறைய Notifications வந்து குவியும் இவற்றை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.


Notifications வருவதை தடுக்க, குறிப்பிட்ட Game அல்லது Application Request வரும் போது, கீழே உள்ளது போல அதன் வலது மூலையில் வைத்தால் ஒரு பெருக்கல் குறி வரும், அதை கிளிக் செய்ய வேண்டும்.



இப்போது Turn Off என்பதை கொடுத்து விடுங்கள். அவ்வளவு தான் இனி குறிப்பிட்ட Game/Application - இல் உங்களுக்கு எந்த Notification-யும் வராது.


Game/Application எதுவும் வேண்டாம் என்றால்  Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை கிளிக் செய்து  அதில் Privacy Settings என்பதை தெரிவு செய்யுங்கள்.



இப்போது வரும் பகுதியில். "Ads, Apps and Websites" என்ற பகுதியில் Edit settings என்பதை தெரிவு செய்யவும்.



இப்போது வரும் பகுதியில் Apps you use என்பதில் Edit Settings கொடுத்து (Right Click செய்து புதிய Tab- இல் ஓபன் செய்யவும்.) நீங்கள் இதுவரை பேஸ்புக்கில் பயன்படுத்திய அனைத்து Apps-களையும் நீக்க வேண்டும். (பெருக்கல் குறி மீது கிளிக் செய்து நீக்கி விடலாம்)

இப்போது மீண்டும் Ads, Apps and Websites பகுதிக்கு வந்து, Apps you use பகுதியில் Turn Off என்று கீழே உள்ளது போல உள்ள வசதியை கிளிக் செய்யவும்.


இப்போது வரும் பகுதியில் Turn Off Platform என்று கொடுங்கள். இது Success ஆனால் இனி யாரும் உங்களுக்கு Game, Apps Request களை அனுப்ப முடியாது. அதே சமயம் Facebook account பயன்படுத்தி நீங்கள் எந்த தளத்திலும் நுழையவும் முடியாது.

ஆனால் இந்த வசதி உடனடியாக Turn Off ஆவதில்லை. நிறைய பேருக்கு Error while disabling applications என்று வரும். அப்படி வந்தால் சிறிது நேரம்/நாள் கழித்து முயற்சி செய்யவும். 

இது Turn Off ஆகிவிட்டால் Games, Application Request-களில் இருந்து உங்களுக்கு விடுதலை. இல்லை என்றால் அடுத்த Settings க்கு வாருங்கள்.

How people bring your info to apps they use என்ற பகுதிதான் உங்கள் நண்பர்கள் பயன்படுத்தும் Games, Application களுக்கு உங்கள் தகவல்களை அனுப்புவதை தடுக்கும் பகுதி. அதில் Edit Settings கொடுத்து வரும் விண்டோவில் அனைத்தையும் Unclick செய்து விடுங்கள்.


இதன் மூலம் பெரும்பாலான Games, Apps Request-களை தடுக்கப்படும்.


- பிரபு கிருஷ்ணா

Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?


Android, iPhone, Windows Mobile போன்ற Smart Phone களை பயன்படுத்தும் நண்பர்கள் பலருக்கு அதில் உள்ள நிறைய Application-களை பிடித்து இருக்கும். அத்தோடு அவை கணினியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பதும் உண்டு. உண்மையிலேயே அவற்றை கணினியில் பயன்படுத்த முடியும் தெரியுமா? எப்படி என்று பார்ப்போம். 

Zurker - இணையத்தில் சம்பாதிக்க அழைக்கும் சமூக வலைத்தளம்


சமூக வலைத்தளங்கள் இன்றி இன்று இணையமே இல்லை என்று சொல்லி விடலாம். அத்தனை நல்லது, கெட்டதுகளும் அதில் தான் நடக்கின்றன. பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர், தொலைந்து போன ஆர்குட் வரிசையில் புதியதாக வந்துள்ள தளம் தான் Zurker. மற்றவற்றை போல அல்லாமல், அங்கே இணையும் ஒவ்வொருவரையும் தன்னுடைய பங்குதாரர் ஆக இணைத்துக் கொள்கிறது. அது பற்றி இன்று பார்ப்போம். 

Zurker என்றால் என்ன? 

2011 ஆம் டிசம்பரில் நிக் ஒபா உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளம் இது. இது இப்போது Beta Level - இல் இருக்கிறது. அழைப்பு இருப்பவர்கள் மட்டுமே இணைய முடியும். 

யாரால் இயக்கப்படுகிறது ?

இது முழுக்க முழுக்க இதன் உறுப்பினர்களால் இயங்குகிறது. ஆம் தன்னுடைய தளத்தில் உறுப்பினராய் இணையும் ஒவ்வொருவரையும் இது தன்னுடைய பங்குதாரராய் எடுத்துக் கொள்கிறது. 

எப்படி இதன் மூலம் சம்பாதிப்பது ?

நீங்கள் இந்த தளத்தில் தளத்தில் இணைந்தால், உங்கள் நண்பர்களை Refer செய்தால் நீங்களும் இதன் மூலம் சம்பாதிக்க முடியும். 

நீங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு நண்பரும் இணையும் போது உங்களுக்கு ஒரு vShare எனப்படும் Virtual Share கிடைக்கும். ஒரு vShare ஆனது Zurker தளத்தின் 1/1,000,000th ஓனர்ஷிப்க்கு சமமானது. இந்தக் கணக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு. இந்தியாவில் இது மாறுபடலாம். ஆனால் வருமானம் உறுதி. 

நீங்கள் கேட்கலாம், இது MLM போன்று உள்ளதே என. ஆனால் ஒருவர் Referral மூலம் 500 vShares மட்டுமே பெற இயலும். அதற்கு மேல் நபர்களை அழைக்க முடியாது. அதற்கு மேல் அதில் வருமானம் என்பது வேறு வழிகளில் என்று சொல்லப்படுகிறது. அது குறித்த தகவல்கள் தளம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது தெரிய வரும். 


இதில் சென்று Join The Fun என்பதை கிளிக் செய்து இணையவும். 


இணையும் பொழுது ஒரு மிருகத்தின் படத்தைக் கொடுத்து அதன் பெயரை Type செய்ய சொல்லி கேட்கும். மிருகத்தின் பெயர் தெரியவில்லை என்றால் அந்த படத்தை Download செய்து Google Image Search -இல் கேமரா icon மீது கிளிக் செய்து "Paste image URL" என்பதில் கொடுத்து தேடவும். [வேறு மொழியில் ரிசல்ட் வந்தால் அதை Translate செய்வதன் மூலம் பெயரை கண்டுபிடிக்கலாம்]. இப்போதும் தெரியவில்லை என்றால் தவறான பெயரை கொடுத்தால் அடுத்த மிருகத்தின் படம் வரும். 

உங்கள் கணக்கை தொடங்கிய பின், உங்கள் தகவல்களை கொடுத்து, உங்கள் Profile பக்கத்துக்கு வாருங்கள். 

அதில் வலது மேல் மூலையில் உள்ள Streeme >> Referral என்பதை கிளிக் செய்யவும். 


இப்போது வரும் பக்கத்தில், கீழே உள்ளது போல Invitation Code என்று ஒன்று வரும். அதில் உள்ளதை காபி செய்து உங்கள் நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொண்டால் அவர்கள் இணையும் போது உங்களுக்கும் vShare கிடைக்கும். 

எப்படி ஒருவர் இணைந்துள்ளார் என்பதை அறிவது ?

நீங்கள் Refer செய்யும் நபர் இணையும் போது அவர் நேரடியாக உங்கள் நண்பர் ஆகிவிடுவார். இதன் மூலம் தெரியவரும். 

எப்படியெல்லாம் Refer செய்யலாம்? 

  1. இம்மாதிரி உங்கள் வலைப்பூவில் பதிவு எழுதலாம். 
  2. தனியாக ஈமெயில் அனுப்பலாம். 
  3. ட்விட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்றவற்றில் பகிரலாம்.  

என்ன மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கை தொடங்கி விட்டீர்களா?

மேலே செய்யாதவர்கள் இங்கே செய்யலாம்.

இந்த இணைப்பில் சென்று Zurker கணக்கை தொடங்குங்கள். [எனது Referral Link ]

விரைவில் எனது vShare குறித்து இங்கே பகிர்கிறேன்.

 - பிரபு கிருஷ்ணா

2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாடுவது எப்படி?

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது கூகுள் தளம் அதை சிறப்பிக்கும் வண்ணம் தினமும் சில Doodles-களை வெளியிட்டது. அதில் சில நாம் விளையாடும் படியும்  இருந்தது. நிறைய பேருக்கு பிடித்து இருந்த அவற்றை மறுபடியும் விளையாடுவது எப்படி என்று பார்ப்போம்.

Windows 7-இல் Godmode என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

சில நேரங்களில் கணினியில் ஏதேனும் ஒரு செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டும் என்று நினைப்போம். ஆனால் வழி தெரியாது. இல்லை என்றால் நிறைய மாற்றங்கள் செய்ய நிறைய வழிகளை பயன்படுத்தி இருப்போம். எங்கே போய் என்ன செய்தோம் என்று நினைவில் கூட இருக்காது. அப்படி இல்லாமல், நமக்கு தேவையான நிறைய செட்டிங்க்ஸ்களை ஒரே இடத்தில் மாற்ற வழி தரும் ஒரு வசதியான God Mode பற்றி இன்று பார்ப்போம். 

Install செய்த மென்பொருளை Uninstall செய்யாமல் வேறு டிரைவ்க்கு Move செய்வது எப்படி?

கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive - இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software - ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். அப்படி இல்லாமல் C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வசதியை பற்றி பார்ப்போம். 

இலவச ஆன்லைன் Audio/Video/Image/Document Converter


சில நேரங்களில் நாம் வெளியிடங்களில் இருக்கும் போது நமக்கு ஒரு File Format - இல் இருந்து இன்னொன்றுக்கு Convert செய்ய வேண்டிய அவசியம் வரலாம். அம்மாதிரியான நேரங்களில் குறிப்பிட்ட மென்பொருளை டவுன்லோட் செய்ய முடியும் என்று சொல்ல முடியாது. அப்போது இலவச ஆன்லைன் File Converter இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

www.online-convert.com என்ற தளம் உங்களுக்கு இந்த வசதியை தருகிறது. இதில் நீங்கள் பல வகையான File- களை Convert செய்ய முடியும். 

  • Audio converter
  • Video converter
  • Image converter
  • Document converter
  • Ebook converter
  • Archive converter
  • Hash generator
கிட்டத்தட்ட நமக்கு தேவையான அத்தனை Format களிலும் Convert செய்ய முடியும். 

சில ப்ரௌசிங் சென்டர்களில், கல்லூரிகளில் நமக்கு எந்த மென்பொருளும் இன்ஸ்டால் செய்ய அனுமதி இருக்காது. அம்மாதிரியான நேரங்களில் இது கைகொடுக்கும். 

குறைபாடு: 

ஆன்லைனில் Convert செய்வதால் முதலில் உங்கள் File Upload ஆகி அதன் பின்னரே Convert ஆகும், பின்னர் டவுன்லோட் வேறு. இதனால் இணைய இணைப்பு மெதுவாக இருந்தால் நேரம் அதிகம் ஆகலாம். 

எனவே குறைந்த Size உள்ளவற்றுக்கு இது மிகவும் உகந்தது. பெரிய சைஸ் File என்றால் வேறு வழியே இல்லை என்றால் இதனை பயன்படுத்தலாம். 

முகவரி - http://www.online-convert.com/

Prabu Krishna Rating: 3/5

Youtube - சில அடிப்படை தகவல்கள்


ஆன்லைனில் நமக்கான டிவி சேனல் என்றால் அது Youtube தான். நிறைய நண்பர்கள் அதைப் பற்றிய பதிவு எழுதிய உடன் நிறைய சந்தேகங்கள் கேட்கிறார்கள். Youtube குறித்த முந்தைய பதிவுகளின் ஆரம்ப பாகமாக இருந்திருக்க வேண்டிய அவற்றை  இப்போது எழுதுகிறேன். 

ஒரு வீடியோவை Upload செய்வது எப்படி ?

உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருந்தால் போதும் நீங்கள் நேரடியாக ஒரு வீடியோவை Upload செய்யலாம். www.youtube.com தளத்துக்கு சென்று Upload என்பதை கிளிக் செய்தால் Upload செய்யும் வசதி இருக்கும். 

இதில் நான்கு வகையான முறையில் Upload செய்யலாம். 

Public - இணையத்தில் எவரும் பார்க்கலாம். 
Unlisted - நீங்கள் லிங்க் கொடுத்தால் மட்டுமே பார்க்க முடியும். 
Private - உங்களால் மட்டுமே பார்க்க முடியும். 
Scheduled - நீங்கள் கொடுக்கும் நேரத்தில் Publish ஆகும். 

எப்படி Title, Description, Tags கொடுப்பது ? 

என்ன வீடியோ என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. அதற்கு சம்பந்தமான ஆங்கில டைட்டில் வைத்தால் நிறைய Views வர வாய்ப்பு உள்ளது. வீடியோவில் என்ன உள்ளது, யார் உள்ளார்கள் என்பதை Description பகுதியில் தர வேண்டும். எப்படி Tags - கொடுப்பது என்பது இந்த பதிவில் உள்ளது Youtube கொஞ்சம் ரகசியங்கள்

Enhancements என்றால் என்ன ? 

உங்கள் வீடியோவை Upload செய்த பின் அதில் சில சிறிய எடிட்டிங் வேலைகளை செய்ய இது உதவுகிறது. உங்கள் வீடியோவை நீங்கள் பார்க்கும் போது டைட்டில்க்கு மேலே Enhancements என்பதை கிளிக் செய்தால் இந்த பக்கத்துக்கு வரலாம். இதில் உங்கள் வீடியோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அதில் இருக்கும் படங்களை கொண்டு தெரிவு செய்யலாம். 

இதைப் பற்றிய விரிவான பதிவு - Youtube தரும் அசத்தலான புதிய வசதி

Video Manager என்றால் என்ன? 


Uploads பகுதியில் நீங்கள் Upload செய்த அனைத்து வீடியோக்களும் இருக்கும் பகுதி இது. இதில் ஒவ்வொரு வீடியோவுக்கும் கீழே உள்ள Edit என்பதை கிளிக் செய்தால் Info and Settings, Enhancements, Audio, Annotations, Captions, Download as MP4, Promote போன்ற வசதிகள் இருக்கும்.

Playlist - இதில் நீங்கள் உருவாக்கிய Playlist- கள் இருக்கும். இதை உருவாக்க கீழே படிக்கவும். 

History - நீங்கள் பார்த்த வீடியோக்கள் இதில் இருக்கும். 

Search History - நீங்கள் Youtube- தேடிய சொற்கள் இதில் இருக்கும். 

Watch Later - பின்னர் பார்க்கலாம் என்று நீங்கள் கொடுத்த வீடியோக்கள் இதில் இருக்கும். 

Favorite - நீங்கள் Favorite செய்த வீடியோக்கள் இதில் இருக்கும். 

Likes - நீங்கள் லைக் செய்த வீடியோக்கள் இதில் இருக்கும். 

ஒரு Playlist உருவாக்குவது எப்படி?

உங்கள் வீடியோவுக்கு உருவாக்க

Video Manager பகுதியில் எந்த வீடியோக்களை Playlsit - இல் சேர்க்க வேண்டுமோ அவற்றை வீடியோவுக்கு இடது பக்கம் உள்ள Radio Button மீது கிளிக் செய்து மேலே உள்ள Add To என்பதை கிளிக் செய்தால் Add New Playlist என்று வரும் அதில் சேர்த்து விடலாம். 

நீங்கள் பார்க்கும் மற்றவர் வீடியோக்களை Playlist ஆக்க. 

பார்க்கும் குறிப்பிட்ட வீடியோவுக்கு கீழே உள்ள Add To என்பதை கிளிக் செய்து புதிய Playlist உருவாக்கி கொடுக்கலாம். அல்லது Favorite என்பதில் கொடுக்கலாம்.  

குறிப்பிட்ட Playlist - ஐ நண்பர்களுடன் Share செய்ய Video Manager பகுதியில் Playlist என்பதை கிளிக் செய்து Playlist பெயர் மீது கிளிக் செய்து அந்த Link - ஐ நண்பர்களுடன் பகிரலாம். இதன் மூலம் அவர்கள் அனைத்து வீடியோக்களையும் வரிசையாக காண முடியும். 

நீங்கள் Playlist உருவாக்கும் போதே அது Public அல்லது Private என்று தெரிவு செய்து கொடுக்கும் வசதியும் உள்ளது. 

வீடியோவை Delete செய்வது எப்படி ?

Video Manager பகுதியில் குறிப்பிட்ட வீடியோ[க்களை] Radio Button மீது கிளிக் செய்து தெரிவு செய்து Actions என்பதை கிளிக் செய்தால் Delete வசதி வரும். அத்தோடு Video Privacy- ஐ (Public, Private, Unlisted) மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். 

ஏற்கனவே உள்ள வீடியோ, ஆடியோக்களை பயன்படுத்துவது எப்படி? 

Youtube-இல் உள்ள நிறைய வீடியோக்களில் நீங்கள் பலவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். அவை பற்றி அறிய பிளாக்கர் நண்பன் தளத்தின் இந்த பதிவை படிக்கவும் - ரீமிக்ஸ் செய்ய 40 லட்சம் வீடியோக்கள்

Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி ?

இதற்கு நிறைய வழிகள் உள்ளன.

Youtube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?

Youtube - சிறந்த வீடியோ downloader

Free Make - மிகச் சிறந்த Video Converter இலவசமாக

Youtube மூலம் சம்பாதிப்பது எப்படி ?

நிறைய வசதிகள் உள்ள இதன் மூலம் நீங்கள் வருமானம் பெறவும் முடியும். எப்படி என்று அறிய - Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

- பிரபு கிருஷ்ணா

ஜிமெயிலை கணக்கை Outlook.com - இல் பயன்படுத்துவது எப்படி?



கடந்த வாரத்தில் Outlook.com ஏன் சிறந்தது என்றொரு பதிவில் சொல்லி இருந்தேன். அத்தோடு Outlook.com இன் அடிப்படை தகவல்களையும் சொல்லி இருந்தோம். Outlook.com - இன் இன்னொரு சிறப்பு உங்கள் மற்றொரு ஈமெயில் கணக்கை நீங்கள் அதில் பயன்படுத்தலாம். இன்று எப்படி ஒரு ஜிமெயில் கணக்கை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதற்கு வரவும். 

2. இப்போது POP Download பகுதியில் "Enable POP for all mail" அல்லது  "Enable POP for mail that arrives from now on" என்பதை தெரிவு செய்யவும். 



3. இப்போது outlook.com க்கு செல்லுங்கள். உங்கள் கணக்கில் நுழைந்து Settings >> More Mail Settings என்பதற்கு வரவும். 



4. அதில் Managing your account பகுதியில் Sending/receiving email from other accounts என்பதை கிளிக் செய்யவும். 

5. இப்போது "You can receive mail from these accounts" என்பதில் Add an email account என்பதை கிளிக் செய்து வரும் அடுத்த பக்கத்தில் கீழ்கண்ட தகவல்களை நீங்கள் தர வேண்டும். 

Email address: உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி
POP3 user name:  உங்கள் பெயர் [உங்கள் விருப்பம்]
Password:  ஜிமெயில் பாஸ்வேர்ட்
Incoming mail server: pop.gmail.com
Port: 995

இப்போது கீழே உள்ளது போல இருக்கும்.


6. இப்போது Next என்பதை தரவும். அடுத்த பக்கத்தில் உங்கள் ஜிமெயில்க்கு வரும் மெயில்கள் எங்கே இருக்க வேண்டும் என்று தெரிவு செய்ய வேண்டும். தனி Folder என்றால் ஒரு பெயர் கொடுக்கலாம், இல்லை என்றால் Inbox என்பதை தெரிவு செய்து விடுங்கள்.  இப்போது Save கொடுத்து விடுங்கள்.


உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை பொறுத்து அனைத்து மெயில்களும் இங்கே வர தாமதம் ஆகலாம். அதிக பட்சம் ஒரு நாளில் செயல்பட தொடங்கும். 


இப்போது உங்கள் ஜிமெயில்க்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதை ஓபன் செய்து, அதில் உள்ள லிங்க் மீது கிளிக் செய்தால் கீழ்கண்ட மெசேஜ் வரும்.



இப்போது New Mail Compose செய்யும் போது ஜிமெயில் அக்கௌன்ட்டை தெரிவு செய்து மின்னஞ்சல் அனுப்பவும் முடியும். 



ஜிமெயில் அக்கௌன்ட்டில் இருந்து எப்போதும் மின்னஞ்சல் அனுப்ப விரும்பினால் அதை Default ஆக மாற்றி விடலாம். இதற்கு நீங்கள் Mail Settings >> Managing your account >> Sending/receiving email from other accounts என்பதில் You can send mail from these accounts பகுதியில் உங்கள் ஜிமெயில் கணக்குக்கு நேர உள்ள "Use as default" என்பதை கிளிக் செய்து விட்டால் போதும். 

இதே போல Outlook.com கணக்கை ஜிமெயிலில் பயன்படுத்த 



- பிரபு கிருஷ்ணா