Remote Desktop Connection என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? | கற்போம்

Remote Desktop Connection என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?


Team Viewer மூலம் ஒரு இடத்தில் இருக்கும் கணினியை இன்னொரு இடத்தில்  எப்படி Access செய்வது என்று பார்த்து இருந்தோம். இதே செயலை ஒரே Network-இல் இருக்கும் கணினிகளுக்கு எந்த மென்பொருளும் இல்லாமல் செய்வதற்கு உதவுவது Remote Desktop Connection. எப்படி அதை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

இதை செய்ய Access செய்யப்போகும் கணினியில் User Name, Password, IP போன்றவை தெரிந்து இருக்க வேண்டும். 

Windows XP


1. Start Menu >>All Programs>> Accessories >> Remote Desktop Connection என்பதை ஓபன் செய்யவும். 

2. இப்போது குறிப்பிட்ட கணினியில் IP-ஐ அதில் தரவும். 


3. கொடுத்து விட்டு Connect என்பதை தரவும். இப்போது Remote Desktop ஓபன் ஆகும். அதில் User Name மற்றும் Passowrd கொடுத்து நுழைந்து விடலாம். 


4. அவ்வளவு தான் இனி அந்த கணினி உங்கள் திரையில் ஓபன் ஆகிவிடும். 


5. இதை முழு திரையிலும் Maximize செய்து பார்க்க முடியும். Minimize செய்ய Cursor-ஐ திரையின் மேலே கொண்டு செல்ல வேண்டும். 

Windows 7 & Vista 


Windows 7 & Vista பயனர்கள் இதை செய்வதற்கு Remote Desktop-ஐ ON செய்திருக்க வேண்டும். 

Right Click on My Computer >> Choose "Properties" அதில் Remote Settings என்பதை கிளிக் செய்யவும். இப்போது வரும் விண்டோவில் கீழே உள்ளது போல தெரிவு செய்யவும். 



இப்போது Start Menu-வில் Remote Desktop Connection வசதி வந்து விடும். அதை கிளிக் செய்து நீங்கள் Connect செய்திட இயலும். இதற்கும் மேலே உள்ள வழிமுறை தான். 

இதை அலுவலகம், ப்ரௌசிங் சென்டர் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

வேறு Network அல்லது தொலை தூர கணினிகளுக்கு Team Viewer மூலம் இதை செய்ய முடியும் - Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

- பிரபு கிருஷ்ணா

23 comments

இதற்க்கு அந்த கணினியின் user name, password தெரிந்திருக்க வேண்டும் அப்படித்தானே பிரபு?

Reply

ஆம் நண்பா. அலுவலகம் என்று வரும் போது தெரிந்திருக்கும் என்று சொல்லவில்லை. பதிவில் சேர்த்து விடுகிறேன்.

Reply

நல்ல தகவல் நண்பரே ...
நன்றி...(த.ம. 2)

Reply

விளக்கத்திற்கு நன்றி நண்பா!

Reply

பயனுள்ள தகவல் சகோ. பதிவை படித்ததும் remote setting-ஐ ஆஃப் செய்துவிட்டேன். :D

Reply

உசாராகிட்டாங்கப்பா :)

Reply

அருமையான தகவல் அருமைஃஃஃ அருமைஃஃஃ

Reply

சிறப்பான தகவல்! ஒருமுறை என் அத்தை மகன் இவ்வாறு அவரது கணிணியை என் கணிணியில் வரவழைத்தார்! பகிர்வுக்கு நன்றி!

Reply

நல்லதொரு பதிவு.. நன்றி நண்பா...!

Reply

எனது திரையை Remote Desktop Connection administrator பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நான் எவ்வாறு கண்டுகொள்ள முடியும்? உதாரணமாக X என்ற கணணியை A என்பவர் அவதானித்தால் X இல் இருக்கும் நான் எவ்வாறு அவதானிப்பது? எனது கணணி X அவதானிக்கப்படுகிறது என்று எவ்வாறு கண்டுகொள்வது?

Reply

பயனுள்ள தகவல்...விளக்கத்திற்கு நன்றி நண்பா..

Reply

VERY THANK YOU FOR THE VALUABLE SHARING. PLEASE POST ANOTHER TYPES OF FILE SHARING LIKE FTP. THANK YOU.

Reply

Idanai seyatpadutha 2ru PC ilum Team viwer i seyatpadutha venduma or 1dil mattum irundal poduma???

Reply

Team Viewer பயன்படுத்தி இது போல செய்ய இரண்டு கணினிகளிலும் அது இருக்க வேண்டும்.

Reply

எனது திரையை Remote Desktop Connection administrator பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நான் எவ்வாறு கண்டுகொள்ள முடியும்?

Reply

இந்த முறையில் அது உங்களுக்கு தெரியாது ஆனால் நீங்கள் உங்கள் கணினி கீபோர்டு, மௌஸ் எதனை அசைத்தாலும் அவரது Connection முடிந்து விடும்.

Team Viewer என்றால் அவர் என்ன ஓபன் செய்தாலும் உங்கள் கணினியில் தெரியும்.

Reply

பல நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம்..
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!!

Reply

நீங்கள் உங்கள் Mouse Cursor - ஐ அசைத்தால் கூட அவரது connection Disable ஆகி விடும்.

Reply

enakku sariyaka puriyavillai

Reply

computer address enanddu eduppathu

Reply

இது ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகள் ஒரே இணைப்பில் இருந்தால் தான் பயன்படும். பெரும்பாலும் அலுவலகம், கல்லூரிகளில் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு தெரிய வேண்டியது குறிப்பிட்ட கணினியின் IP Address. Task Bar - இல் உள்ள Netword Icon மீது டபுள் கிளிக் செய்து வரும் விண்டோவில் Properties என்பதில் IP - ஐ பார்க்கலாம்.

Reply

Post a Comment