Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? | கற்போம்

Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?

Paypal - இந்த வார்த்தையை அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றை மிகப் பாதுகாப்பான முறையில் செய்யும் இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
நிறைய தளங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை Check அல்லது Paypal மூலம் தருகின்றன. இன்னும் பல Paypal வழியாக மட்டுமே பணம் செலுத்தும். எனவே Paypal Account Create செய்வது கட்டாயம் ஆகிறது.

இந்த பதிவில் Paypal Account உருவாக்குதல், Bank Account சேர்த்தல், Bank Account க்கு பணத்தை பெறுதல் போன்றவற்றை காண்போம்.

1. முதலில் Payapal.com என்ற முகவரிக்கு செல்லவும்.

2. அதில் Sign Up என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் முதலில் உங்கள் நாடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும், அடுத்து என்ன மாதிரி கணக்கு தொடங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு Personal என்பதை தெரிவு செய்யவும். பின்னர் Upgrade செய்து கொள்ளலாம். [நிறுவனங்கள் பெயரில் என்றால் மூன்றாவதை தெரிவு செய்ய வேண்டும்]

3. அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும். இதில் உங்கள் First Name என்பதில் உங்கள் பெயரை தரவும், Last Name என்பதில் Initial தரவும். இதில் உங்கள் உண்மைப் பெயரை பயன்படுத்தவும். தவறு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் முடித்த பின் Agree & Create Account -ஐ கிளிக் செய்யுங்கள்.

4. அடுத்த பக்கத்தில் My Account என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. இப்போது வரும் பக்கத்தில் உங்கள் Bank Account கேட்கப்படும். அதில் Add bank என்பதை கிளிக் செய்யவும்.

6. அதில் உங்கள் அக்கௌன்ட் பெயர், பேபால் கணக்கோடு ஒத்துப் போக வேண்டும்.  அடுத்து உள்ள கட்டங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பவும். NEFT/IFSC Code அறிய நீங்கள் உங்கள் பேங்க் பெயர் மற்றும் ஊர் போன்றவற்றை இங்கே கொடுத்து தேடலாம்.

7. இந்த தகவல்களை நிரப்பிய பின்னர் Continue கொடுக்கவும்.


8. அடுத்த பக்கத்தில் Save என்பதை கொடுத்து விடவும்.

9. இப்போது Paypal உங்கள் வங்கிக் கணக்கில் 4 முதல் 5 நாட்களுக்குள் கொஞ்சம் பணம் போடும். [இந்திய ரூபாயில் இரண்டு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.] Two Deposits ஆக போட்டு இருக்கும். அதை செக் செய்து அதை உங்கள் Paypal கணக்கில் நுழைந்து Account Overview பகுதியில் "Confirm Bank Account" என்பதை கிளிக் செய்து தர வேண்டும்.

இது சரியாக இருந்தால் உங்கள் Paypal கணக்கு Verify செய்யப்பட்டு விடும். இனி Paypal கணக்கில் நீங்கள் பணங்களை பெற இயலும். அதை எளிதாக உங்கள் வங்கிக கணக்குக்கு Transfer செய்யவும் இயலும்.

Personal Acount களுக்கு Fees எதுவும் கமிஷன் ஆக பெறப்படுவது இல்லை. அதனால் அதைப் பற்றிய கவலை வேண்டாம்.

Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?

பிரபு கிருஷ்ணா

54 comments

நன்றி பிரபு நல்ல தகவல்....

Reply

Bank code பற்றிய அந்த தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பேபாலில் பணம் பெறுவது பற்றி தான் சரியாக விளங்கவில்லை. நீங்கள் என் கணக்கிற்கு ஐந்தாயிரம் அனுப்பி பாருங்களேன்!

Reply

Hai I waint to know how re take the money frm paypal tht took it for verification

Reply

நன்றி சகோ அனைவருக்கும் பயன்படும் ஒன்று

Reply

நீண்ட நாட்கள் எனக்கு paypal ஐ பற்றி இந்த ஐயம் இருந்து வந்தது. சரியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.
மேலும் பேஸ்புக்கில் நமது பதிவுகள் அனைத்தையும் நண்பர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் பார்வையிட என்ன செய்யவேண்டும். அதாவது நண்பர்கள் வட்டத்தில் அல்லாதவர்களும், நான் ஒரு பேஸ்புக் முகவரியை தொடங்க உள்ளேன். அது பப்ளிக்காக இயங்க வேண்டும். இதைப்பற்றி தெரிந்த நண்பர்கள் உதவுங்களேன்..

Reply

இந்தியன் ரூபாயில் டிரான்சாக்ஷன் பண்ண முடியுமா?

Reply

இந்தியன் கரன்சியில் கொடுக்கல் வாங்கல் பண்ண முடியுமா?

Reply

Good Post... waiting for next post (:

By
Hari (hari11888.blogspot.in)

Reply

மிகவும் அவசியமான தகவல்களை கொடுத்ததிற்கு மிக்க நன்றி ! பிரபு சார்.தொடர் அருமையாக செல்கிறது.பல பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.மேலும் தகவல்களை பெற ஆவலாக உள்ளேன்.எந்த எந்த விஷயத்திற்கு இதை பயன் படுத்தலாம்,எப்படி பயன் படுத்தலாம் என்பதை விரிவாக தெரிவிக்கவும்.
malaithural.blogspot.com

Reply

மிக்க நன்றி.... எமது நாட்டுக்கு பேபால் கணககினால் பணம் பெற முடியாதது பெரிய வருத்தமே... ஆனாலும் புளொக்கரில் பேபால் பட்டன் இணைப்பது வரை தாங்கள் விளக்கம் தர வேண்டு என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...

Reply

மிக அருமையான விளக்கம் கொடுத்து பேபல் என்றால் என்ன என்பதை புரிய வைத்ததிற்க்கு நன்றி.

Reply

நன்றி சகோ.

Reply

நன்றி அண்ணா.

Reply

நன்றி அண்ணா.

Reply

டாலர்ல வேணுமா? இல்லை ரூபாய்ல வேணுமா சகோ? சொல்லுங்க அனுப்பிடறேன் ;-)

Reply

பேங்க் Verification முடிந்த உடன், உங்கள் பேபால் கணக்கில் பணம் இருந்தால் நீங்கள் எளிதாக அதை Transfer செய்ய இயலும்.

Reply

நன்றி சகோ.

Reply

நன்றி சார்

Reply

நன்றி சகோ.

நீங்கள் உங்கள் Status களை Public என்று தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் நண்பர் உங்கள் போஸ்ட்க்கு கமெண்ட் போட்டால் அவரது நண்பருக்கு ஒரு செய்தியாக செல்லும்[Ticker, News Feed] என்று. ஆனால் இதன் மூலம் பெரிதாக ரீச் ஆக வாய்ப்பு இல்லை, எல்லா நேரத்திலும் இது நிகழ்வது இல்லை. எனவே Facebook Fan page உருவாக்கி அதில் ஷேர் செய்யலாம்.

Reply

டாலரில் தான் முடியும் சகோ.

Reply

கண்டிப்பாக பேபால் பற்றிய அடுத்த பதிவு இன்னும் விரிவாக இருக்கும்.

Reply

கண்டிப்பாக பேபால் பற்றிய அடுத்த பதிவுகள் இன்னும் விரிவாக இருக்கும்.

Reply

கண்டிப்பாக சகோ.

Reply

நன்றி சகோ.

Reply

நன்றி சகோ.

Reply

My Account பகுதியில் Withdraw என்பதை கிளிக் செய்து அதில் "Withdraw Funds to your bank account" என்பதை தெரிவு செய்யுங்கள். இப்போது வரும் பக்கத்தில் நீங்கள் Transfer செய்து விடலாம்.

Reply

Machi nice machi but now we cannot use paypal to pay online transaction :-(

Reply

Thanks for your info...

Reply

நல்ல தகவல்....

Reply

Good one..waiting for more..:)

Reply

அடுத்தவங்க நம்ம accont பணம் அனுபவ்த்ர்கு paypal mailid மட்டும் கொடுத்தால் போதுமா

Reply

kandipaaga credicard number kodukanumaa?

Reply

what is the use of it i mean benifit? . We can directly transfer funds using netbanking right? Pls explain me

Reply

what is the use of it i mean benifit..? we can directly do transactions using netbanking right? pls explain me

Reply

முதல் இரண்டு பத்திகளிலேயே உள்ளதே.

//ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றை மிகப் பாதுகாப்பான முறையில் செய்யும் இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

நிறைய தளங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை Check அல்லது Paypal மூலம் தருகின்றன. இன்னும் பல Paypal வழியாக மட்டுமே பணம் செலுத்தும். எனவே Paypal Account Create செய்வது கட்டாயம் ஆகிறது.//

Reply

மிகவும் பிரயோசனமான பதிவு சார்....
பல ஐயங்கள் தெளிவடைந்தன....

Reply

மிகவும் அவசியமான தகவல்களை கொடுத்ததிற்கு மிக்க நன்றி

Reply


பேபால் மூலம் பணம் பெற, நமது இந்திய வங்கியை இணைத்துவிட்டால் போதும். நம் பேபால் கணக்கிற்கு பணம் வந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் தானாகவே நம் வங்கிக்கு வந்துவிடும். இது கடந்த ஒர் ஆண்டாக நடைமுறையில் உள்ள ரூல். அதற்கு கண்டிப்பாக நமது வங்கிக் கணக்கினை வெரிபை செய்து வைத்திருக்க வேண்டும்.

மிகவும் பாதுகாப்பனது... நான் கடந்த 4 வருடமாக வைத்துள்ளேன். எனது வங்கிக்கு 15 க்கும் மேற்பட்ட ட்ரான்ஸ்சாக்சனும் நடந்துள்ளது.

நன்றி

tamil online job site visit > www.padugai.com

Reply

naanba eapdi aduthavanga paypal ku amount send panurathu?

Reply

அவர்கள் Paypal - இல் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி மூலம் செய்யலாம்.

Reply

business கணக்கிற்கு மாற்றிய paypal கணக்கை எவ்வாறு premier கணக்கிற்கு மாற்றுவது

Reply

இதற்கு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இங்கே Instructions கொடுத்துள்ளார்கள் - http://goo.gl/GvqWx

Reply

Hi,

You can find all ifsc codes at ifsccodefinder.com site.

Reply

Post a Comment