இவற்றில் பெரும்பாலானவை Google.com - இல் மட்டுமே வேலை செய்யும்.
1.conway's game of life
இது மிக சமீபத்திய உருவாக்கம். Conway's Game of Life என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கூகுளில் தேடும் போது வலது பக்கம் கட்டம் கட்டமாக அனிமேஷன் ஆவதை காணலாம்.
2. zerg rush
இதை தேடும் போது உங்கள் தேடுதல்களை வந்து விழும் பூஜ்ஜியங்கள் தின்று கொண்டிருக்கும். எல்லா லிங்க்களையும் தின்ற பிறகு "GG" என்று வந்து நிற்கும். இதன் பொருள் "Good Game"
3. qingming festival
தேடுதலின் வலது புறம் அழகிய மரத்தை வளர்க்கிறது இது.
4. binary
உங்கள் தேடுதல் முடிவுகளை எவ்வளவு, எத்தனை நொடிகளில் என்று Binary-யில் காட்டும். [வெறும் 1,0 ஆக மட்டும் காட்டும்]
5. kerning
தேடுதலில் கிடைக்கும் kerning என்ற வார்த்தையின் எழுத்துக்களின் இடைவெளி மட்டும் அதிகமாக இருக்கும்.
6. kwanzaa - இப்போது இல்லை
உங்கள் தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் ஏழு மெழுகுவர்த்திகள் கொண்ட தொடர் வரிசையாக இருக்கும். இது பண்டிகை காலங்களில் அமெரிக்காவில் செய்யப்படுவது.
7. santa claus - இப்போது இல்லை
கிருஸ்துமஸ் நேரத்தில் மட்டும் இது வரும் என்று நினைக்கிறேன். தேடுதலின் போது தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் கிருஸ்துமஸ் விளக்குகள் இருக்கும்.
8. hanukkah - இப்போது இல்லை
தேடுதலின் போது தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் Star போன்ற லைட்கள் தொடராக இருக்கும்.
9. let it snow - இப்போது இல்லை
2011 டிசம்பரில் இருந்து 2012 ஜனவரி வரை இருந்தது. இதை கூகுளில் தேடினால் உங்கள் தேடுதல் முடிவுகள் முழுவதும் பனியால் மூடப்படுவது போல் மாறிவிடும்.
10. tilt அல்லது askew
இதை இரண்டையும் தேடும் போது உங்கள் தேடுதல் முடிவில் வலது புறமானது இடது புறத்தை விட உயரம் குறைவாக ஒரு மாதிரி சாய்ந்து இருக்கும்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். மற்றவற்றை நாளைய பதிவில் காண்போம்.
- பிரபு கிருஷ்ணா
6 comments
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
Replyதேடு பொறி சிரிப்பா சிரிக்குது ஹி ஹி ஹி
Replyஎப்படி அண்ணா உங்களால் இப்படி யோசிக்க முடிகிறது!..
Replyநல்லா இருக்கு, ஆனால் முதல் விளையாட்டு மட்டும் புரியவில்லை. :D
Replyஹி ஹி சூப்பர் நண்பா..
ReplySIMPLY SUUUPER.
ReplyPost a Comment