இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற | கற்போம்

இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற

ரத்த தானம் என்பது இப்போது அடிக்கடி அவசியமாகிற ஒன்று. இணையத்தில் நிறைய ரத்த தானம் குறித்த தளங்கள் இருப்பினும். நிறைய நண்பர்கள் பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் ரத்தம் தேவை என்று கேட்பார்கள். ஆனால் அதன் மூலம் மட்டும் நமக்கு உதவி கிடைப்பது இல்லை. இணையத்தில் எப்படி எளிதாக இதை செய்வது என்று பார்ப்போம். அத்தோடு வலைப்பதிவர்கள் எப்படி இது குறித்த Gadget- ஐ தங்கள் தளங்களில் வைப்பது என்றும் பார்ப்போம். 


இங்கே உள்ள தளங்கள் எல்லாவற்றிலும் ரத்த தர விரும்புவோர் Register செய்து கொள்ளலாம்.


இந்த தளம் நகர வாரியாக ரத்தம் பெறுவோர் கொடுப்போர் தகவல்களை கொண்டிருக்கும். உங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பிரிவை தெரிவு செய்து உங்கள் நகரத்தில் இருக்கும் நண்பர்களை தேடலாம். பின்னர் அவர்களின் போன் நம்பர் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள இயலும். 

இதை வலைப்பூவில் Gadget ஆகவும் வைக்க முடியும். Get BloodHelpers Search / Blood Request Widget 


கிட்டத்தட்ட இருபதாயிரம் நண்பர்களுடன் இயங்கும் இந்த தளம் மிக எளிதான வழிகளை கொண்டுள்ளது. உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் இவர்களை தொலைபேசி மூலமோ அல்லது, SMS அனுப்பியோ தொடர்பு கொள்ள முடியும். அதற்கு உங்கள் ஏரியாவின் Pin Code மற்றும் STD Code தெறித்து இருக்க வேண்டும். அவ்வளவே. 


முதல் தளத்தை போலவே மிக எளிதாக் தளத்தின் முகப்பிலேயே நீங்கள் ரத்த தானம் தருவோரை தேட முடியும். ரத்தம் தேவை என்றால் போஸ்ட் செய்யவும் இயலும். 


தளத்தின் முகப்பிலேயே யாருக்கு, எங்கே ரத்தம் தேவை. என்ன காரணம் போன்றவற்றை சொல்லி விடுகிறார்கள். இதே போல ரத்தம் தேவைப் படுவோர் போஸ்ட் செய்யலாம். உடனடி தேவை என்றால் ரத்தம் தருபவர்களை தொடர்பு கொள்ளவும் முடியும். 

மற்ற சில தளங்கள்: 

இதை போல இணையத்தில் நிறைய தளங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் கமெண்ட்டில் சொல்லலாம். 

[தொழில்நுட்ப தகவல் இல்லை என்றாலும், அவசியமான தகவல் என்பதால் பகிர்ந்தேன்]
-பிரபு கிருஷ்ணா



14 comments

நல்ல தகவல்

Reply

மிக அவசியமான பதிவு.......

கடந்த வாரம் என் உறவினர் ஒருவருக்கு உடனடியாக இரத்தம் தேவைப்பட்டது. எனக்கு தெரிந்தவர்களிடம் அந்த குரூப் இல்லை. அர்ஜென்ட் என்பதால் எங்கே எப்படி இரத்தம் தேவைக்கு தொடர்பு கொள்வது என தெரியாமல் திண்டாடி விட்டோம்.

இரத்த வங்கியிடமும் உடனடியாக கிடைக்கவில்லை.

அப்போது இந்த பதிவு இருந்திருந்தால் எனக்கு மிகவும் பயன்பட்டிருக்கும்.

பகிர்வுக்கு நன்றி பிரபு.

Reply

யார் நண்பா இது தொழில் நுட்ப தகவல் இல்லை என்று சொன்னது! Blood Helper Widget வலைத்தளத்தில் இணைப்பது பற்றி கூறியிருக்கிறீர்களே? இதில் தொழில்நுட்பம் அடங்கியிருக்கிறதே!

அருமையான தகவல் நண்பா!

Reply

மிகவும் அருமையான தகவல்...
பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள் !
(த.ம. 4)

Reply

மிகவும் அருமையான தகவல்...

Reply

மிகவும் தேவையான அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி நண்பரே!

Reply

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in


இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in

Reply

மிகவும் உபயோகமானது.இதைப்போல் மேலும் கூறவும்.

Reply

அன்பின் பிரபு - பயனுள்ள தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

பலருக்கும் பயன்படும் பதிவு நண்பனுக்கு நன்றி

Reply

பலருக்கும் பயன்படும் பதிவு

Reply

[தொழில்நுட்ப தகவல் இல்லை என்றாலும், அவசியமான தகவல் என்பதால் பகிர்ந்தேன்]

அவசியமான தகவல் மட்டுமல்ல பிரபு, அவசரமான தகவலும் கூட. தகவலுக்கு நன்றி வருடம் ஒரு முறை தவறாமல் இரத்த தாணம் செய்து வருகிறேன் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக. நானும் பதிவு செய்துக் கொள்கிறேன்.

Reply

பலருக்கும் பயன்படும் பதிவு

Reply

useful post..
www.busybee4u.blogspot.com

Reply

Post a Comment