July 2012 | கற்போம்

Gmail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?


நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை தேவை இல்லாத நபர்களிடம் இருந்து நமக்கு மின்னஞ்சல்கள் வருவது. சில சமயம் உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்துள்ளது என்று கூட வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 மெயில்கள் இது போன்று வந்தால் எரிச்சலாகதான் இருக்கும். அவற்றை எப்படி Gmail Filters கொண்டு தடுப்பது மற்றும் அதன் மற்ற பலன்கள் என்ன என்று பார்ப்போம். 

இதன் மற்ற பலன்கள் : 

உங்களுக்கு வரும் மெயில்களை கையாள பயன்படுகிறது. தேவை இல்லாத மெயில்களை தானாகவே Delete ஆகும் படி வைக்கலாம், குறிப்பிட்ட நபர் அனுப்பும் மெயில்களை குறிப்பிட்ட Label-க்கு Move செய்யலாம், குறிப்பிட்ட மெயில்களை மட்டும் வேறு Address-க்கு Forward செய்யலாம். இன்னும் பல.

எப்படி Gmail Filter- ஒன்றை உருவாக்குவது ?


குறிப்பிட்ட மின்னஞ்சலை ஓபன் செய்யுங்கள். இப்போது மின்னஞ்சலுக்கு மேலே உள்ள "More" என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் "Filter Messages Like These" என்பதை கிளிக் செய்யுங்கள்.




இப்போது Search Box-இல் Filter Window ஓபன் ஆகும். அதில் From என்பதில் அனுப்பியவர் மின்னஞ்சல் முகவரி இருக்கும். அதே போல அவர் அனுப்பிய மெயில்கள் இப்போது பின்னால் இருக்கும்.



இதை நிரப்புவதன் மூலம் நாம் மெயில்களை கையாளலாம்.

From - அனுப்புபவர் மின்னஞ்சல் முகவரி

To - யாருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். [அடிக்கடி ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு அனுப்பி இருந்தால் இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.]

Subject - Subject எந்த மாதிரி இருந்தால் Filter செய்ய வேண்டும் என்று தெரிவிக்க

Has the words - இதில் ஒரு வார்த்தை கொடுத்து Filter செய்தால் அந்த வார்த்தை உள்ள மின்னஞ்சல் மட்டும் Filter ஆகும்.

Doesn't have - மேலே உள்ளதற்கு எதிர்மறை இது. குறிப்பிட்ட வார்த்தை இல்லை என்றால் Filter ஆகும்.

Has Attachment - மேலே தகவல்களை நிரப்பிய பின் அந்த மின்னஞ்சல்களில் Attachement எதுவும் இருந்தால் அவற்றை மட்டும் Filter செய்ய இதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது Search Button மீது கிளிக் செய்து எல்லாம் சரியாக உள்ளதா என்று வடிகட்டப்பட்ட மின்னஞ்சல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மீண்டும் More பட்டன் மீது கிளிக் செய்தால் "Create Filter" என்ற வசதி இருக்கும்.

இப்போது "Create filter with this search"  என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது அந்த மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.



Skip The Inbox (Archive it) - இதை கிளிக் செய்தால் நேரடியாக Archive பகுதிக்கு சென்று விடும்.

Mark as read  - மெயில் வந்த உடனே தானாகவே ஓபன் Read ஆகிக் கொள்ளும்.

Star it - குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலுக்கு Star கொடுத்து விடும்.

Apply The Label - குறிப்பிட்ட Label-இல் Add செய்யலாம்.

Forward it to - ஏற்கனவே Fowarding செய்து இருந்தால் அதை தெரிவு செய்யலாம். இல்லை என்றால் புதிதாக Forward செய்யலாம்.

Delete it - தானாக டெலீட் செய்யலாம்.

Never send it to Spam - அந்த மெயில்கள் எப்போதும் Inbox-க்கு வரும்.

Always mark it as important - முக்கியமான மின்னஞ்சல் என்று குறித்துக் கொள்ளும்.

Never mark it as important - முக்கியானது அல்ல என்று எடுத்துக் கொள்ளும்.

தேவையானதை கிளிக் செய்து Create Filter என்று கொடுத்து விடுங்கள்.

அவ்வளவு தான் இனி தானாவே நீங்கள் கொடுத்த செயல் நடந்து கொண்டிருக்கும்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட் பாக்ஸ் வழியாக கேளுங்கள்.

- பிரபு கிருஷ்ணா

Photo Pos Pro Photo Editor - இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர்

Photo Pos Pro Photo Editor இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர்

Photo Pos Pro Photo Editor ஆனது போட்டோஷாப் போல ஒரு இமேஜ் எடிட்டர். நிறைய Picture Format-களை சப்போர்ட் செய்யும் இது போட்டோஷாப் போலவே நிறைய வேலைகளை நம் படங்களில் செய்ய உதவுகிறது. இது இலவசமாக கிடைப்பது நமக்கு பெரிய மகிழ்ச்சி. 

சிறப்பம்சங்கள் : 

  1. நிறைய Format-களை சப்போர்ட் செய்யும் வசதி. 
  2. Scanners, Digital Camera போன்றவற்றில் எடுத்த படங்களை சப்போர்ட் செய்கிறது. 
  3. மேம்பட்ட எடிட்டிங் டூல்ஸ் மற்றும் செயல்பாடுகள் 
  4. மிகத் துல்லியமான அளவுக்கு டிசைன் செய்ய உதவும் டூல்ஸ்
  5. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உருவாக்க உதவும் டூல்ஸ் 
  6. நிறைய வசதிகளுடன் டெக்ஸ்ட் டூல்ஸ் 
  7. ஸ்பெஷல் எபக்ட்ஸ் 
  8. எபக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி. 
மற்றும் பல. 


Prabu Krishna Rating: 4/5

புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?


மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம். 

1. முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள். 

2. ஏற்கனவே அக்கௌன்ட் இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய அக்கௌன்ட் தொடங்கவும். 

3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும்.


4. இப்போது கீழே உள்ளது போல ஒரு பக்கம் வரும்.அதில் Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும். 


5. இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும். 

6. இப்போது உங்கள் Mobile க்கு ஒரு SMS வரும். அதில் Confirmation Code இருக்கும். இல்லை என்றால் Way2sms-இல் Mail Alert பகுதியில் Inbox 123456@way2sms.com என்பதை கிளிக் செய்தால் வரும். எதுவும் வரவில்லை என்றால் ஜிமெயிலில் Resend email என்பதை கிளிக் செய்யவும். 

7. இப்போது நீங்கள் பெற்ற Code-ஐ ஜிமெயிலில் Forwarding and POP/IMAP பகுதியில்  தர வேண்டும். தந்த உடன் கீழே உள்ளது போல மாற்றிக் கொள்ளுங்கள். 



8. அவ்வளவு தான் இனி புதிய ஈமெயில்கள் உங்களுக்கு மொபைலில் Alert ஆக வந்து விடும். யாரிடம் இருந்து ஈமெயில் மற்றும் Subject போன்றவை அதில் வரும். நீங்கள் மீண்டும் இணைய இணைப்பை பயன்படுத்தி உடனடியாக ஈமெயில்க்கு பதில் அளித்து விடலாம்.

இதை வீடியோ ஆக காணலாம் 


Yahoo-வில் இதை நீங்கள் இலவசமாக செய்ய முடியாது. Hotmail-இல் Options பகுதியில் இதை செய்யலாம். மற்றவற்றுக்கு Settings பகுதியில் Forwarding வசதி இருப்பின் செய்ய முடியும். 

- பிரபு கிருஷ்ணா

2012 ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் நேரடியாக காண


இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் தான் இப்போது இணையத்தில் அதிகம் பேர் பார்க்க விரும்புவது. ஆகஸ்ட் 12 வரை கோலாகலமாக நடைபெறும் இதை நீங்கள் இந்த முறை இணையத்திலேயே நேரடியாக காணலாம். கணினி மட்டுமல்ல smartphone வைத்து இருந்தால் அதிலும் பார்க்க முடியும். 

Youtube-இல் பார்க்க 


IPL போட்டிகளை போலவே ஒலிம்பிக் போட்டிகளையும் நேரடியாக Youtube-இல் பார்க்கலாம். போட்டிகளை நடைபெறும் போது அவற்றை ஒளிபரப்பு செய்வார்கள். முடிந்த போட்டிகளையும் அங்கேயே நாம் பார்க்க முடியும். 






NBC தளத்தில் பார்க்க 


நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் இந்த தளத்தில் நேரடியாக காண முடியும். முடிந்த போட்டிகளை பார்க்க விரும்பினால் அனைவரும் பார்க்க முடியும். 

மொபைலில் பார்க்க 


ஸ்மார்ட்போன்கள் வைத்து இருந்தால் அதிலேயே லைவ் ஆக போட்டிகளை பார்க்க முடியும். பதக்கப்பட்டியல், செய்திகள், விளையாட்டு வீரர் குறித்த தகவல் என இன்னும் அதிக வசதிகள் உள்ளது. 

ஐபோனில் பார்க்க - BBC Olympics

ஆன்ட்ராய்டில் பார்க்க - BBC Olympics

Remote Desktop Connection என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?


Team Viewer மூலம் ஒரு இடத்தில் இருக்கும் கணினியை இன்னொரு இடத்தில்  எப்படி Access செய்வது என்று பார்த்து இருந்தோம். இதே செயலை ஒரே Network-இல் இருக்கும் கணினிகளுக்கு எந்த மென்பொருளும் இல்லாமல் செய்வதற்கு உதவுவது Remote Desktop Connection. எப்படி அதை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

ட்விட்டர் உங்கள் கேள்விகளும் அதற்கு தீர்வுகளும்


ட்விட்டர் தளம் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். வெறும் 140 எழுத்துக்களுக்குள் நம் எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் தளமான இதில் நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். பேஸ்புக் போலவே இதிலும் தமிழ் பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்தும் போது உங்களுக்கு நிறைய சந்தேகம் வரலாம். அதன் தீர்வுகளே இந்தப் பதிவு.


முதலில் ட்விட்டர்க்கு நீங்கள் புதியவர் என்றால் http://twitamils.com தளம் வெளியிட்டுள்ள ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் என்பதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

இதில் ட்விட்டர் வரலாற்றில் ஆரம்பித்து, அதில் எப்படி அக்கௌன்ட் தொடங்குவது, Follow செய்வது? எப்படி ட்விட் செய்வது என பல தகவல்களை தந்துள்ளனர். 

சரி எப்படி தமிழில் ட்விட் செய்வது என்று கவலையா? வேண்டாம் கவலை முதலில் இந்தப் பதிவை படியுங்கள் மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? - புதியவர்களுக்கு

இது உங்களுக்கு சரிப்படாது என்று தோன்றினால் தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : என்ற பதிவில் இன்னும் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. இதிலேயே உங்களுக்கு அலைபேசியில் எப்படி தமிழில் எழுதுவது என்ற வழியும் சொல்லப்பட்டுள்ளது. 

ட்விட்டர் கணக்கு தொடங்கி விட்டேன், யாரை பின் தொடர என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் நீங்கள் யாரை பின் தொடர போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இப்போது ட்விட்டர்களை தேடும் வழிகள் என்ற பதிவில் உள்ள வழிகளை பயன்படுத்தி யாரை தேடுவது என்று முடிவெடுங்கள். 

சரி இப்போது நான் ட்விட்டரில் பெரிய ஆள் ஆகிவிட்டேன், எனக்கு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட அக்கௌன்ட்கள் உள்ளன, நான் எப்படி அவற்றை நிர்வகிப்பது என்று நீங்கள் கேட்டால் இந்தப் பதிவை படியுங்கள் - பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க

சில காரணங்களினால் உங்கள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதென்றால், எதனால் மற்றும் எப்படி மீட்பது  என்பதை இந்தப் பக்கத்தில் சொல்லி உள்ளார்கள் - ட்விட்டர் கணக்கு முடக்கப்பட காரணங்கள், மீண்டும் கணக்கை உயிர்பித்தல்

ட்விட்டர் கணக்கை சில நாட்கள் முடக்கி வைத்திருக்க வேண்டும் அல்லது நிரந்தரமாக அதை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை படிக்கவும் - ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க

ட்விட்டர் தளத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய பிரச்சினை அடிக்கடி ஸ்பாம் மெயில்கள் வருவது, அவற்றில் உள்ள லிங்க் மீது கிளிக் செய்தால் நமக்கு வைரஸ் அல்லது நம் கணக்கு முடக்கப்படுதல் போன்ற ஆபத்து நிகழலாம். இதை தவிர்த்து பாதுகாப்பாய் இயங்க ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள் என்பதை படிக்கவும். 

யாரை பின்தொடருகிறீர்கள், யார் உங்களை பின் தொடருகிறார்கள் போன்றவற்றை அறிய சில தளங்கள் உதவுகின்றன அவை இங்கே Followers,Friends நிர்வகிக்க செயலிகள்

அலைபேசியில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்த பல வழிகள் உள்ளன. ஸ்மார்ட்போன்கள் என்றால் குறிப்பிட போனின் மார்க்கெட்டில் App கிடைக்கும். வெறும் இணைய இணைப்பு உள்ள மொபைல் மட்டும் பயன்படுத்தும் நண்பர்கள் அலைபேசிக்கான ட்விட்டர் செயலி @dabr என்ற வழியை பின்பற்றலாம். 

சரி வேறு சந்தேகம் என்ன செய்ய என்று கேட்கிறீர்களா?



@TwiTamils , என்பதை mention செய்து உங்கள் கேள்வியை கேளுங்கள். அல்லது நண்பர் @Karaiyaan [ TwiTamil  நிர்வாகி]அவர்களையும் தொடர்பு கொள்ளலாம். 

இது மட்டும் வழியல்ல உங்களுக்கு ட்விட்டர் குறித்த சந்தேகம் அல்லது வேறு ஏதேனும் சந்தேகம் என்றால் உங்கள் சந்தேகம் அல்லது கேள்வியை டைப் செய்து முடித்த உடன் #Help அல்லது #உதவி போன்றவற்றை சேர்த்தால் உங்களை பின் தொடரும் நண்பர்கள் உடனடியாக உதவி செய்வார்கள், அல்லது உதவி செய்யும் நபரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள். 

எனக்கு தொழில்நுட்ப ரீதியாக அல்லது தனிப்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இதே முறையை செய்துள்ளேன், நிறைய நண்பர்கள் உதவியும் செய்துள்ளார்கள்.  


- பிரபு கிருஷ்ணா

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். 

Browser

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு. 

Antivirus  

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு. 

File Compression Software 

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள். 

Image/Graphics editor, paint program, and picture organizer

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை. 


கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள். 

Office Tools 

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை. 

இது கற்போம் தளத்தின் இருநூறாவது பதிவாகும். பலேபிரபுவாக 82 பதிவுகளும், கற்போம் ஆக 118 பதிவுகளும் எழுதி உள்ளோம். தொடர்ந்து ஆதரித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

-பிரபு கிருஷ்ணா

இரண்டு Chrome Browser-களை Sync செய்வது எப்படி?

இரண்டு இடங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது நமக்கு ஒரு பிரச்சினை வருவது உண்டு. ஒன்றில் பயன்படுத்திய Bookmarks, History போன்றவற்றைஇன்னொன்றிலும் பயன்படுத்த முடியாது.  அலுவலகத்திலும், வீட்டிலும் Chrome ப்ரௌசரை பயன்படுத்தினால்  எப்படி இரண்டையும் Sync செய்வது என்று பார்ப்போம்.

இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற

ரத்த தானம் என்பது இப்போது அடிக்கடி அவசியமாகிற ஒன்று. இணையத்தில் நிறைய ரத்த தானம் குறித்த தளங்கள் இருப்பினும். நிறைய நண்பர்கள் பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் ரத்தம் தேவை என்று கேட்பார்கள். ஆனால் அதன் மூலம் மட்டும் நமக்கு உதவி கிடைப்பது இல்லை. இணையத்தில் எப்படி எளிதாக இதை செய்வது என்று பார்ப்போம். அத்தோடு வலைப்பதிவர்கள் எப்படி இது குறித்த Gadget- ஐ தங்கள் தளங்களில் வைப்பது என்றும் பார்ப்போம். 

சோசியல் நெட்வொர்க்ஸ் - சில ஆச்சர்ய தகவல்கள் [Infographic]

இன்று இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்து இருப்போம். பின் வரும் படம் சமூக வலைத்தளங்கள் பற்றிய ஆய்வறிக்கை ஆகும்.இதில் Facebook, Twitter, Google+, Pinterest, Linkedin, Reddit and digg போன்ற தளங்களின் தகவல்கள்  உள்ளன. 

கற்போம் பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவது எப்படி?

நிறைய நண்பர்கள் கற்போம் பதிவுகளை எப்படி மின்னஞ்சலில் பெறுவது என்று கேட்கிறார்கள். இன்னும் பலர் அதை எப்படி செய்வது என்று தெரிந்தும் பாதியில் நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்களுக்கு பதிவுகள் சென்று சேருவதில்லை. எப்படி கற்போம் பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவது என்று பார்ப்போம். 

HTML 5 - பயனுள்ள முக்கிய குறிப்புகள் [Infographic]



இணையத்தின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்படும் HTML 5 கற்பது ஒவ்வொரு Web Designer-க்கும் நோக்கமாக இருக்கும். ஏற்கனவே அதை இலவசமாக கற்றுத் தரும் தளங்களை பற்றிய தகவல்களை ஒரு பதிவில் சொல்லி இருந்தோம். அதில் பயன்படும் பல முக்கிய code-கள் குறிப்புகளாக கீழே படத்தில் உள்ளது.  அனேகமாக இது நிறைய பேருக்கு பயன்படும் என்று நினைக்கிறேன். 



Infograpic By - Tech King

- பிரபு கிருஷ்ணா

MS Office 2013என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி? [Consumer Preview]


MS Office தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் மென்பொருள். நம்முடைய பெரும்பாலான அலுவல் சம்பந்தப்பட்ட வேலைகள் அதில் தான் இருக்கும். Microsoft ஒவ்வொரு முறையும் புதிய Version வெளியிடும் போதும் நிறைய புதிய வசதிகளை சேர்த்து வெளியிடும், இந்த முறை வந்துள்ள Office 2013 - இல் என்ன புதுசு என்றும் , அதன் Consumer Preview வை எப்படி டவுன்லோட்  செய்வது என்ற வழிகளையும் காண்போம். 

விண்டோஸ் உள்ள கணினியில் Ubuntuவை Pen Drive மூலம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் மூலம் இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம். 

முதலில் உங்கள் கணினியில் Ubuntu OS-இன் ISO File இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது இங்கே டவுன்லோட் செய்து கொள்ளவும்.  Ubuntu 12.04 LTS 32 bit


அடுத்து உங்கள் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகி விடுங்கள். இப்போது Pen Drive Linux's USB Installer என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 

இதை Run செய்யும் போது Step-1 இல் எந்த OS என்று கேட்கும், உங்கள் கணினியில் ஏற்கனவே நீங்கள் டவுன்லோட் செய்துள்ள Ubuntu Version-ஐ இதில் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். 


அடுத்து நீங்கள் தெரிவு செய்த OS உங்கள் கணினியில் எங்கு உள்ளது என்று Step-2 மூலம் தெரிவு செய்ய வேண்டும். 

Step-3 யில் உங்கள் பென் டிரைவை தெரிவு செய்ய வேண்டும். [Pen Drive க்கு என்ன லெட்டர் என்று பார்த்து தெரிவு செய்யவும்]

Step- 4 தேவை இல்லை. 


இப்போது Create என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவே சிறிது நேரத்தில் நீங்கள் Process முடிந்த பின், நீங்கள் டவுன்லோட் செய்த Ubuntu-வை உங்கள் Pen Drive மூலம் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம். 

USB மூலம் Boot ஆகவில்லை என்றால், கணினி ஆன் ஆகும் போது [Press F2 For BIOS எனும்போது ] F12 என்பதை அழுத்தவும். இப்போது Boot Menu வரும் அதில் "USB Boot" என்பதை தெரிவு செய்ய வேண்டும். 

இப்போது பென் டிரைவ் உங்கள் கணினியில் செருகி இருக்க வேண்டும். இனி இன்ஸ்டால் ஆகி விடும். 

- பிரபு கிருஷ்ணா

சட்டரீதியாக இலவச ஆங்கில மின்புத்தகங்கள் டவுன்லோட் செய்ய


இப்போது நிறைய பேர் புத்தகங்களை கணினி, மொபைல் போன்றவற்றில் படிக்க ஆரம்பித்து விட்டனர்.  பேப்பர்களை வீணாக்காத இது ஒரு நல்ல முயற்சி ஆகும். ஆனால் நிறைய புத்தங்கள் இலவசமாக கிடைப்பது இல்லை, பணம் கொடுத்து பெற வேண்டிய நிலைதான் உள்ளது. ஆனால் சில தளங்களில் இலவசமாக அதுவும் சட்டரீதியாக கிடைக்கும் ஆங்கில மின் புத்தகங்கள்  கிடைக்கின்றன. அவற்றை பற்றி பார்ப்போம்.

விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 2

நேற்றைய பதிவில் Google Easter Eggs பற்றி சொல்லி இருந்தேன். பதிவின் நீளம் கருதி பத்து Easter Egg பற்றி சொல்லி இருந்தேன். இன்றைய பதிவில் இன்னும் சிலவற்றை காண்போம்.

Easter Egg என்றால் என்ன?

"ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட முட்டைகளே ஈஸ்டர் முட்டைகள் என்றழைக்கப்படுகின்றன."
- விக்கிபீடியா

முதல் பத்தை இங்கே படிக்கலாம் -

விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1

11. jason isaacs


jason isaacs ஐ ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு தெரிந்து இருக்கும். அந்த படங்களின் வில்லனான இவர் பெயரை கூகுளில் தேடினால் கீழே உள்ளது போல வரும்.

12. recursion


எப்போதும் கூகுளில் தவறாக தேடினால் மட்டுமே Did you mean என்று கேட்கும். ஆனால் இதை தேடினால் இதே வார்த்தையை காட்டி Did you mean என்று கேட்கும். இதன் தமிழ் பொருள் "மறுநிகழ்வு". 

13. do a barrel roll


உங்கள் தேடுதல் முடிவை ஒரு சுற்று சுற்றி விட்டு தரும்.

14. anagram


இதை தேடினால் கூகுள் Did You Mean  "nag a ram" என்று காட்டும். anagram என்பதன் பொருள் "ஒரு சொல்லின் எழுத்துக்களில் இருந்து அமைக்கப்பட்ட இன்னொரு சொல்"



15. "world cup", "world cup usa vs england", or "world cup brazil"  - இப்போது இல்லை


இவற்றை 2010 உலகக் கோப்பையின் போது நீங்கள் தேடி இருந்தால். தேடுதல் பக்கத்தின் கீழே Goooooooooogle என்பதற்கு பதில் Gooooooooooal என்று இருந்திருக்கும்.



16. Games on Google


என்னைப் போன்று வெகு சிலருக்கு மட்டுமே கணினியில் விளையாட்டு விளையாட பிடிக்காது. ஆனால் பெரும்பாலோனோருக்கு பிடிக்கும் இதையும் விட்டு வைக்கவில்லை கூகுள். google.com/pacman என்ற முகவரியில் Pacman Game எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். 


அதே போல Angry Birds ரசிகர்களுக்கு அதை Chrome-இல் விளையாடும் வசதியும் உள்ளது. Angry Birds

கீழே உள்ள இரண்டும் வேறு தளத்தில் Chrome Experiment ஆக செயல்படும் Project-கள்

17. Google floating sphere


இது வேறு ஒரு Project தளத்தில் செயல்படுகிறது. உங்கள் படங்களை தேட இது பயன்படுகிறது. தேடுதலும், அதன் முடிவுகளும் ப்லோட்டிங் ஆவது அருமையாக இருக்கும். 


18. Google Gravity falling


கூகுள் முகப்பு பக்கம் போல இருக்கும் இந்த பக்கத்திற்கு நீங்கள் சென்றால் தேடுதல் பக்கம் கீழே சரிவதை காணலாம். எதையேனும் தேடினாலும் புவியீர்ப்பால் அவை கீழே விழுவது போல இருக்கும்.


- பிரபு கிருஷ்ணா

விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1


கூகுள் தனது தேடுதலில் பல புதிய விசயங்களை செய்து வருவது எல்லோருக்கும் தெரியும். அது மட்டும் இல்லாமல் தேடும் போது கொஞ்சம் காமெடி ஆக இருக்கும் விசயங்களையும் செய்து வருகிறது.இது போன்று செய்வதை கூகுள் "Easter Eggs" என்று அழைக்கிறது.  சும்மா விளையாட்டு என்று நாம் சொல்வோமே அது போல. அவற்றை பற்றி இன்று பார்ப்போம். 

இவற்றில் பெரும்பாலானவை Google.com - இல் மட்டுமே வேலை செய்யும்.


1.conway's game of life


இது மிக சமீபத்திய உருவாக்கம். Conway's Game of Life என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதை கூகுளில் தேடும் போது வலது பக்கம் கட்டம் கட்டமாக அனிமேஷன் ஆவதை காணலாம். 




2. zerg rush


இதை தேடும் போது உங்கள் தேடுதல்களை வந்து விழும் பூஜ்ஜியங்கள் தின்று கொண்டிருக்கும். எல்லா லிங்க்களையும் தின்ற பிறகு "GG" என்று வந்து நிற்கும். இதன் பொருள் "Good Game"


3. qingming festival


தேடுதலின் வலது புறம் அழகிய மரத்தை வளர்க்கிறது இது.


4. binary


உங்கள் தேடுதல் முடிவுகளை எவ்வளவு, எத்தனை நொடிகளில் என்று Binary-யில் காட்டும். [வெறும் 1,0 ஆக மட்டும் காட்டும்]


5. kerning


தேடுதலில் கிடைக்கும் kerning என்ற வார்த்தையின் எழுத்துக்களின்  இடைவெளி மட்டும் அதிகமாக இருக்கும்.


6. kwanzaa - இப்போது இல்லை


உங்கள் தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் ஏழு மெழுகுவர்த்திகள் கொண்ட தொடர் வரிசையாக இருக்கும். இது பண்டிகை காலங்களில் அமெரிக்காவில் செய்யப்படுவது.



7. santa claus - இப்போது இல்லை


கிருஸ்துமஸ் நேரத்தில் மட்டும் இது வரும் என்று நினைக்கிறேன். தேடுதலின் போது தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் கிருஸ்துமஸ் விளக்குகள் இருக்கும். 




8. hanukkah - இப்போது இல்லை


தேடுதலின் போது தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் Star போன்ற லைட்கள் தொடராக இருக்கும். 




9. let it snow - இப்போது இல்லை


2011 டிசம்பரில் இருந்து 2012 ஜனவரி வரை இருந்தது. இதை கூகுளில் தேடினால் உங்கள் தேடுதல் முடிவுகள் முழுவதும் பனியால் மூடப்படுவது போல் மாறிவிடும்.


10. tilt அல்லது askew


இதை இரண்டையும் தேடும் போது உங்கள் தேடுதல் முடிவில் வலது புறமானது இடது புறத்தை விட உயரம் குறைவாக ஒரு மாதிரி சாய்ந்து இருக்கும். 


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். மற்றவற்றை நாளைய பதிவில் காண்போம்.

- பிரபு கிருஷ்ணா

உங்கள் Yahoo Voice கணக்கு Hack செய்யப்பட்டுள்ளதா எனக் கண்டறிவது எப்படி?


இரண்டு நாட்களுக்கு முன்பு Yahoo Voices பயனர்களின் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டன. மொத்தம் 4,53,000 பயனர்களின் விவரங்கள் இதில் அடங்கும்.D33D என்ற குரூப்பை சேர்ந்தவர்கள் இதை செய்துள்ளார்கள். உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்று செக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Browser Bookmark-களை Import and Export செய்வது எப்படி ?


இணையம் பயன்படுத்துவோர் அனைவரும்  சந்திக்கும் பொதுவான பிரச்சனை Browser crash  ஆவது.மீண்டும் நிறுவி கொள்ளலாம் என்றாலும் நாம் சேமித்து வைத்திருக்கும் Bookmarks ஐ இழந்து விடுகிறோம். அதிகமான bookmarks சேமித்து வைத்திருப்பவர்கள் Browser crash  ஆகிவிட்டால்  அதிகமாக பாதிக்க படுவார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி?

Collage Maker என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?


பேஸ்புக்கில் பகிர நிறைய படங்கள் இருக்கிறதா?. அவற்றை எல்லாவற்றையும் பகிர்ந்தால் நண்பர்கள் அனைத்தையும் பார்க்க முடியாது என்று நினைக்கிறீர்களா? எல்லா படங்களையும் ஒரே படத்தில் இணைத்து பகிர முடிந்தால் எப்படி இருக்கும்? அதற்கு உதவும் மென்பொருள்/பயன்பாடு பற்றிதான் இன்று பார்க்க போகிறோம். 

Collage Maker என்பது தற்போது பிரபலமாகி வரும் Digital Scrapbook மென்பொருள். இதன் மூலம் உங்கள் பல புகைப்படங்களையும் ஒன்றிணைத்து ஒரே படமாக மாற்ற முடியும். மிக அழகான Frame, Border, Template, Backgrounds, Clip Art மற்றும் பல Effect-களை உங்கள் படத்தில் சேர்க்க முடியும். 

இதை பல தளங்கள் ஆன்லைன் மூலம் செய்யும் வாய்ப்பை வழங்கி உள்ளன என்றாலும் சில மென்பொருட்களும் இதற்கு உள்ளன. நாம் பார்க்க உள்ளது Pic Monkey தளத்தில் எப்படி இதை உருவாக்குவது என்று பாப்போம்.

1. PicMonkey தளத்துக்கு முதலில் செல்லுங்கள். அதில் Create a Collage என்பதை கிளிக் செய்யுங்கள்.

2. இப்போது இடது புறம் கீழே உள்ளது போல 3 வசதிகள் இருக்கும்.


  • முதலாவதில் புகைப்படங்கள் upload செய்ய முடியும். 

  • இரண்டாவதில் புகைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற Layout வசதி. இதில் எத்தனை புகைப்படங்கள் ஒரே படத்தில் நீங்கள் இணைக்க வேண்டும் என்று யோசித்து தெரிவு செய்யவும். 

  • மூன்றாவது படத்தின் பின்னணியை மாற்ற உதவுகிறது. 

முதலாவதில் மூலம் படங்களை Upload செய்யுங்கள், Layout மாற்ற வேண்டும் என்றால் மாற்றி விட்டு படங்களை Drag செய்து வலது புறம் போடுங்கள். 

படத்தை எங்கே வேண்டும் என்றாலும் போடலாம். போட்டு முடித்து விட்டு Save செய்ய. மேல் பகுதியில் உள்ள Save என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

மிக அருமையான Collage Photo ரெடி. நான் என் படங்களை கொண்டு உருவாக்கிய Collage Photo கீழே உள்ளது. PicMonkey தளத்தில் இதன் மூலம் நீங்கள் Facebook Cover Photo கூட உருவாக்க இயலும்.

படங்களை பார்த்து விட்டு யாருக்கேனும் கண் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல

இதை நீங்கள் மேலே முதல் படத்தில் உள்ளது போல செய்ய விரும்பினால் மற்ற தளங்களை பயன்படுத்தலாம்.

இதை செய்ய உதவும் மற்ற சில தளங்கள்:

  1. Photovisi
  2. Photo Collage
  3. Kizoa
  4. Picture2Life
  5. Postermywall
  6. Zefrank
  7. FotoFlexer
  8. fotonea
மென்பொருட்கள்: 

- பிரபு கிருஷ்ணா