VLC Player செய்யும் விநோதங்கள் - 1 | கற்போம்

VLC Player செய்யும் விநோதங்கள் - 1


VLC Player நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எல்லோரும் அதைப் பயன்படுத்தி தான் நமது வீடியோக்களை காண்போம். வெறும் வீடியோ ப்ளே செய்யும் வசதியை மட்டும் தராமல் இன்னும் நிறைய வசதிகளை கொண்டுள்ளது இது. அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள். 

1. Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி? 

சில சமயம் ஒரு வீடியோ நாம் ப்ளே செய்தால், அதில் உள்ளவர் பேசி முடித்த சில நொடிகள் கழித்தே ஆடியோ வரும். அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம். 

VLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.



2. Watermark ஆக நமது பெயர்/படம் கொடுப்பது எப்படி ?

சில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை ப்ளே செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம். 

Tools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம். (வீடியோ ப்ளே ஆகும் போது மட்டும் இவை)



3. Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி? 

நிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும். Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள். 

வரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவும். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து கீழே படத்தில் உள்ளது போல செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது) 

படத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும். 



4. Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி? 

இது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video --> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.


அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் அசத்தலான வசதிகள் பற்றி காண்போம். 

- பிரபு கிருஷ்ணா

15 comments

நிறைய வசதி இருக்கும் போலிருக்கே., அடுத்த பாகத்தையும் தவறவிடாமல் வாசிக்கிறேன் :)

Reply

தமிழில் விவரணங்களை காட்டுவதில் மற்ற மென்பொருள்களைப் போலவே புதிய VLC-யிலும் இடர்ப்பாடுகள் உள்ளன. எழுத்துக்கோர்வை சரியாக இல்லை. இதை சரிசெய்ய ஏதேனும் வழி இருக்கிறதா?

Reply

அடுத்த பாகத்தையும் தவறவிடாமல் வாசிக்கிறேன் :)

Reply

இத்தனை விசயங்கள் இருக்கா ! அடுத்த பதிவிலும் தெரிந்து கொள்கிறேன். நன்றி !

Reply

நாளைய பதிவில் வரும் நண்பா.

Reply

நாளைய பதிவில் வரும்.

Reply

நீங்கள் தமிழில் உள்ள எதை VLC மூலம் ஓபன் செய்தீர்கள்? வீடியோ, ஆடியோ போன்றவற்றில் நீங்கள் சொல்வது போல வர வாய்ப்பில்லையே.

Reply

புதிய VLC player ஒருங்குறி எழுத்துருக்களை ஏற்றுக்கொள்வதால், பரிசோதிக்கும் முகமாக, 12 Angry Men படத்திற்கு ஆங்கில விவரண இழையில் (subtitle file) துவக்கத்தின் சில பகுதியை மட்டும் தமிழில் மொழி பெயர்த்து பார்த்தேன்.

Reply

desk top ல் வீடியோ ஓட கூடிய அதிசயம் இந்த playerல் மட்டுமே.
இன்னும் எவ்வளவோ அதிசயம் கொட்டிக்கிடக்கிறது.

Reply

நிஜமாவா சொல்றீங்க...வி.எல்.சி. யில இத்தனை இருக்கா? ஓ.காட்... நான் நிறைய தெரிஞ்சுகிட்டேன்.

Reply

இன்னும் நிறைய இருக்குங்க.

Reply

ம்..... இவ்வளவு இருக்கா? இப்பவே கண்ணைக் கட்டுதே.

Reply

அநேகமாக இது எழுத்துரு காரணமாக இருக்கலாம். வேறு சிலவற்றை முயற்சித்து பாருங்கள்.

Reply

Post a Comment