MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள் | கற்போம்

MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள்

நாம் அனைவரும் MS Office தான் அதிகமாக உபயோகிக்கிறோம். நாம்  Project செய்யும் பொழுதோ அல்லது presentation செய்யும் பொழுதோ MS Office ஐ தான் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஆனால் இறுதி கட்டத்தில் MS Office இல் ஏதாவது பிரச்சனை என்றாலோ அல்லது நாம் பயன்படுத்த வேண்டிய கணினியில் MS Office இல்லாவிட்டாலோ பிரச்சினை தான். அதை தவிர்க்க, தரவிறக்கம் செய்யவும் குறைந்த அளவில் இலவசமாக கிடைக்கும் சில மாற்று மென் பொருட்கள் குறித்து பார்ப்போம். 




MS Office க்கு அடுத்து அதிக அளவில் உபயோக படுத்தப்படும் மென்பொருள் இது. முற்றிலும் இலவசமானது. word processing, spreadsheets, presentations, graphics, databases அனைத்தையும்  சப்போர்ட் செய்கிறது.இது ஒரு Open Source மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு. 





உபயோக படுத்துவதற்கு மிகவும் எளிதானது, முற்றிலும் இலவசமானது, MS Office கோப்புகளை இதில் எந்த Extension மாற்றமும் செய்யாமல் ஓபன் செய்யலாம். இதுவும் ஒரு Open Source மென்பொருள்.




அதிக Tool களை கொண்டது இந்த மென்பொருள், பயன்படுத்துவதற்கு எளிதானது, நிறைய  Tool களை கொண்டதால் பயன்பாடும் அதிகம். முற்றிலும் இலவசமானது. மொத்தம் மூன்று பயன்பாடுகளை உள்ளடக்கியது. Lotus Symphony Documents, Lotus Symphony Spreadsheets and Lotus Symphony Presentations.

குறிப்பிடத்தக்க மற்ற சில இலவச மென்பொருட்கள்:

4. Calligra suite


5. Koffice


6. GNOME Office

தவறாமல் இதில் எதோ ஒன்றை Back up ஆக வைத்துகொள்ளுங்கள்.

ஆன்லைன் ஆபீஸ் டூல்ஸ் :

தரவிறக்கம் செய்யவெல்லாம் எனக்கு நேரம் இல்லை, என்ன செய்வது என்று கேட்பவர்கள் இந்த ஆன்லைன் டூல்களை பயன்படுத்தலாம். 


Word processor, Spreadsheet, மற்றும் Presentation போன்றவற்றை இதன் மூலம் ஆன்லைனில் செய்து கொள்ளலாம். அத்தோடு Business Cards, Resumes, Calendars and Tables போன்றவற்றுக்கு நூற்றுக்கும் மேற்ப்பட்ட Template-கள் உள்ளன. இதை பயன்படுத்த ஜிமெயில் அக்கௌன்ட் மட்டும் போதும்.

2. Zoho

இது Word Document, Spreadsheet, மற்றும் Presentation போன்றவற்றை தனிப்பட்ட தேவைக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் உருவாக்க அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் இந்த தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும். 

- K .P .சூர்ய பிரகாஷ் 

14 comments

உண்மையில் அருமையான தகவல் இதில் எதையாவது ஒன்றை பயன்படுத்தி பார்க்க வேண்டும் இதை பயன்படுத்த எளிமையாய் இருக்குமா

camera வழியாக translate செய்யலாம்

Reply

நன்றி நண்பரே

Reply

மிகப் பயனுள்ள தகவல்
நன்றி

Reply

நன்றி அய்யா

Reply

நமக்கு Open Office பத்தி தெரியும், மத்தது எல்லாமே புதுசு., மச்சி நீ படிக்க வேண்டியது ரொம்ப இருக்குடோய்ன்னு உள் நெஞ்சில் நினைச்சு பார்க்கிறேன் :)

Reply

:)) நன்றி நண்பரே

Reply

Open Office தெரியும். மற்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் ! நன்றி !

Reply

நன்றி நண்பரே

Reply

MS Office போன்ற ஒரு incompatible Office பயன்பாடு உலகில் கிடையாது.. (வேறு எதுவும் திறக்காது)

Open Office, Libre Office இவற்றைப் பயன்படுத்திய வகையில் சொல்கிறேன்...

இவற்றில் உருவாக்கப்பட்ட ஆவணங்களை PDF ஆக மாற்ற தனியே ஒரு மென்பொருள் தேவையில்லை.. Inbuilt ஆக உண்டு!!

MS Office இல் செய்யும் Alignment உட்பட எதுவும் மாறாமல் Libre Office இல் பார்க்க/ மாற்ற முடியும்!!
ஆனால், ஓப்பன் சோர்ஸ் வடிவில் சேமிக்கும் ஆவணங்களை (.odt) MS Office இல் திறக்க முடியாது!! எனவே, பல்வேறு கணிணிகளுக்கு இடையே பயணிப்பவர்கள் MS Office Extension இலேயே சேமித்தல் நலம்..

Reply

ஆஹா இதை தான் தேடிக்கொண்டிருந்தேன் நல்ல பதிவு நன்றி நண்பா....

Reply

நானும் ஓபன் ஆபீஸ் மற்றும் லிபர் ஆபீஸ் பயன்படுத்தி இருக்கிறேன் ஆனால் லோட்டஸின் சிம்பொனியை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
நன்றி.

Reply

ஆம் சகோ. நீங்கள் சொல்வது சரிதான்.

Reply

பயன்படுத்தி விட்டு சொல்லுங்கள் சகோ.

Reply

Post a Comment