Google Plus-ல் ஒரு Event உருவாக்குவது எப்படி? | கற்போம்

Google Plus-ல் ஒரு Event உருவாக்குவது எப்படி?

Google Plus தளம் கஷ்டப்பட்டு பேஸ்புக் வசதிகள் ஒவ்வொன்றாய் தனது பக்கத்தில் கொண்டு வருகிறது. அந்த வகையில் புதியதாக வந்துள்ள ஒன்று தான் Google + Events. ஆனால் பேஸ்புக் Events-ஐ காட்டிலும் நிறைய வசதிகள் உள்ள இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.


1. முதலில் Google+  தளத்துக்கு செல்லவும். 

2. சிலருக்கு Event Create செய்ய வேண்டுமா என்று ஆரம்பத்திலேயே கேட்கும், இல்லை என்றால் இடது பக்கம் கீழே உள்ளது போல உள்ள icon மீது கிளிக் செய்யவும். 


3. இப்போது வரும் பக்கத்தில் உங்கள் நண்பர்கள் கலந்து கொள்ளும் Event-களும் இருக்கும். அதில் உங்கள் உங்களுக்குக்கு விருப்பம் இருந்தால் Are You Going என்பதை கிளிக் செய்து Yes என்பதை தரலாம். 

4. நீங்கள் Event உருவாக்க Create Event என்பதை கிளிக் செய்யவும். இப்போது ஒரு விண்டோ வரும் அதில் கீழே போல நிரப்பவும். 

5. முதலாவதாக மேலே உள்ள படத்தை "Change Theme" என்பதை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். 


படத்துக்கு கீழே Event தலைப்பு, நாள், நேரம், இடம், Event பற்றிய தகவல், போன்றவற்றை கொடுத்து கடைசி கட்டத்தில் கூகுள் பிளஸ் நண்பர்கள் பெயரை கொடுத்து Invite கொடுத்து விடவும். 

6. Event Options என்பதில் கீழே உள்ளது போல இருக்கும். இதை விருப்பம் இருந்தால் நீங்கள் மாற்றலாம், இல்லை என்றால் விட்டு விடலாம். 


7. இதில் Advanced என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள விண்டோ வரும். 


முதலாவது "Google+ Hangout" அந்த Event Online-ல் நடக்கிறது என்று சொல்ல, அடுத்து  "Make This An Event on air" என்பது அந்த Event Public என்பதை சொல்ல. அடுத்த "Show Additional Fields" என்பதை கிளிக் செய்தால் Event குறித்த இன்னும் சில தகவல்களை சேர்க்கலாம். 

இப்போது நீங்கள் invite செய்த நண்பர்களுக்கு Event குறித்த மின்னஞ்சல் செல்லும், அவர்கள் விருப்பம் இருந்தால் இணைந்து கொள்வார்கள். 

Event-க்கு என்று தனி பக்கமும் உருவாகி விடும். அதில் நீங்கள் படங்கள், செய்தி என ஏதாவது பகிரலாம்.  நான் சோதனைக்கு உருவாக்கிய Event பக்கம் இங்கே -  ஊர் சுத்தப் போறோம்

- பிரபு கிருஷ்ணா

5 comments

Post a Comment