Alan Turing க்கு கூகுள் செய்த சிறப்பு - Google Doodles | கற்போம்

Alan Turing க்கு கூகுள் செய்த சிறப்பு - Google Doodles


Google Doodles என்பது பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். இதில் பெரும்பாலும் உலகின் தலை சிறந்த மேதைகளை பெருமை படுத்தும் வகையில் அடிக்கடி Google Doodle உருவாக்கப்படும். அந்த வகையில் இன்று அலன் டூரிங் அவர்கள் பிறந்த நாளை சிறப்பிக்கிறது. இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அதைத்தான் இந்த பதிவு விளக்கப் போகிறது. 

முதலில் யார் இந்த அலன் டூரிங் ?

//அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 ஜூன் 1912 – 7 ஜூன் 1954) ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.//


இவர் தந்தை இந்தியாவில் பணி புரிந்து பின்னர் இங்கிலாந்து சென்றவர். தனது 41 வயதில் மரணமடைந்த இவருடைய 100-ஆவது பிறந்த நாள் இன்று. 

இந்த மேதையை சிறப்பிக்கும் வகையில், அவரது துறையான கணிதத்தையே Google Doodle க்கு பயன்படுத்தி உள்ளது. இது நாள் வரை வெறும் பார்க்க மட்டுமே இருந்த Google Doodle-கள் மத்தியில் இது சில குறிப்புகளை கொண்டுள்ளது. ஒரு சசிறிய விளையாட்டு போல இது உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலே படத்தில் உள்ளது போல முதலில் வரும், ஒரு Play Button, Binary எண்கள் என்று உள்ள இது ஒரு Task. ஒவ்வொரு டாஸ்க்கையும் முடித்தால் Google என்பதில் ஒவ்வொரு எழுத்தும் தெரிய ஆரம்பிக்கும். எல்லாவற்றையும் தெரியும்படி செய்து விட்டால் நீங்கள் வெற்றி. [ஏற்கனவே Google தெரியுதே என்பவர்கள் அது வழக்கமான நிறத்தில் இல்லை என்பதை கவனிக்க]

இதை எப்படி Solve செய்வது என்று கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

முதலாவதை மட்டும் நான் விளக்குகிறேன்:

முதலில் இரண்டு பூஜ்ஜியங்களின் மீதும் கிளிக் செய்யவும், பின்னர் Play/Run பட்டனை கிளிக் செய்யவும். இப்போது கூகுள் மேலே குட்டி கட்டத்தில் உள்ளதையும், நீங்கள் அமைத்ததையும் சரி பார்க்கும் இரண்டும் சரியாக இருந்தால் G - Enable ஆகும். அடுத்த டாஸ்க் ஆரம்பிக்கும். இது போல எல்லாவற்றுக்கும். 


வெறும் தகவல்களை தேடி தரும் வேலையை மட்டும் செய்யாமல், இது போன்று நிறைய, அரிய முயற்சிகளை செய்வதால் தான் கூகுள் இணையத்தில் நிலைத்து நிற்கிறது போலும்.

- பிரபு கிருஷ்ணா

10 comments

வீடியோவிற்கு பதில் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். முயற்சித்தேன், ஒன்றும் புரியவில்லை.

Reply

ஒவ்வொரு எழுத்துக்கும் விளக்கம் கொடுத்தால் பதிவு பெரிதாகி விடும் என்பதால் தான் வீடியோவை இணைத்தேன்.முதலாவதை மட்டும் நான் பதிவில் சொல்லி உள்ளேன். :-)

Reply

I was not able to solve this, but my 14 year old son solved the first level. He tried to explain to me, but I could understand nothing. I am told there are 10 levels in this.

Reply

Ya i completed my first level using this video ;-). but i didn't try others.

Reply

very good explanation, Thank you

Reply

அருமை அருமை - பைனரி எண்கள் தெரிந்தவர்கள் எளிதில் செய்ய்லாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Post a Comment