June 2012 | கற்போம்

Blogger Posts & Sidebar க்கு Border சேர்ப்பது எப்படி?

சில புதிய பிளாக்கர் Tempalte களை நாம் பார்க்கும் போது அதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். பல நேரங்களில் நாம் அதில் Sidebar மற்றும் Post களுக்கு Border எதுவும் இல்லாமல் வெறுமனே இருந்தால் அதை பயன்படுத்த மனமின்றி விட்டு விடுவோம். இனி அவ்வாறு இருந்தால் நீங்களே Border சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

Google Plus-ல் ஒரு Event உருவாக்குவது எப்படி?

Google Plus தளம் கஷ்டப்பட்டு பேஸ்புக் வசதிகள் ஒவ்வொன்றாய் தனது பக்கத்தில் கொண்டு வருகிறது. அந்த வகையில் புதியதாக வந்துள்ள ஒன்று தான் Google + Events. ஆனால் பேஸ்புக் Events-ஐ காட்டிலும் நிறைய வசதிகள் உள்ள இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

உங்கள் ஈமெயில் ஐடியை மறைக்கும் பேஸ்புக்/Facebook

பேஸ்புக் நிறுவனம் செய்யும் பல மாற்றங்களை பயனர்களுக்கு தெரிவிப்பதே இல்லை. அதில் இப்போது செய்துள்ள ஒன்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை மறைத்து, தனது தள மின்னஞ்சல் முகவரியை மட்டும் உங்கள் நண்பர்களுக்கு காட்டுகிறது பேஸ்புக். என்ன அது? 

உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பும் பேஸ்புக் நண்பர் அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி தேடினால் இனி எடுக்க முடியாது. உங்கள் மின்னஞ்சல் முகவரியை மறைத்து விட்டு அதற்கு பதில், உங்கள் பயனர் பெயருக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்கி உள்ளது. அதாவது நீங்கள் Yahoo, Gmail என்று வைத்து இருந்தால் உங்கள் நண்பருக்கு அது தெரியாது மாறாக myname@facebook.com என்று தான் தெரியும். கீழே உள்ளது போல. 



இப்போது நான் நண்பர் வரலாற்று சுவடுகள் அவர்களை தொடர்பு கொள்ள நினைத்தால் அவரது பேஸ்புக் ஐடி க்கு மின்னஞ்சல் செய்ய வேண்டி வரும். அவர் பார்ப்பாரா இல்லையா என்று வேறு எனக்கு தெரியாது.

இது சில பேருக்கு நல்லது தானே என்று தோன்றினாலும், நீங்கள் பேஸ்புக் பக்கம் வரவிட்டால் உங்கள் நண்பர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்ததும் தெரியாது. இன்னும் பலர் பேஸ்புக்கில் மெயில்களை படிக்கவே மாட்டார்கள். அவசரத்துக்கு ஆகாத இதை மாற்றி விட்டு பழையபடி உங்கள் மின்னஞ்சலை கொண்டுவருவதே நல்லது.

முதலில் உங்கள் Profile/Timeline சென்று அதில் "About" என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது மேலே படத்தில் உள்ளது போல "Contact Info" பகுதியில் Edit என்பதை கிளிக் செய்யவும். இப்போது கீழே படத்தில் 1-இல் உள்ளதை 2-ல் உள்ளது போல மாற்றவும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட மேற்ப்பட்ட முகவரிகள் கொடுத்து இருந்தால் அதிகம் பயன்படுத்துவதை மட்டும் படத்தில் உள்ளது போல் Show Time ஆக கொடுத்து விடலாம். 


Show Timeline/Hide Timeline

யார் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பார்க்க முடியும்?


மேலே நான் என் நண்பர்கள் மட்டும் எனது மின்னஞ்சலை பார்க்கும் படி தெரிவு செய்துள்ளேன். மற்றவர்கள் அதை பார்க்க முடியாது. நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு மட்டும் செய்யலாம். அல்லது Custom மூலம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம். 

அவ்வளவே, இனி உங்களை உங்கள் நண்பர்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம். 

உங்கள் ஈமெயில் ஐடியை உங்கள் நண்பர்கள் பார்ப்பது பிடிக்கவில்லை என்றால், நீங்கள் இதை செய்யத் தேவையில்லை. 

- பிரபு கிருஷ்ணா

Microsoft Security Essentials - சிறந்த இலவச ஆண்டி வைரஸ்


நம்மில் பெரும்பாலும் இலவச மென்பொருள்களையே பயன்படுத்த விரும்புவோம். முக்கியமாக ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் கட்டணமாக கிடைத்தாலும் அதன் இலவச வெர்சனை தான் பயன்படுத்துவோம். கட்டண மென்பொருள் என்பதை தாண்டி அவற்றின் அதிகபட்ச விலையும் இதற்கு ஒரு காரணம். இந்த நிலையில் ஒரு இலவச ஆண்டி வைரஸ் உங்கள் கணினிக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கினால்? 

ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளான "Microsoft Security Essentials" தான் அந்த மென்பொருள். 2009 ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே ஆண்டில் 3 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டது இந்த மென்பொருள்.



சிறப்பம்சங்கள்:
  1. இலவச மென்பொருள் 
  2. மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பு 
  3. computer viruses, spyware, Trojan horses and rootkits போன்ற பல வகையான  மால்வேர்களை நீக்குகிறது.
  4. கணினி வேகத்தை குறைப்பதில்லை. 
இது மட்டும் இன்றி மேலும் பல பயன்களை உள்ளடக்கியது இந்த மென்பொருள். 

இதை தரவிறக்கம் செய்ய என்ன வேண்டும்? 

Windows XP - 256 MB RAM & 500MHz Processor. 
Windows Vista & Windows 7 - 1GB RAM, 1GHz Processor. 

இது மேலே உள்ள மூன்று இயங்கு தளங்களிலும் இயங்கும். 

இதை எல்லாம் விட மிக மிக முக்கியமாக நீங்கள் Genuine Windows Operating System பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். 

கடைசி வரி நிறைய பேருக்கு வருத்தம் அளிக்கக் கூடியது, ஏன் என்றால் இது எல்லோராலும் முடியாது. ஒரு Operating System வாங்க மட்டும் குறைந்த பட்சம் 5000 ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும். இதை தான் Genuine Operating System என்று சொல்வார்கள். [இதன் மூலம் எண்ணிலடங்கா பயன் உள்ளது என்பது வேறு விஷயம்]. ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் தெரிந்தவர், நண்பர்கள் இவர்கள் மூலமே Operating System போட்டு இருப்போம். அப்படி செய்தவர்கள் இதை பயன்படுத்த இயலாது. 

ஆனால் தற்போது புதியதாக கணினி மற்றும் மடிக்கணினி வாங்கும் போது உங்களுக்கு இலவசமாக Genuine Operating System ஆனது தரப்படுகிறது. [பெரும்பாலான கணினி நிறுவனங்கள் இதை செய்கின்றன.] எனவே அவர்கள் இதனை தரவிறக்கம் செய்யலாம். 

என்னுடையது Genuine Operating System தானா என்று கண்டுபிடிப்பது எப்படி? 

இதற்கு இரண்டு எளிய வழிகள் உள்ளன XP பயனர்கள் இந்த இணைப்பில் சென்று செக் செய்யலாம். ஒரு அப்ளிகேசன் டவுன்லோட் ஆன பின்பு இதை செய்திடலாம். இதில் உறுதியானால் நேரடியாக Microsoft Security Essentials பக்கத்திற்கு நீங்கள் வந்து விடுவீர்கள். 

Windows 7 பயனர்களும் மேலே உள்ளதை செய்யலாம். அல்லது My Computer மீது ரைட் கிளிக் செய்து Properties பகுதிக்கு சென்று, அதில் கீழே உள்ளது போல வந்தால் உங்களுடையது Genuine OS ஆகும். 



உங்கள் OS Genuine தான் என்றால் இனி நீங்கள் Microsoft Security Essentials- ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

அதற்கான இணைப்பு -Microsoft Security Essentials

- பிரபு கிருஷ்ணா

Alan Turing க்கு கூகுள் செய்த சிறப்பு - Google Doodles


Google Doodles என்பது பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். இதில் பெரும்பாலும் உலகின் தலை சிறந்த மேதைகளை பெருமை படுத்தும் வகையில் அடிக்கடி Google Doodle உருவாக்கப்படும். அந்த வகையில் இன்று அலன் டூரிங் அவர்கள் பிறந்த நாளை சிறப்பிக்கிறது. இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அதைத்தான் இந்த பதிவு விளக்கப் போகிறது. 

முதலில் யார் இந்த அலன் டூரிங் ?

//அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 ஜூன் 1912 – 7 ஜூன் 1954) ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.//


இவர் தந்தை இந்தியாவில் பணி புரிந்து பின்னர் இங்கிலாந்து சென்றவர். தனது 41 வயதில் மரணமடைந்த இவருடைய 100-ஆவது பிறந்த நாள் இன்று. 

இந்த மேதையை சிறப்பிக்கும் வகையில், அவரது துறையான கணிதத்தையே Google Doodle க்கு பயன்படுத்தி உள்ளது. இது நாள் வரை வெறும் பார்க்க மட்டுமே இருந்த Google Doodle-கள் மத்தியில் இது சில குறிப்புகளை கொண்டுள்ளது. ஒரு சசிறிய விளையாட்டு போல இது உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலே படத்தில் உள்ளது போல முதலில் வரும், ஒரு Play Button, Binary எண்கள் என்று உள்ள இது ஒரு Task. ஒவ்வொரு டாஸ்க்கையும் முடித்தால் Google என்பதில் ஒவ்வொரு எழுத்தும் தெரிய ஆரம்பிக்கும். எல்லாவற்றையும் தெரியும்படி செய்து விட்டால் நீங்கள் வெற்றி. [ஏற்கனவே Google தெரியுதே என்பவர்கள் அது வழக்கமான நிறத்தில் இல்லை என்பதை கவனிக்க]

இதை எப்படி Solve செய்வது என்று கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

முதலாவதை மட்டும் நான் விளக்குகிறேன்:

முதலில் இரண்டு பூஜ்ஜியங்களின் மீதும் கிளிக் செய்யவும், பின்னர் Play/Run பட்டனை கிளிக் செய்யவும். இப்போது கூகுள் மேலே குட்டி கட்டத்தில் உள்ளதையும், நீங்கள் அமைத்ததையும் சரி பார்க்கும் இரண்டும் சரியாக இருந்தால் G - Enable ஆகும். அடுத்த டாஸ்க் ஆரம்பிக்கும். இது போல எல்லாவற்றுக்கும். 


வெறும் தகவல்களை தேடி தரும் வேலையை மட்டும் செய்யாமல், இது போன்று நிறைய, அரிய முயற்சிகளை செய்வதால் தான் கூகுள் இணையத்தில் நிலைத்து நிற்கிறது போலும்.

- பிரபு கிருஷ்ணா

ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இணையத்தில்?

ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கும்? இந்த கேள்விக்கு ஒரு நிமிடம் யோசித்து தான் எல்லோரும் பதில் சொல்வோம். ஆனால் இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா? 1,00,000 ட்வீட்டுகள், 684,478 பேஸ்புக் ஷேர்கள், 2,000,000 கூகுள் தேடல்கள் , ஆன்லைன் மூலம் 272,070$ க்கு பொருட்கள் வாங்கப்படுகின்றன. 

இதே போல இன்னும் நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. அனைத்தும் இந்த படத்தில் உள்ளது. 



படத்தை இன்னும் பெரியதாக காண - இங்கே கிளிக் செய்யவும்

Original News & Image - How Much Data Is Created Every Minute? [INFOGRAPHIC]

- பிரபு கிருஷ்ணா

Youtube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி? - VLC#3

கடந்த இரண்டு VLC பற்றிய பதிவுகளில் பல அரிய பயனுள்ள செயல்களை எப்படி VLC மூலம் செய்வது என்று சொல்லி இருந்தேன். இன்றைய பதிவு நிறைய பேருக்கு புதியது. ஆம் இன்றைய பதிவில் Youtube வீடியோ ஒன்றை எப்படி VLC மூலம் டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.

Feedburner என்றால் என்ன? அதன் மூலம் வலைப்பூ வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?


Feedburner என்பது ஒரு வலைப்பூவை தொடர நினைப்பவர்களுக்கு ஈமெயில் அல்லது RSS Feed வழியாக தொடர உதவுவது. இது உங்கள் பதிவை அவர்கள் மின்னஞ்சலுக்கோ அல்லது RSS Reader-க்கோ அனுப்பி வைக்கும்.இதன் மூலம் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

1. முதலில் Feedburner தளத்துக்கு சென்று உங்கள் ஈமெயில் கணக்கை கொண்டு லாகின் அல்லது Sign Up செய்யவும்.(ஜிமெயில் கணக்கு இருந்தால் லாகின் செய்யலாம்.)

2. இப்போது கீழே படத்தில் உள்ளது போல வரும் பக்கத்தில் அம்புக்குறி உள்ள இடத்தில் உங்கள் வலைப்பூ முகவரி தரவும். 


3. அடுத்த பக்கத்தில் வரும் இரண்டு Feed-களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யவும். 

4. அடுத்து உங்கள் Feed-க்கு Title மற்றும் முகவரி தர வேண்டும். இதில் முகவரி மிகவும் முக்கியமானது. இதை பின்னால் நீங்கள் மாற்ற முடியாது. (மாற்றினால் உங்களை பின்தொடர்பவர்கள் கணக்கு பூஜ்ஜியத்துக்கு வந்து விடும்) எனவே இதில் கவனம் செலுத்தவும்.



5. இப்போது உங்கள் Feed தயாராகிவிட்டது. உங்கள் முகவரி இப்போது வரும், அதை கிளிக் செய்தால் உங்கள் Feed-க்கு நீங்கள் செல்லலாம். அதற்கு முன் Next கொடுக்கவும். 

6. அடுத்த பக்கத்தில் எதையும் Clickthroughs, I want more! Have FeedBurner Stats also track என்ற இரண்டையும் கிளிக் செய்யவும்.

7. உங்கள் Feedburner கணக்கு இப்போது ரெடி.

இதில் இனி நீங்கள் செய்யவேண்டியவை.

8. Optimize பகுதியில் Feedflare என்பதில் உங்களுக்கு விருப்பமானவற்றை கிளிக் செய்யவும். 

9. Publicize என்ற பகுதியில் Email Subscriptions, Pingshot, Feedcount, Creative Commons போன்றவற்றை Activate செய்யவும். 

10. Activate செய்த Email Subscriptions பகுதியில் உள்ள கோடிங்கை கோப்பி செய்து புதிய Gadget ஆக உங்கள் வலைப்பூவில் சேர்க்கவும். இது மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைப்பூவை தொடர விரும்பும் நண்பர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். 




11. இப்போது பிளாக்கர் கணக்கில் Settings--> Other என்ற பகுதியில் கீழே உள்ளது போல மாற்றவும். Feed URL என்பது http://feeds.feedburner.com/karpomtestblog என்று தர வேண்டும். இதில் karpomtestblog க்கு பதிலாக உங்கள் Feed Address இருக்க வேண்டும். 




மேலே உள்ளது போல Allow Blog Feed என்பதை Short என்று கொடுப்பதால் மின்னஞ்சல் அல்லது RSS Feed-இல் உங்கள் பதிவின் முதல் பத்தியை மட்டுமே தொடருபவர் அங்கே படிக்க முடியும். மீதிக்கு உங்கள் வலைப்பூவுக்கு வருவார். 

அவ்வளவே இனி எளிதாக மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைப்பூவை தொடர முடியும். 


Feedburner-இல் மேலும் சிலவற்றை மாற்றலாம். அவை குறித்த பதிவுகள்: 


1. Feedburner Email Subscription இல் உங்கள் Logo வரவழைப்பது எப்படி?
2. பீட்பர்னரில் Email Delivery நேரத்தை மாற்ற
3. பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழில் மாற்ற

இதனை பயன்படுத்தும் போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் ஏதேனும் பிரச்சினை என்றால், இந்த பதிவை படிக்கவும். தமிழ்மணத்தில் பிரச்சனை?

- பிரபு கிருஷ்ணா

கூகுள் பிளஸ்ஸில் இருந்து வரும் ஈமெயில்,SMS Notification-களை தடுப்பது எப்படி?


பேஸ்புக்கை அடுத்து நிறைய பேர் பயன்படுத்துவது கூகுள் பிளஸ். நிறைய நண்பர்கள்க்கு இதிலும் ஈமெயில், SMS Notification பிரச்சினை உள்ளதை சொல்லுகிறார்கள். இந்த பதிவில் Notification-களை எப்படி ஈமெயில் மற்றும் போனுக்கு வராமல் தடுப்பது என்று பார்க்கலாம். 

1. முதலில் கூகுள் பிளஸ் அல்லது ஜிமெயில் கணக்கில் நுழையவும். 

2. அதன் வலது புறத்தில் உள்ள உங்கள் படத்தின் மீது கிளிக் செய்யவும்.  அதில் Account என்பதன் மீது கிளிக் செய்யவும். 



3. இப்போது வரும் பக்கத்தில் இடது புறத்தில் Google + என்பதை தெரிவு செய்யவும். 

4. இதில் Receive Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவை இல்லாத Notification களை ஈமெயில் மற்றும் போன் இரண்டிலும் பெறாமல் இருக்க unclick செய்து விடவும். (மொபைல் எண் கொடுத்தவர்களுக்கு மட்டுமே Phone Notification வரும்)



5. அவ்வளவு தான், இனி Notification பிரச்சினை இல்லை.

- பிரபு கிருஷ்ணா

MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள்

நாம் அனைவரும் MS Office தான் அதிகமாக உபயோகிக்கிறோம். நாம்  Project செய்யும் பொழுதோ அல்லது presentation செய்யும் பொழுதோ MS Office ஐ தான் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஆனால் இறுதி கட்டத்தில் MS Office இல் ஏதாவது பிரச்சனை என்றாலோ அல்லது நாம் பயன்படுத்த வேண்டிய கணினியில் MS Office இல்லாவிட்டாலோ பிரச்சினை தான். அதை தவிர்க்க, தரவிறக்கம் செய்யவும் குறைந்த அளவில் இலவசமாக கிடைக்கும் சில மாற்று மென் பொருட்கள் குறித்து பார்ப்போம். 


VLC Player செய்யும் விநோதங்கள் - 2

நேற்றைய பதிவில் VLC Player மூலம் Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி, Watermark கொடுப்பது எப்படி, Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி, Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி என்ற தகவல்களை பார்த்தோம். இன்று "Effects and Filters" பகுதியில் உள்ள வசதிகளை பற்றி காண்போம்.

VLC Player செய்யும் விநோதங்கள் - 1


VLC Player நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எல்லோரும் அதைப் பயன்படுத்தி தான் நமது வீடியோக்களை காண்போம். வெறும் வீடியோ ப்ளே செய்யும் வசதியை மட்டும் தராமல் இன்னும் நிறைய வசதிகளை கொண்டுள்ளது இது. அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள். 

1. Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி? 

சில சமயம் ஒரு வீடியோ நாம் ப்ளே செய்தால், அதில் உள்ளவர் பேசி முடித்த சில நொடிகள் கழித்தே ஆடியோ வரும். அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம். 

VLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.



2. Watermark ஆக நமது பெயர்/படம் கொடுப்பது எப்படி ?

சில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை ப்ளே செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம். 

Tools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம். (வீடியோ ப்ளே ஆகும் போது மட்டும் இவை)



3. Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி? 

நிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும். Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள். 

வரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவும். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து கீழே படத்தில் உள்ளது போல செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது) 

படத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும். 



4. Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி? 

இது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video --> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.


அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் அசத்தலான வசதிகள் பற்றி காண்போம். 

- பிரபு கிருஷ்ணா

30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்

jQuery என்பது ஜாவா ஸ்கிரிப்டில் உள்ள ஒரு நிரல் நூலகம். திறந்த மூல  அனுமதியுடன் இது கிடைக்கிறது. இது தற்போது நிறைய தளங்களில் பயன்படுத்தப்படும் ஒன்று.  பெரும்பாலும் அந்த தளங்களின் செயல்பாட்டில் இருக்கும். ஏற்கனவே HTML, CSS , JScript போன்றவை தெரிந்தவர்கள் இதை படிக்கலாம். 

உங்களிடமிருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது?



நம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை ) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம். கடந்த மாதம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள். 

1. முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும். 

2. கீழே உள்ளது போல சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும். 


3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும். 


இதில் 284 $ என்பது என் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது  பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து  மாறும். அருகில் உள்ள 29.6 $ என்பது கடந்த வார சந்தை மதிப்பு. இப்போது என் மூலம் பேஸ்புக் 259$ சம்பாதிக்கிறது. ஏன் என்றால் இப்போது அதன் சந்தை மதிப்பு 27 $. 

இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகிறது. உங்கள் Privacy தகவலை விற்றுத் தான் பேஸ்புக் சம்பாதிக்கிறது. எப்படி என்பதை இந்தப் படத்தில் காணலாம்.  Facebook Privacy Changes [Zoom செய்து பார்க்கவும்]

- பிரபு கிருஷ்ணா

ஜிமெயில் Attachment-களை எளிதில் தேடுவது எப்படி?

இன்றைக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைவரும் அடிக்கடி நமக்கு தேவையான கோப்புகளை அதில் இணைத்து அனுப்புகிறோம். ஏதேனும் ஒரு சமயத்தில் திடீர் என நமக்கு ஒரு கோப்பு அவசரமாக தேவைப்படும், அந்த சமயத்தில் அது எந்த மின்னஞ்சலில் வந்தது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருப்போம். அதை மிக எளிதாக, உடனடியாக தேடித் தரும் பாதுகாப்பான வசதியைத் தான் நாம் பார்க்கப் போகிறோம். 

முழு தளத்தையும் Screen Shot எடுப்பது எப்படி?

Screen Shot எடுப்பது பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். பல விசயங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் இதை எந்த மென்பொருளும் நிறுவாமலேயே பயன்படுத்த இயலும் என்ற போதிலும், அதை பயன்படுத்தி ஒரு முழு தளத்தையும் [scrolling ஆவதை] நம்மால் ஸ்க்ரீன் சாட் எடுக்க இயலாது. அதற்கு சில மென்பொருள்களை பயன்படுத்தி ஆக வேண்டும் . அதற்கு பயன்படும் மென்பொருள், தளம், Plug-in ஆகியவற்றை பதிவில் காண்போம்.

Mail.com - எளிய பெயரில் ஈமெயில் ஐடி உருவாக்க

மின்னஞ்சல் முகவரி என்பது நமக்கு எப்போதும் இன்றியமையாத ஒன்றாகும். ஜிமெயில் மூலம் இப்போது புதியதாக மின்னஞ்சல் கணக்கு தொடங்க நினைக்கும் ஒருவரால், எண்களை பயன்படுத்தாமல் மின்னஞ்சல் முகவரி உருவாக்க இயலாது(ஆங்கில வார்த்தை கொண்டு). எளிய வகையில் ஈமெயில் முகவரி உருவாக்க உதவும் mail.com பற்றி இன்றைய பதிவில் காண்போம். 

நம்முடைய Facebook Timeline Wall -இல் மற்றவர்களை போஸ்ட் போடாமல் தடுப்பது எப்படி?


நாம் சென்ற பதிவில் Facebook Photo Tag பிரச்சினையை தவிர்ப்பது எப்படி? என்பதை பற்றி பார்த்தோம். ஆனால் எனது Wall-இல் போஸ்ட்களையும் பகிர்கிறார்கள்,அதற்கு  என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு. இதன் மூலம் உங்கள் Timeline-இல் யாரும் போஸ்ட்களை பகிர முடியாது.

Facebook Photo Tag பிரச்சினையை தவிர்ப்பது எப்படி?



முகபுத்தகத்தில் சிலர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நமக்கு சம்மந்தமே இல்லாத புகைப்படங்களில் நம்மையும் இணைத்து விடுவது , இதனால் அந்த புகைப்படம் நாம் விரும்பாமலே நம் டைம் லைனில் வந்து நிற்கும். அத்தோடு அதற்கு வரும் அத்தனை கமெண்ட்களும் நமக்கு Notification ஆக வரும். இதை தவிர்க்கும் வழி பற்றியதே இன்றைய பதிவு.

கற்போம் ஜூன் மாத இதழ் (Karpom June 2012)



கடந்த மாதம் தொழில் நுட்ப உலகில் நிறைய நிகழ்வுகள் நடந்தன. அவற்றில் சிலவற்றையும் அத்தோடு வழக்கம் போல எல்லோருக்கும் பயன்படும் கட்டுரைகளுடன் ஜுன் மாத கற்போம் இதழ் இங்கே.  

இந்த மாத கட்டுரைகள் : 

1. புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன

2. அறிவது நல்லது - தமிழில் கூகிள் பாதுகாப்பு

3. பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்

4. மேம்படுத்தப்பட்ட கூகிளின் தேடல் - Knowledge Graph

5. இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்

6. உங்கள் கூகுள் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து பாதுகாக்க

7. உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு ?

8. கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன

9. ஹாக்கிங்கில் இருந்து பாதுகாப்பு - தொடர்


இதழை தரவிறக்கம் செய்ய 

இணைப்பு ஒன்று - Media fire



இணைப்பு இரண்டு - Ziddu