நண்பர்கள் பலரும் அலைபேசியில் அழைக்கும் போது, என்ன மாதிரி கணினி வாங்கலாம் என்று ஒரு கேள்வி கேட்கின்றார்கள். நன்றாக கணினியில் இயங்கும் நண்பர்கள் என்ற போதும், நிறைய நண்பர்களுக்கு கணினி Configuration எனப்படும் ஒன்று தெரிவது இல்லை. அவற்றைப் பற்றி இன்று விரிவாக காண்போம். இதில் ஒரு புதிய கணினி, மடிக்கணினி நீங்கள் வாங்கும் போது இவற்றை தான் கட்டாயம் பார்க்க வேண்டும்.
Monitor என்ற ஒன்றை தவிர மேசை கணினிக்கும், மடிக் கணினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே கூறும் அனைத்தும் இரண்டுக்கும் சேர்த்தே.
இவை அனைத்தும் இன்றைய நிலைக்கு (May 2012) க்கு சிறந்தவை. நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் புதியதாக மார்க்கெட்டில் என்ன உள்ளது என்று பார்த்து வாங்கவும்.
1. Processor
இது தான் உங்கள் கணினியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு (மே 2012), நீங்கள் வாங்கும் கணினியில் Processor Intel Core 2 Duo என்பதை கடைசியாக கொள்ளலாம். Pentium (1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i 7.
அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் உங்கள் கணினியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும்(ஏன் என்று விளக்க தனி பதிவே எழுத வேண்டும், எனவே அதை தனியே சொல்கிறேன்.).
2. RAM
உங்கள் கணினியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே. எனவே இது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால் வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC Bus கள் போல மெதுவாக தான் உங்கள் கணினி இயங்கும்.
தற்போதைய நிலையில் (May 2012) 4GB RAM என்பது சரியான ஒன்று. 2GB என்பது மெதுவான கணினிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம். அதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம். Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணினி வாங்குதல் நலம்.
அதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR 2 கூட நல்லதே.
அதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR 2 கூட நல்லதே.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும், புதிய கணினி வாங்கும் போது Processor மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும். Core 2 Duo என்றால் 4GB RAM போதும், I-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும்.
மிகக் குறைந்த அளவு என்றால் 2 GB-க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம்.
3. Hard Disk or HDD
உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் 320GB HDD வாங்கவும்.. தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை. அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம்.
4. DVD R/W Drive
DVD Drive உங்கள் கணினியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும் 23-pin உள்ளவற்றை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள்.
5 . Mouse/Kayboard
உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத்தியே செய்கிறீர்கள். மௌஸ் இப்போது எல்லா இடத்திலும் optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboard உங்கள் விருப்பம்.
6. Graphics Card
இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்யலாம்.
7. Monitor
கணினி என்றால் 17 Inch என்பதை மிகக் குறைவாக கொள்ளலாம். மடிக்கணினி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.
8. Pen Drive
பல ஆயிரம் போட்டு கணினி வாங்கும் பலரும், இதில் தவறு செய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார்கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும்.
இவைதான் புதியதாக கணினி வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை. நீங்கள் படிக்கும்போது ஏதேனும் சந்தேகம் என்றால் என்னை prabuk@live.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் செய்யலாம். [புதிய கணினி குறித்த கேள்விகளுக்கு மட்டும் இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்]. உடனடியாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.
- பிரபு கிருஷ்ணா
18 comments
'ஆபத்பாந்தவன்' அப்பிடீன்னு சொல்லுவாங்களே... அது நீங்கதான்...
Replyநாலுநாளா இந்த டீடைலத்தான் யோசிச்சுகிட்டிருந்தேன்....
ரொம்ப பிரயோசனமான பதிவு பிரபு.
ரொம்பவே யூஸ்புல் எல்லாருக்கும் .. :)
Replyஏற்கனவே தெரிந்த விஷயம் தான்...என்றாலும் சொன்ன விதம் அருமை.....புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்தி. வாழ்த்துக்கள் பிரபு.
Replyகணினி வாங்குபவர்களுக்கு பயனுள்ள தகவல்.
Replyபலருக்கும் பயன்படும் தகவல்...
Replythanks for post
Replyபயனுள்ள பதிவு
Replyஒரு காலத்தில் 80 GB HDD, 256 MB RAM, Pentium 4 என்றால் அது மிகவும் சக்தி வாய்ந்த கணிணி...
Replyநான் வாங்கும் போது 320 GB HDD, 2 GB RAM, Core2Duo!! (நான் வாங்கியது 2009 இல்)..
இப்போதோ குறைந்த பட்சம் 320 GB என்கிறீர்கள்.. நாள் ஆக ஆக மனிதனின் மூளை சுருங்கிக் கொண்டும், மின்னணு மூளை உயர்ந்து கொண்டும் செல்கிறது!!
இது எங்கு சென்று முடியுமோ??
"உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை சார் !"
Reply"உங்க Mobile நம்பர் கொடுக்கவும் "
Replyஅருமையான அனைவரும் படிக்கவேண்டிய பதிவு இது.
Replyநண்றி நண்பரே.
டச் ஸ்கிரீன் மானிட்டர் வாங்கலாமா சார்?
@ arunvetrivel
Replyடச் ஸ்கிரீன் வேண்டாம் என்பது என் கருத்து.
@ திண்டுக்கல் தனபாலன்
Replyமேலே கூறி உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள், நான் என் அலைபேசி எண் அனுப்பி வைக்கிறேன்.
கணினி வாங்கும் புதியவர்களுக்கு தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். பயன்மிக்க பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபு...!!!
Replykanini payanpaduththum anaivarukkum payanulla padhivu nandri ungalin alaipesi ennai thara mudiyuma anuppamudiyumendraal ennudaiya minnanjalukku anuppayum
Replysurendranath1973@gmail.com
ரொம்ப சூப்பர் தகவல்..நண்பா..
ReplyThank you very much dear friend. good job. please keep on help to people.
Replyஅன்பின் பிரபு - பயனுள்ள தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் _ நட்புடன் சீனா
ReplyPost a Comment