May 2012 | கற்போம்

மௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்றுவது எப்படி?

கணினியில் நாம் பயன்படுத்தும் அனைத்து Mouse-களும் வலது கை பழக்கம் உடையவர்களுக்கே. இடது கை பழக்கம் உடையவர்கள் இதனை எளிதில் கையாள முடியாது. கண்ட்ரோல் பேனலில் சிறிய மாற்றம் செய்வதன் மூலம், இதனை இடது கை பழக்கம் உடையவர்களும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றலாம்.

படங்களை வைத்து படம் காட்டுவது எப்படி?

இப்போது பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் என்று நிறைய தளங்களில் நண்பர்கள் தங்கள் படங்களை வெளிநாடு, பெண்ணின் கையில், புத்தக அட்டையில், புலியின் காலடியில், பெரிய கடைகளில் போஸ்டர் ஆக, வைத்து இருப்பார்கள். அதை போல செய்ய நிறைய தளங்கள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.

வைரஸ் வந்த பென் டிரைவை Command Prompt மூலம் Format செய்வது எப்படி?


நிறைய நேரங்களில் வைரஸ் வந்த நம் பென் டிரைவை நம்மால் Format இயலாமல் போய் விடும். என்ன தான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்காது. இதனால் புதிய பென் டிரைவ் வாங்கக் கூடிய நிலை கூட வரலாம். அது போன்ற சமயத்தில் Command Prompt மூலம் Format செய்ய முயற்சிக்கலாம். எப்படி என்று பதிவில் காணலாம். 

1. முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் சொருகவும்


2. Start >> Run சென்று cmd என்று டைப் செய்து Command Prompt வரவும். 

3. இதில் format<space>Drive Letter: கொடுத்து விட்டு, இரண்டு முறை Enter  கொடுக்கவும். 

உதாரணம்: format g:

[மேலே படத்தில் Benny என்பது என் பென் டிரைவ் பெயர், பக்கத்தில் உள்ள G தான் Drive Letter. உங்களுக்கும் இது போலவே. ]

4.  இப்போது கீழே உள்ளது போல, ஒரு விண்டோ வரும், 



5. இதில் கேள்விக் குறிக்கு அடுத்து உங்கள் பென் டிரைவ்க்கு ஒரு பெயர் தர சொல்லும். உங்களுக்கு விருப்பமான பெயர் தந்து Enter கொடுங்கள். 

6. இப்போது பின் வரும் விண்டோ வரும். 



7.அவ்வளவு தான் இப்போது உங்கள் பென் டிரைவை செக் செய்து பாருங்கள், அது Format ஆகி இருக்கும். 

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள்  கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

IOBit Uninstaller - Uninstall செய்ய முடியாத மென்பொருளை Remove செய்ய

சில நேரங்களில்  ஏதேனும் மென்பொருளை Uninstall செய்யும் போது ஏதேனும் பிரச்சினை வந்து அவை Uninstall ஆகமால் தகராறு செய்யும். அப்படி இடைஞ்சல் கொடுப்பவற்றை சாதாரண முறையில் Uninstall செய்ய இயலாது. எப்படி அவற்றை Uninstall செய்வது என்று பாப்போம். 

Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன?

நாம் கணினியை  பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம். 

Delete செய்ய முடியாத Files & Folder-களை Delete செய்வது எப்படி?

சில சமயங்களில் கணினியில் குறிப்பிட்ட Folder/File போன்றவற்றை டெலீட் செய்யும் போது Access Denied என்று வரும். என்ன தான் பிரச்சினை என்று நமக்கு தெரியாது. ஆனால் டெலீட் செய்யவும் இயலாது.அதன் காரணத்தையும்  அவற்றை உடனடியாக டெலீட் செய்ய என்ன வழி என்று பார்ப்போம். 

Format செய்ய முடியாத Transcend Pen drive/Memory Card-களை Format செய்வது எப்படி?

Transcend பென் டிரைவ்களை பயன்படுத்தும் நண்பர்கள் நிறைய பேருக்கு Format செய்யும் போது அடிக்கடி வரும் பிரச்சினை "Write Protected". பென் டிரைவ் மட்டும் இன்றி மெமரி கார்டுக்கும் இந்த பிரச்சினை வரும். இவற்றை சரி செய்ய அவர்களே வழி தந்து உள்ளனர். என்ன என்று பார்ப்போம். 

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

நண்பர்கள் பலரும் அலைபேசியில் அழைக்கும் போது, என்ன மாதிரி கணினி வாங்கலாம் என்று ஒரு கேள்வி கேட்கின்றார்கள். நன்றாக கணினியில் இயங்கும் நண்பர்கள் என்ற போதும், நிறைய நண்பர்களுக்கு கணினி Configuration எனப்படும் ஒன்று தெரிவது இல்லை. அவற்றைப் பற்றி இன்று விரிவாக காண்போம். இதில் ஒரு புதிய கணினி, மடிக்கணினி நீங்கள் வாங்கும் போது இவற்றை தான் கட்டாயம் பார்க்க வேண்டும். 

Monitor என்ற ஒன்றை தவிர மேசை கணினிக்கும், மடிக் கணினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே கூறும் அனைத்தும் இரண்டுக்கும் சேர்த்தே. 

இவை அனைத்தும் இன்றைய நிலைக்கு (May 2012) க்கு சிறந்தவை. நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் புதியதாக மார்க்கெட்டில் என்ன உள்ளது என்று பார்த்து வாங்கவும்.

1. Processor 


இது தான் உங்கள் கணினியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். 

தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு (மே 2012), நீங்கள் வாங்கும் கணினியில் Processor Intel Core 2 Duo என்பதை கடைசியாக கொள்ளலாம். Pentium (1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i 7. 

அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் உங்கள் கணினியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும்(ஏன் என்று விளக்க தனி பதிவே எழுத வேண்டும், எனவே அதை தனியே சொல்கிறேன்.). 

2. RAM


உங்கள் கணினியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே. எனவே இது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால் வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC Bus கள் போல மெதுவாக தான் உங்கள் கணினி இயங்கும். 

தற்போதைய நிலையில் (May 2012) 4GB RAM என்பது சரியான ஒன்று. 2GB என்பது மெதுவான கணினிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம். அதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம்.  Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணினி வாங்குதல் நலம்.

அதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR 2 கூட நல்லதே.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும், புதிய கணினி வாங்கும் போது Processor  மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும். Core 2 Duo என்றால் 4GB RAM போதும், I-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும்.

மிகக் குறைந்த அளவு என்றால் 2 GB-க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம். 

3. Hard Disk or HDD


உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் 320GB HDD வாங்கவும்.. தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை. அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம். 

4. DVD R/W Drive


DVD Drive உங்கள் கணினியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin  உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும் 23-pin உள்ளவற்றை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள். 

5 . Mouse/Kayboard


உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத்தியே செய்கிறீர்கள். மௌஸ் இப்போது எல்லா இடத்திலும் optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboard உங்கள் விருப்பம். 

6. Graphics Card


இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்யலாம். 

7. Monitor 


கணினி என்றால் 17 Inch என்பதை மிகக் குறைவாக கொள்ளலாம். மடிக்கணினி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம். 

8. Pen Drive 


பல ஆயிரம் போட்டு கணினி வாங்கும் பலரும், இதில் தவறு செய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார்கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும். 

இவைதான் புதியதாக கணினி வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை. நீங்கள் படிக்கும்போது ஏதேனும் சந்தேகம் என்றால் என்னை prabuk@live.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் செய்யலாம். [புதிய கணினி குறித்த கேள்விகளுக்கு மட்டும் இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்]. உடனடியாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன். 

- பிரபு கிருஷ்ணா

Gmail Chat-இல் Block செய்தவர்களை Unblock செய்வது எப்படி?



கடந்த பதிவில் எப்படி நமக்கு தொடர்பில்லாத நண்பர்களை சாட் லிஸ்ட்டில் இருந்து நீக்குவது என்று பார்த்தோம். சில சமயங்களில் நாம் தவறுதலாக சிலரை நீக்க வாய்ப்பு உள்ளது, அல்லது நீக்கியவரை மீண்டும் சேர்க்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அந்த நிலையில் எப்படி எளிதாக அவர்களை சேர்ப்பது என்று பார்ப்போம்.


எல்லோரும் அறிந்த Gtalk மூலமே இதை செய்ய போகிறோம்.



2. அதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவும். பின்னர் உங்கள் ஜிமெயில் தகவல்களை கொடுத்து அதில் நுழையவும். 

3. இப்போது மேலே Settings என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும். 


4. இப்போது வரும் விண்டோவில் Blocked என்பதை தெரிவு செய்யவும். 

5. இதில் நீங்கள் பிளாக் செய்தவர்கள் பெயர் இருக்கும். குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்து Un Block செய்து விடவும். 



6. அவ்வளவே. இனி அவர்கள் உங்கள் சாட் லிஸ்ட்டில் இருப்பார்கள். 

வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

-பிரபு கிருஷ்ணா

தேவையற்றவர்கள் Gmail chat-இல் Add ஆவதை தடுப்பது எப்படி?

ஜிமெயில் பயன்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய உதவியாய் இருப்பது சாட் வசதி. அதே சில சமயம் பிரச்சினை தரும் ஒன்றாக மாறிவிடும். காரணம் சம்பந்தமே இல்லாத பலர் சாட்டில் வந்து சேர்வது. வந்த பின் தடுக்கும் வசதி இருந்த போதிலும், அவர்கள் எல்லாம் வரும் முன்னரே தடுக்கும் வசதியும் உள்ளது. இரண்டையுமே பார்ப்போம். 

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

நெருப்பு நரி எனப்படும் Firefox தான் நம்மில் நிறைய பேர் பயன்படுத்தும் இணைய உலவி. சாதாரணமாக கணினிகளில் பயன்படும் Keyboard Shortcuts போல Firefox-க்கும் நிறைய Keyboard Shortcut நிறைய உள்ளன. 

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shortcuts

Keyboard Short-cuts என்பவை எப்போதும் நம் வேலையை எளிதாக்க உதவுபவை, நாம் நமது mouse ஐ பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்காமல், மிக விரைவில் ஒரு வேலையை முடித்து விடும். இவற்றில் சில எப்போதும் பயன்படும். அந்த வகையில் கணினியை பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பத்து Basic Keyboard Shortcut-களை இங்கே தருகிறேன். 

கற்போம் - மே மாத இதழ் (Karpom May 2012)



சில தாமதங்களுக்கு பிறகு மே மாத கற்போம் இதழ் இன்று வெளியிடப்படுகிறது. சில தவிர்க்க முடியாத பணிகள் இதை தாமதம் ஆக்கி விட்டன என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.




இந்த மாதம் மொத்தம் 9 கட்டுரைகள். புதிய தொடர் ஒன்றுடன். 


1. போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு (100% satisfied)

2.சிறந்த 10 Internet Browser-கள்

3. HTML5 தோற்றமும் வளர்ச்சியும்

4. ஹேக் செய்யப்பட்ட ஜிமெயில் கூகுள் அக்கவுண்ட்டை மீண்டும் பெறுவது எப்படி?

5. மொபைல் மென்பொருள் உருவாக்கம் - வெப் டிசைனர்கள் கவனத்திற்கு...

6. ட்விட்டரில் பரவும் வைரஸ் – எச்சரிக்கை

7. கூகுள் டிரைவ் – கூகிளின் புதிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதி

8. TEAM VIEWER என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி ?

9. ஹாக்கிங்கில் இருந்து பாதுகாப்பு - தொடர்



இதழை தரவிறக்கம் செய்ய 


பென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி

USB Device களை பயன்படுத்தும் போது நமக்கு இருக்கும் அவசரத்தில் நம்மால் Safely Remove என்பதை செய்ய முடிவதில்லை. பலர் அதனை மறந்தும் விடுகிறோம். இதனால் உங்கள் பென் டிரைவ் போன்ற USB Device-கள் பழுதடைய வாய்ப்புகள் அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே சமயம் உங்கள் பென் டிரைவ்க்கு எந்த பிரச்சினையும் வராமல் எப்படி உடனடியாக Remove செய்வது என்று பார்ப்போம். 

Software இல்லாமல் Folder Lock/Hide செய்யலாம்

நமது personal Folder களை மறைக்க நாம் ஏதேனும் சாப்ட்வேர் பயன்படுத்துவோம். அந்த சாப்ட்வேர் கிராஷ் ஆகிவிட்டால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் உங்கள் Folder அம்போதான். அப்படி இல்லாமல் எளிதாய் இதை செய்ய ஒரு வழி கூறுகிறேன்.  இது மிக எளிது. ஏற்கனவே ஒரு வழிநான் கூறி இருந்தாலும் இது அதை விட எளிது.

Blogger Tips-External Link மட்டும் New Tab இல் ஓபன் ஆக

நமது வலைத்தள நண்பர்கள் நிறைய பேர் வலைப்பூக்களை படிக்கும்போது, பழைய பதிவுகளை படிக்க நினைத்தால் அவர்கள் அதை new Tab இல் ஓபன் ஆகும் படி வைத்திருப்பார்கள். இதனால் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு tab இல் படிக்க வேண்டி இருக்கும். இப்படி இல்லாமல் external links மட்டும் புதிய tab இல் ஓபன் ஆகும்படி செய்தால்?