April 2012 | கற்போம்

Google Driveக்கு Keyboard Shortcuts

கூகிள் ட்ரைவ் ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட ஒன்று. உங்கள் தகவல்களை இணையத்தில் Cloud Computing முறையில் சேமித்து வைக்க உதவுகிறது இது. (மேலும் அறிய படிக்கவும்- கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?). மிகவும் அற்புதமான வசதியான இதிலும் Keyboard Shortcut களை நாம் பயன்படுத்த இயலும். மிக அவசியமானவற்றை இந்தப் பதிவில் காண்போம். 

Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்




நம் கம்ப்யூட்டர்க்கு முதுகெலும்பு என்றால் அது hard Disk தான்.இது இல்லாமல் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட இது OS ஐ இயங்க வைக்கிறது. இதில் ஏதாவது பிரச்சினை என்றால் அவ்வளவுதான். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவுவது தான் Check Disk வசதி.  

உங்கள் தளம் லோட் ஆகும் நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொரும் தங்கள் தளம் விரைவில் லோட் ஆக வேண்டும், வாசகருக்கு அதிக நேரம் லோட் ஆகி தொல்லை தரக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சில கோடிங், படங்களை சேர்க்கும் போது லோட் ஆக அதிக நேரம் ஆகலாம். இந்த மாதிரி விசயங்களில் முதலில் நமக்கு எது பிரச்சினை என்று தெரிய வேண்டும். அதை எப்படி கண்டுபிடிப்பது?

PicMonkey - ஆன்லைன் போட்டோ எடிட்டிங் தளம்

Image களை edit செய்யும் வேலை எல்லோருக்கும், எப்போதும் அவசியமான ஒன்று. இந்த வேலையை ஆன்லைனில் செய்ய Picnik தளம் இருந்தது. ஆனால் இன்று முதல் (19-04-2012) அதன் சேவை நிறுத்தப்படுகிறது. அதை டிசைன் செய்தவர்கள் உருவாக்கி உள்ள புதிய தளம் தான்  PicMonkey . மிக எளிதான எடிட்டிங் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்ய நமக்கு இது உதவுகிறது. 

ஜிமெயிலில் ஐகான்களை Text ஆக மாற்றுவது எப்படி?

இன்றைக்கு இணையத்தில் ஜிமெயிலை பயன்படுத்தாதவரே இல்லை எனலாம். நிறைய வசதிகளை தரும் ஜிமெயில், பல மாற்றங்களை செய்து வருகிறது,பல வசதியாய் இருப்பினும் அதில் சில நமக்கு இடைஞ்சலாய் அமையும்.  இப்பொழுது இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றை பற்றியும், அதை மாற்றுவதும் குறித்துமே இந்த பதிவு.

உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை


சில முக்கியமான பதிவுகளை எழுதி முடித்து விட்டு, நாம் திரட்டிகளில் இணைப்பதற்குள் நம்மவர்கள் அதை சுட்டு, சுட சுட தங்கள் தளத்தில் பகிர்ந்து விடுகின்றனர். இதை எப்படி கண்டுபிடிப்பது? பல சமயம் அவர்கள் நமக்கு இணைப்பு தருவதே இல்லை, அப்படி இல்லாமல் அவர்களுக்கு தெரியாமல் நம் தளத்துக்கு ஒரு இணைப்பு தர முடிந்தால்? எப்படி செய்வது அதை?

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.

பிளாக்கர்க்கு மிக எளிமையான Related Posts Widget சேர்ப்பது எப்படி?

நமது பதிவுகளை படிக்கும் நண்பர்கள், அடுத்த் பதிவுகளை படிக்க ஈர்ப்பவை நாம் பதிவிற்கு கீழே சேர்க்கும் தொடர்புடைய பதிவுகள் என்ற Wdiget தான். பெரும்பாலும் படங்களுடன் இருக்கும் இந்த Widget-கள் இருக்கிறது. ஆனால் படங்கள் இன்றி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிக எளிமையான Widget எப்படி சேர்ப்பது என்பது தான் இந்தப் பதிவு. 

Windows 7க்கு ஏழு டிப்ஸ் & ட்ரிக்ஸ் [வீடியோ பதிவு]

Windows 7, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றி அடைந்த ஒரு Operation System. இதில் முந்தைய OS களை விட நிறைய வசதிகள் உள்ளன. அத்தோடு பயனர் எண்ணிக்கையும் அதிகம். இதோ பயனுள்ள சில தகவல்கள் உங்கள் Windows 7 கணினிக்கு.  இவற்றை எனது முதல் முழு வீடியோ பதிவாக இங்கே இணைத்துள்ளேன். 

ஒரு இலவச மென்பொருளில் 47 பலன்கள்


ஒரு சில சமயங்களில் ஒரே வேலைக்கு நாம் பல மென்பொருட்களை நிறுவி இருப்போம். ஆனால் அதில் கூட நமக்கு திருப்தி இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஒரே மென்பொருள் நமக்கு 47 வகையான மென்பொருள் தரும் வசதிகளை தந்தால்? அது தான் DVD Video Soft. 



இதை இன்ஸ்டால் செய்ய உங்கள் கணினியில் .Net Framework 2 SP2 இருக்க வேண்டும். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், கீழே உள்ள படம் வரும்.




இதன் சில முக்கியமான சிறப்பம்சங்கள்: 

1. வீடியோ மற்றும் ஆடியோகளை வெவ்வேறு வகையான Format களில் Convert செய்ய உதவுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் போன் நிறுவனத்துக்கே தருகிறார்கள், அத்தோடு உங்கள் போன் மாடல் தெரிவு செய்யும் வசதியும் உள்ளது. (Mobile என்ற வசதியில்)

2. DVD களை Burn & Rip செய்யும் வசதி. (CD,DVD,BD வசதியில்)

3. Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. (Youtube என்ற வசதியில்-Free Youtube Download) ஒரே கிளிக் மூலம் நிறைய வீடியோக்களை தரவிறக்கும் வசதி தரும் இதன் பலன்களை விரிவாக அறிய இந்தப் பதிவை படிக்கவும் Youtube - சிறந்த வீடியோ downloader

4. சின்ன சின்ன வீடியோ எடிட்டிங் செய்யும் வசதியை தந்துள்ளது. (DVD& Video வசதியில்)

5. Screen Record செய்யும் வசதி.

6. உங்களிடம் 3D கண்ணாடி உள்ளதா? 3D-யில் Image & Video போன்றவற்றை உருவாக்க 3D என்ற வசதி பயன்படும்.

7. iPod, iPhone என்று தனி வசதி தரப்பட்டு உள்ளது. (Apple Devices வசதி)

அந்த மென்பொருளின் சில சிறப்பம்சங்களை மட்டுமே கூறி உள்ளேன். அசத்தலான இதை தரவிறக்கம் செய்து, மற்றவற்றை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

Install செய்யும் போது, கீழே வரும் Window வரும் போது, "DVDVideo Soft Toolbar" என்பதை Unclick செய்து விடுங்கள்.


உங்கள் கணினி திரையினை ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படி?

விண்டோஸ் 7 குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு வேகமான ஒரு ஆபரேட்டிங் ஸிஸ்டம். விண்டோஸ் எக்ஸ்.பி க்குப் பின் மைக்ரோசாஃப்ட் பொறியாளர்கள் நிஜமாகவே தலையைப் பிய்த்துக் கொண்டு உழைத்து உருவாக்கியது.

வின் 7 இல் உள்ள வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல பெரிய புத்தகங்களே உள்ளன. அதில் நாம் இன்று பார்க்கப் போவது நம் கணிணி திரையை முழுமையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு படப் பதிவாக எப்படி எடுப்பது என்பது. மேலே தலைப்பில் உள்ளது போல இன்றைய தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பற்றிய பதிவு இது.

                                                 *இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது ஞானபூமி 

ஒரு படம் ஆயிரம் தகவல்களைச் சொல்லும் என்பது சீனப் பழமொழி. நம் திரையின் ஒரு பகுதியை யாருக்காவது படமெடுத்து அனுப்பத் தேவைப் படலாம். ஒரு சிறந்த உதாரணம் - வெளிநாட்டில் வாழும் அன்பர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் இணையத்தின் மூலமாகத் தொடர்பு கொள்வது. விடியோ திரையில் காண்பதற்கோ அல்லது ஜிமெயில் சாட் செய்வதற்கோ அவர்களுக்கு எப்படி அதை நிறுவுவது என்பது பற்றி தெளிவு படுத்த படமாகக் காண்பிப்பது சுலபமாக இருக்கும்.

ஆதிகாலம் முதலே விண்டோஸில் Function+PrtSc விசை இந்த வசதியை அளித்தாலும் வின் 7 இன் ஸ்னிப்பிங் டூல் (Snipping Tool) மிக எளிதானது. முதலாவதில் ஒன்று முழுத் திரையையும் படப் பதிவாக்கலாம், அல்லது அதனுடன் ஆல்ட் (alt) விசையையும் சேர்த்து அழுத்தினால் ஆக்டிவ் ஆக இருக்கும், அதாவது அனைத்திற்கும் முன் நிற்கும் ப்ரோகிராமை படப் பதிவாக்கலாம். கீழே பாருங்கள்.







முதலாவதில் முழுத் திரையையும் ப்ரிண்ட் எடுத்தது (திரையில் தேவையற்ற சிலதை நீக்கி விட்டேன்). இரண்டாவது அனைத்திற்கும் முன் நிற்கும் ப்ரோகிராமை ப்ரிண்ட் எடுத்தது (நோட்பேட்).ஆனால் இம்முறையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் படப்பதிவு எடுத்த பின் பெயிண்ட், போட்டோஷாப் மாதிரியான ப்ரோகிராமை திறந்து அதில் தான் பேஸ்ட் செய்ய வேண்டும். இது எப்போதுமே இரண்டு செயல்பாட்டைக் கொண்டது. முதலில் ப்ரிண்ட் ஸ்க்ரீன், பிறகு பேஸ்ட் செய்வது, பின்னர் தேவையான அளவு கிராப் செய்வது. இது அவ்வளவு விரைவான வழியல்ல. மேலும், Function keyஐ ஒரு விரலால்அழுத்தி, PrtScஐ மற்றொரு விரலால்அழுத்தி, அதனுடன் ஆக்டிவ் விண்டோவை படப் பதிவெடுக்க altகீயையும் மற்றொரு விரலால் அழுத்தி ஒரு மாதிரி வர்மக் கலை இந்தியன் தாத்தா மாதிரியெல்லாம் பாடுபட வேண்டும். அது மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது போல. ஆனால் எலியின் மூலம் மலையை இழுக்கும் இணையக் காலத்தில் கஷ்டப்படாமல் இருக்கத்தான் Snipping Tool.



வின் 7 ற்கு முன் வந்த திருஷ்டிப் பரிகாரமாகிய விண்டோஸ் விஸ்டாவிலும் இது உண்டு.

சரி ஸ்னிப்பரை எப்படி நிறுவுவது?

இதுவும் சுலபம், இதோ.

1. ஸ்டார்ட் மெனுவில் "Program" என்று டைப் செய்ய ஆரம்பியுங்கள். நீங்கள் பேச ஆரம்பிக்கும் போதே என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஊகித்து 'இதுவா, அதுவா' என்று மடக்குக் கேள்வி கேட்கும் மனைவியைப் போலவே விண்டோஸும் கேட்கும்.(ஒரு வேளை மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுளார்களின் மனைவிமார்கள் இந்த auto fill or auto complete வசதி கண்டிப்பாக வேண்டுமென்று வற்புறுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆண் உலகம் நல்லவற்றை என்றும் ஏற்குமாதலால் இதையும் ஏற்றிருப்பார்கள்) கீழே காட்டியிருப்பது போல விண்டோஸ் தயாராகி விடும். அதில் "Programs and features" ஐ தேர்வு செய்யுங்கள்.



2. பின் இடப்பக்கவாட்டில் இருக்கும் “Turn Windows Features on or Off” ஐ தொடுங்கள்.

3. ஒரு சிறிய விண்டோ திறக்கும். அதில் Tablet PC Components ஐ தேர்வு செய்யுங்கள். OK வை க்ளிக் செய்யுங்கள். ஸ்னிப்பர் ரெடி.

4. Start menu வில் மறுபடி Snip என்று டைப் செய்தால் Snipping Tool தெரியும். அதை பிடித்து இழுத்து (drag and drop) டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம். அதுதான் தேவைப் பட்ட போதெல்லாம் டக்கென்று துவக்க வசதியாய் இருக்கும்.

உங்கள் கணிணியில் ஸ்னிப்பிங் டூல் இருக்கும் இடம் -

%windir%\system32\SnippingTool.exe

இதை நிறுவியபின் அதற்கான ஐகானை டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம். அது  இவ்வாறு தெரியும். இதன் பயன்பாட்டைப் பார்க்கலாம் முதலில்.

அதை க்ளிக் செய்தால் திரை முழுதும் மங்கலாகி விடும், அதாவது இனிமேல் நீங்கள் திரையின் எந்தப் பகுதியை படப்பதிவு செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யலாம். கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். ஸ்னிப்பிங் டூல் ரெடி. நமது எலியாரும் + குறியீட்டுக்கு மாறி விடுவார். அதைக் கொண்டு கோடு போட்டால் ரோடு போட்டு விடும் ஸ்னிப்பர்.



திரையில் தேவையான இடத்தில் ஒரு சதுரமாக வரைந்தால் போதும், திரையின் தேர்வு செய்த பகுதி அழகாக ஒரு தனி விண்டோவில் தெரியும், இவ்வாறு.



இதை அவுட்லுக் மெயிலில் ஒட்டி அனுப்ப வேண்டுமென்றால் சுலபமாக Ctrl+C அழுத்தி, பின் மெயிலில் Ctrl+V செய்தால் போதும். இதையே Jpeg, PNG, BMP முதலியனவாக சேமிக்கவும் செய்யலாம். இதிலும் காப்பி பேஸ்ட் தானெ என்ற கேள்வி எழுபவர்களுக்கு ஒரு ஷொட்டு, சரிதான் நண்பரே, ஆனால் சுலபமான வழியா இல்லையா?

இதில் பயனுள்ளவை என்னவென்றால், படப்பதிவு செய்த பின் அதில் எதையாவது குறிப்பிட்டுக் காட்ட விரும்பினால் பேனா மற்றும் ஹைலைட்டர் கொண்டு குறியிடலாம். உதாரணம்:


ஸ்னிப்பிங் டூலை வைத்துக் கொண்டே பெரும்பாலான படங்களை உருவாக்கியிருக்கிறேன் இப்பதிவில். ஆனால் ஸ்னிப்பிங் டூலையே படப் பதிவாக எடுக்க நான் நாட வேண்டியிருந்தது வர்மக் கலையைத் தான், மன்னிக்கவும் Function+PrtSc விசையைத் தான். ஓல்ட் இஸ் கோல்ட் என்பார்களே :)

இது பல வடிவங்களில் படப்பதிவு எடுக்க உதவினால் இன்னும் பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. உதாரணத்திற்கு வட்டவடிவமாக.


Author Details:
ஞானபூமி தளத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பதில் பெருமையும் இந்தியத் தமிழன் என்பதில் மிகுந்த கர்வமும் கொண்ட ஒரு சாதாரணன்.

சிறந்த 10 Internet Browser-கள்

இணைய உலவி என்று தமிழில் சொல்லப்படும் Browsersகள் தான் நாம் இணையத்தை பயன்படுத்தும் நேரங்களில் வேகத்தை தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் மிகப் பிரபலமான Browsers கூட நமக்கு Crash ஆகி பிரச்சினையை தரும். அந்த நேரங்களில் நமக்கு ஒரு மாற்று அவசியம். இந்தப் பதிவின் மூலம் பத்து சிறந்த Browser-களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இதில் சில ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயம் ஆனவை தான். 

மிகப் File-களை இமெயிலில் அனுப்புவது எப்படி? (2ஜி‌பி வரை)

சில சமயங்களில் மிகப் பெரிய File களை எப்படி மின்னஞ்சல் மூலம் அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் மின்னஞ்சல் மூலம் 25MB க்கு மேல் அனுப்ப முடியாது. இதற்கு கண்டிப்பாக வேறு சில தளங்களின் உதவி நமக்கு கட்டாயம் தேவை. அப்படிப் பட்ட தளங்களைப் பற்றிய பதிவு இது.

பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள்

இன்றைய நிலையில் தமிழில் மிக அதிகமான வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் நிறைய எழுதுகிறார்கள். அவர்களில் பலரது வலைப்பூவுக்குள் நுழைந்தால் ஏண்டா நுழைந்தோம் என்ற அளவுக்கு அதிகமாக இடைஞ்சல்கள் இருக்கும். சில பதிவையே படிக்க முடியாத அளவுக்கு இடைஞ்சல் தரும். அவை என்ன? ஒரு பதிவர் எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்?

Desktop-இல் Right Click செய்தால் Safely Remove Hardware வசதி

இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் உபயோகபடுத்தாதவர்கள் இருப்பது கடினம் என்றாகிவிட்டது, கல்லூரியிலோ ,  கம்ப்யூட்டர் சென்டரிலோ , அலுவலகத்திலோ நாம் கணினியை பயன்படுத்துகிறோம் , அதே சமயம் நம்மில் பலர் பென்டிரைவ் உபயோகித்துதான் கோப்புகளை எடுத்து செல்கிறோம் , ஆனால் பென்டிரைவை கணினியை விட்டு நீக்கும் போது "Safely Remove Hardware" என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும் , ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம் இதனால்  பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமில்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்பு உள்ளது .

இதற்கான காரணம் என்று பார்த்தால் , அந்த "Safely Remove Hardware" Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும் எனவே நாம் அதை கவனிப்பதில்லை .

அது உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா, நீங்களும் பாதுகாப்பாக உங்களது  பென் டிரைவை கணினியை விட்டு நீக்கலாம். இது அதாவது கீழே உள்ளது போல. 



விண்டோஸ் 7  க்கானது என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் . 

எப்படி இதை செய்வது? 

Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் "regedit" என்பதை கொடுத்து ok கொடுக்கவும். 


பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் DesktopBackground Option - இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது   HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\ ) 

உங்களுக்கு இப்போது கீழ்கண்ட திரை கிடைக்கும் 


இப்பொழுது Shell ஐ ரைட் கிளிக் செய்யுங்கள் , அதில் New--> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீ உருவாக்கி கொள்ளுங்கள் .



தற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள் .


icon ஐ டபிள் கிளிக் செய்யுங்கள் அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள் .



தற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள் . அதற்கு தலைப்பு command என கொடுங்கள் . 



அதன் உள்ளே வால்யு டாட்டா ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்கவேண்டும் C:\\Windows\\System32\\control.exe hotplug.dll


அட போங்கப்பா ரொம்ப நேரமா எவ்ளோ செட்டிங்க்ஸ் Change பண்ண சொல்றனு நினைக்கிறீங்களா ? டோன்ட் வொர்ரி இப்ப டெஸ்க்டாப் ல போயிடு ஒரு வாட்டி செக் பண்ணி பாருங்க 



இப்படி வந்துருச்சா! வாழ்த்துக்கள் 

நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்!!

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.

-சூர்ய பிரகாஷ் .K .P                           


கூகிளின் அற்புத கண்ணாடி - Project Glass

இவர் அணிந்திருப்பது கூகிளின் Project Glass
அதிகமான ஹாலிவுட் படங்களில் அதிலும் குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நாம் கனவிலும் கண்டிராத நவீன தொழில்நுட்ப உபகரணங்களை கிராபிக்ஸ் முறையில் பயன்படுத்துவார்கள். அது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அற்புதக் கண்ணாடியை Project Glass என்ற பெயரில் கூகிள் உருவாக்கியுள்ளது.

Youtube - சிறந்த வீடியோ downloader

Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் பல ஒவ்வொரு வீடியோ ஆக தரவிறக்க சொல்லும். உதாரணம் உங்களால் ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய முடியாது. எப்படி அதை தரவிறக்கம் செய்வது என்பது பற்றியே இந்தப் பதிவு. 



2. இதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 

3. இப்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள். நான் சென்றது (Only Illaiyaraaja Hits

4. அதில் Address Bar -இல் உள்ள URL - ஐ காபி செய்து கொள்ளுங்கள் 

5.அதை இந்த மென்பொருளில் Paste செய்யவும். இப்போது கீழே உள்ளது போல வரும். 



6. இப்போது Download என் என்பதை கிளிக் செய்து விட்டால் வேலை முடிந்தது. தானாக அனைத்தும் தரவிறக்கம் ஆகி விடும். 

7. இதன் மூலம் Youtube Movies களை கூட தரவிறக்கம் செய்யலாம். (சில படங்களுக்கு error வருகிறது பாட்ஷா, குணா போன்ற படங்கள் தரவிறக்கம் ஆகிறது)

8. நீங்கள் லைக் செய்த வீடியோக்கள், Favorite,Watch Later என்று கொடுத்தவை என எதையும் தரவிறக்கம் செய்யலாம். அந்த URL மட்டும் கொடுத்தால் போதும். 

9. Preset பகுதியில் உங்களுக்கு தேவையான Format-இல் படத்தை தரவிறக்கம் செய்யலாம். 



10. டவுன்லோட் ஆன வீடியோக்களை Folder Icon மீது கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளலாம். 


அவ்வளவு தான் நண்பர்களே. ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

- பிரபு கிருஷ்ணா 


கற்போம் - ஏப்ரல் மாத இதழ்

கற்போம் ஏப்ரல் மாத இதழ். புதிய கட்டுரைகளுடன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.


சில புதிய நண்பர்களும் ஆவலுடன் கட்டுரைகளை தர இசைந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.


இந்த மாத கட்டுரைகள்:

1. கூகிளின் புதிய வசதி Google Play

2. ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இந்தியாவிற்கும்

3. சமூக தளங்களுடன் இணைந்த RockMelt Browser

4. ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

5. ஹாட்மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

6. யாஹூ மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

7.VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்!

8. சாதனைத் தமிழர் ஸ்ரீதர்

9. இணைய பாதுகாப்பு #4 - Phishing

10. ஆண்ட்ராய்டு மொபைலில் தமிழ் புத்தகங்கள்

தரவிறக்கம் செய்ய