Word Web - மிக அருமையான இலவச அகராதி(Dictionary) | கற்போம்

Word Web - மிக அருமையான இலவச அகராதி(Dictionary)

பகிர்வதிலே வளர்ச்சி யுண்டாம் - பகிராவிடில்
தனியாவர்த்தனம் செய்வாய் காண்

என்று வள்ளுவர் இன்றிருந்தால் ஒரு குறள் எழுதியிருப்பார் பகிர்வதில் உள்ள மேன்மையைப் பற்றி. தொழில்நுட்ப அறிவினைத் தாய்மொழியாம் தமிழில் பகிர்வதில் ஆர்வமும் உயர்ந்த நோக்கமும் கொண்ட கற்போம் தளத்திற்கு முதலில் ஞானபூமியின் நன்றிகள்.


இப்பதிவில் இலவச ஆங்கில அகராதி மென்பொருள் பற்றிப் பார்ப்போம்.

                                        *இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது ஞானபூமி 

"அந்த ஆளு ஏதோ சொன்னாண்டா, புரியலை, என்னமோ "பாராடாக்ஸிகல்" னு.நான் எதுக்குடா இங்கிலீஷ் மருந்து பேரெல்லாம் மீட்டிங்ல சொல்றான்னு யோசிச்சேன். அப்புறம் டிக்ஷனரியப் பார்த்தா தான் எனக்கு அர்த்தமே தெரிஞ்சது" என்றோ ஒரு விஷயத்தைப் பற்றி இணையத்திலோ அல்லது கணிணியிலோ படிக்கும் போது அர்த்தம் புரியாத ஆங்கில வார்த்தைகள் நம்மை வேகமாக போய்க் கொண்டிருக்கும் ரோடில் குறுக்கே மெதுவாக தம் குடும்பத்துடன் க்ராஸ் செய்யும் ப்ரேக் இன்ஸ்பெக்டர் (எருமை மாடுக்கு இப்படி ஒரு பெயர் உண்டு) என்ன பாடு படுத்துவாரோ அதே போல உணர்வைக் கொடுத்து விடும். மேற்கொண்டு படிக்க ஆவலாயிருப்போம், ஆனால் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் தான் மேலே படிப்பது புரியும். இந்த மாதிரி அவஸ்தை.

அமிதாப் பச்சன் ஒரு படத்தில் சொல்வார் "திஸ் இங்கிலீஷ் இஸ் எ வெரி ஃபன்னி லேங்வேஜ்" என்று. நம் ரஜினிகாந்த் அவர்கள் "ஐ கேன் வாக் இங்கிலீஷ், டாக் இங்கிலீஷ்" என்பார். அர்த்தம் புரியாமல் போனாலோ மானம் போய்விடும். புத்தக வடிவில் இருக்கும் அகராதிகளைப் புரட்ட நேரமில்லாத அகராதிகளாகிவிட்ட நமக்கு இன்றைய காலத்தின் வேகத்தோடு ஓடக்கூடிய ஒரு அகராதி மென்பொருள் தேவை. எல்லாவற்றிற்கும் மென்பொருளைத் தேடத் தொடங்கி விட்டோம். ஆனால் பயனுள்ளவைக்கு என்றுமே தமிழர்கள் தம் ஆதரவைத் தெரிவிக்கத் தயங்கியதில்லை. அந்த வரிசையில் வருவது தான் வேர்ட் வெப். இதுவும் ஒரு இலவச மென்பொருள் தான். ஆனால் மதிப்பில், பயன்பாட்டில் அதி உயர்ந்தது.

தரவிறக்கப் பாதை - http://www.wordweb.info/

இதன் முகப்பு




இதிலுள்ள சிறப்பம்சம் ஹாட் கீ என்பது. அதாவது, வேர்ட் வெப் உங்கள் கணிணியின் டாஸ்க் பார் (இது டாஸ்மாக் என்று தெரிவதானால் நான் பொறுப்பில்லை) உள்ள இடத்தில் வலதோரமாய் சமர்த்தாய் அமர்ந்திருக்கும். இதன் ஆப்ஷன்ஸ் மெனுவில் ஹாட்கீ யில் உங்கள் வசதிக்கேற்ப ஒன்றிற்கு மேற்பட்ட விசைகளை தேர்வு செய்து கொள்ளலாம் . (உ.ம் Alt + W).ஆல்ட் மற்றும் டபிள்யு விசையை சேர்த்து அழுத்துகையில் வேர்ட் வெப் தோன்றும். 




இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்று பாருங்கள்.




மேலே இண்டர்வியூ என்ற வார்த்தைக்கு நடுவில் உள்ளது கர்ஸர். இதன் அர்த்தம் தெரிய வேண்டுமாயின் Alt + W அழுத்தினால் போதும். வேர்ட்வெப்தோன்றிஅர்த்தம்காட்டும்.மேலும் இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்பதையும் ஒலிபெருக்கி ஐகானை அழுத்தினால் காட்டும். வார்த்தை இல்லாவிடில் அதன் மாற்று சொற்களைக் காட்டுவதோடு இணையத்திலும் தேடுவதற்கு உதவும். 


மேலும் உங்களுக்கு தேவையான ஆங்கில வகையைத் தேர்வு செய்யலாம். அமெரிக்கா, யூரோப், கனடா, ஆசியா, இந்த மாதிரி. இதைப் Preferences இல் தேர்வு செய்யலாம். இதில் வார்த்தையின் அர்த்தம் தவிர தேடிய வார்த்தையின் இலக்கண சம்பந்தப் பட்டவைகளையும் காட்டுவது கூடுதல் போனஸ். 

வேறொரு அகராதியை ஏற்கனவே நிறுவியிருந்தால் அதையும் கண்டு பிடிப்பதில் வேர்ட் வெப் உதவும். இவையெல்லாமே Options / Preferences இவற்றில் கண்டு கொள்ளலாம். ஆனால் சாதாரணமாக இதை நிறுவி, வார்த்தைகளின் பொருளைக் கண்டு கொள்ள நமக்குத் தேவையானவை ஹாட் கீ தேர்வு செய்வது மட்டுமே. 

நண்பர்களே, இலவசமாய்க் கிடைப்பவைகளில் தரமிருக்காது என்பது வேர்ட் வெப் விஷயத்தில் சரி இல்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். மேலும் நமக்குத் தெரிந்ததை மற்றவருடன் பகிர்வதில் இருக்கும் திருப்தி எதிலும் இல்லை என்பதும் தோன்றுகிறது. இது காறும் படித்தமைக்கு நன்றி. 

 
Author Details:
ஞானபூமி தளத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பதில் பெருமையும் இந்தியத் தமிழன் என்பதில் மிகுந்த கர்வமும் கொண்ட ஒரு சாதாரணன்.

4 comments

நான்
Word Web உபயோகித்து வருகிறேன். மிக நல்ல மென்பொருள் ஆன் லைனில் இருந்தாலும் ஆப் லைனில் இருந்தாலும் வேலை செய்கிறது. வார்த்தை செலக்ட் செய்து பின் வேர்ட் வெப் ஐக்கானை கிளிக் செய்தால் வார்த்தை குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கிறது.

http://eniyavaikooral.blogspot.com

Reply

நல்லதொரு தகவல் - பகிர்வினிற்கு நன்றி ஞானபூமி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

பயனுள்ள தகவல்கள் ! நன்றி !

Reply

Post a Comment