இணையத்தில் உலகின் பெரும்பாலான மொழிகள் புழக்கத்தில் இருந்தாலும். நம் தாய்மொழி தமிழ்மொழிக்கு இடமே தனி. கிட்டதட்ட உங்களுக்கு தேவையான அனைத்தும் தமிழிலேயே இணையத்தில் கிடைக்கிறது. அவைகளைப் பற்றிய ஒரு அலசலே இந்தப் பதிவு.
அலைபேசியில் தமிழ்:
அலைபேசி என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது. ஆங்கிலம் மட்டுமே கையாளப்பட்ட நிலையில், பல தமிழ் உணர்வாளர்களின் முயற்சியில் இன்று வந்த Android வரை அனைத்திலும் தமிழ் வந்துவிட்டது.
அலைபேசியில் தமிழில் படிக்க (இணைய இணைப்பு உள்ள அலைபேசிக்கு) இன்று பல உலவிகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஒன்று Opera Mini. அதில் எப்படி தமிழில் படிக்க முடியும் என்று கேட்பவர்கள். - GNU/Linux கதிர்வேல் அவர்களின் இந்தப் பதிவை படிக்கவும்.
Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி?
ஆன்ட்ராயிடில் ஒபேரா மினி |
ஆன்ட்ராய்ட் அலைபேசிகள் ஐ-போன் களை விட அதிக பயனர்களை கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது. இதிலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். அதன் கூகுள் ப்ளே மார்க்கெட்டில் சென்று தேவையான படி தரவிறக்கம் செய்யலாம்.
இதில் நான் பயன்படுத்துவது KM Tamil Unicode Keyboard. மிக எளிதாக தட்டச்சு செய்ய உதவும் . உதாரணம்: ammaa - அம்மா.
a - அ
m- ம்
maa- மா
இது மட்டும் இன்றி தமிழ் என்று தேடினால் ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு நிறைய பயன்பாடுகள் கிடைக்கின்றன. நாள்காட்டியில் ஆரம்பித்து, திருக்குறள், செய்திகள், சிறுகதைகள், அகராதி, மதம் சார்ந்த பயன்பாடுகள் (பகவத் கீதை, குரான், பைபிள்), தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி என எண்ணற்ற பயன்பாடுகள்.
ஐபோனில் தமிழ்:
ஐ-போனில் தமிழில் மொழி மாற்றம் செய்யும் வசதி உள்ளது, அதை பிளாக்கர் நண்பன் தளத்தில் ஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம் என்ற பதிவில் காணலாம்.
ஐபோனில் தமிழில் தட்டச்சு செய்ய Sellinam என்ற பயன்பாட்டை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இணையத்தில் தமிழ்:
இணையத்தில் தமிழ் வந்து பல ஆண்டுகள் ஆகிய போதும், இன்னும் சில நண்பர்களுக்கு எப்படி தமிழில் தட்டச்சு செய்வது, பயன்படுத்துவது என்று தெரியவில்லை.
முதலில் தமிழில் தட்டச்சு செய்ய விரும்பும் நண்பர்கள்,மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? - புதியவர்களுக்கு என்ற பதிவை படிக்கவும்.
தற்போது மிகப் பிரபலமாக உள்ள சமூக வலைத்தளமான Facebook-க்கை தமிழில் பயன்படுத்த முடியும் என்று தெரியுமா? எப்படி என்று அறிய இந்தப் பதிவை படிக்கவும். Facebook- இதெல்லாம் கூட இருக்கா?
அடுத்து கூகுள் பிளஸ் தளத்தை தமிழில் பயன்படுத்த வந்தேமாதரம் சசிகுமார் அவர்களின் கூகுள் பிளஸ் தளத்தை தமிழில் மாற்றுவது எப்படி? என்ற பதிவை படிக்கவும்.
வலைத்தளங்களை தமிழில் மொழிமாற்றம் செய்ய:
எந்த மொழியில் இருக்கும் தளத்தையும் தமிழில் மாற்ற Google Translate தளத்தை பயன்படுத்தவும். கிட்டத்தட்ட அறுபது மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய இயலும். கிட்டத்தட்ட சரியான மொழி மாற்றத்தை தருகிறது.
தமிழ் தமிழ் தமிழ்:
மற்றபடி கணினியில் தமிழ் வரவில்லை என்றால் தமிழில் தட்டச்சு செய்ய நான் சொல்லி இருக்கும் வழிகளை படித்தாலே, வந்து விடும்.
வித விதமான தமிழ் Font களை கணினியில் பயன்படுத்த வேண்டுமா? ந.ர.செ. ராஜ்குமார் அவர்களின் அழகான தமிழ் ஃபாண்ட்களை இலவசமாய் பெற்றிடுங்கள் என்பதில் சென்று பெற்றிடுங்களேன்.
கணினி பயன்படுத்தும் பெரும்பாலான அன்பர்கள் விண்டோஸ் ஒன்றையே நாடி இருக்க, MAC கணினி பயன்படுத்தும் அன்பர்களுக்கு தமிழ் தட்டச்சு செய்யும் வசதியை மேக் ஓ.எஸ்10.6ல் யுனிகோட் தமிழ் இந்தப் பதிவில் ராஜ்குமார் சொல்லி உள்ளார்.
அடுத்து லினக்ஸ் operating System. இதில் மிக முக்கியமானது உபுண்டு.இந்த உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்ய லினக்ஸில் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது? என்ற பதிவை படிக்கவும். மேலும் உபுண்டு பற்றிய தகவல்களை தமிழில் உபுண்டு தமிழ் என்ற தளத்தில் பெறலாம்.
இணையத்தில் முதல் தமிழ் தொழில்நுட்ப மாத இதழ் :
ஒரே நபரால் மட்டுமே அனைத்து தொழில்நுட்ப தளங்களையும் படிக்க முடியாது என்ற காரணத்தால், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க உருவானதே கற்போம் என்ற இணைய மாத இதழ். முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை மட்டுமே தாங்கி வரும் இந்த இதழ், இந்த தளத்தில் இருந்தே வெளியிடப்படுகிறது. இதுவரை வந்த இதழ்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
நீங்களும் ஒரு தொழில்நுட்ப பதிவர் என்றால், உங்களையும் இதில் இணைத்துக் கொள்ள விருப்பம் இருப்பின், இலவச தொழில்நுட்ப மின்னிதழ் "கற்போம்" என்ற பதிவின் மூலம் எப்படி என்பதை அறியலாம். அதே பதிவில் கற்போம் இதழில் தங்கள் பதிவுகளை பயன்படுத்த அனுமதி தந்து இருக்கும் வலைப்பூக்களை காணலாம்.
எதற்கு இந்தப் பதிவு?
மிக முக்கியமான தேடுதல் தளமான கூகுளில் தமிழ் என்று தேடினால் சில ஆபாச தளங்கள் வருகின்றன. அதை தவிர்க்கும் பொருட்டே இந்தப் பதிவு. இதனை பிளாக்கர் நண்பன் "அப்துல் பாஸித்" அவர்கள் தமிழ் என்ற பதிவின் மூலம் ஆரம்பித்தார். நீங்களும் ஒரு வலைப்பதிவர் என்றால், இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும். தமிழ் இலக்கியம், நாடகம், சிறுகதை என என எதை பற்றி வேண்டும் என்றாலும் எழுதுங்கள்.
9 comments
மேலும் சில பயனுள்ள தகவல்களை அறிந்துக் கொண்டேன். தமிழுக்காக பதிவிட்டதற்கு நன்றி சகோ.!
Replyதமிழ்ப் பற்று மிகுந்த தங்களுக்கு ஒரு முறை நன்றி சொன்னால் போதாது.
Replyஒரு நூறு முறை...அதற்கு மேலும்...
நன்றி...நன்றி...நன்றி,,,
நல்ல முறை..
Replyஎன்னால் முயன்றதை நானும் செய்ய முயற்சிக்கிறேன்..
இது தமிழுக்கு மட்டும் நேர்ந்த கதி அல்ல...
எனது பழைய பதிவு ஒன்றைப் படித்துப் பாருங்கள்:
http://www.aalunga.in/2011/12/blog-post.html
tamilmanam 6
Replyதமிழன் என்றல் மட்டும் அடிப்பாங்க ..
Replyஇன்று
Replyஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ
நிறைய பயனுள்ள பதிவுகளை பகிர்ந்துள்ளீர்கள். பதிவிற்கான அடிப்படைக்காரணமும் புரிந்தது. விரைவில் நமது தங்கம்ப்ழனி தளத்திலும் தாய் மொழியாம் அன்னைத் தமிழைப் பற்றிய அழகான பதிவொன்றை எதிர்நோக்கலாம். பகிர்வுக்கு நன்றி பிரபு..!!!
Replyமன்னிக்கவும்.உங்க பதிவை படிதபின் எனது முதல் முயர்ச்சி
ReplyTamil l type adikka theriyatha ennaium nanbanaga etrukol nanba
ReplyPost a Comment