குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? | கற்போம்

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி?

"உன் துணி அலமாரியைக் (wardrobe) காட்டு, நீ யாரென்று நான் சொல்கிறேன்" என்று ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்னார். அதே போல, உன் கணிணியைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன் என்றும் சொல்லலாம். நாள்பட்ட கோப்புகள், பயன்படாத ப்ரோகிராம்கள், வாழ்க்கையில் 3 அல்லது 4 முறை மட்டுமே பார்க்கப் படும் ஆனால் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் புகைப்படங்கள், பாடல்கள், முழுநீள திரைப்படங்கள்.
இது உங்களால் சேர்க்கப்பட்டவை என்றால் உங்கள் கணிணியும் அதன் பங்கிற்கு சிஸ்டம் ஃபைல்ஸ் என்று அழைக்கப்படும் பலவற்றை அப்படியே விட்டு வைத்து விடும். இப்படி இத்யாதி இத்யாதிகளுடன் பழைய பீரோ கணக்காய் இருக்கும் கணியா உங்களுடையது? அதை சற்று சுத்தப் படுத்தி, கொஞ்சம் வேகமாய் ஓடுமாறு முடுக்கி விட விருப்பமா? மேலே படியுங்கள், மன்னிக்கவும், கீழே படியுங்கள்.

*இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது ஞானபூமி

C cleanerஅல்லது க்ராப் க்ளீனர்: 

க்ராப் என்றால் குப்பை என்பது ஆங்கில ஸ்லேங்க் (slang).கணிணிக் குப்பையை செவ்வனே நீக்கும் செயலை சிறப்பாகச் செய்யும் க்ராப் க்ளீனர் தான் இப்பதிவின் கதாநாயகன்.

ஒரு வேண்டுகோள்- இதை க்ராப் க்ளீனர் அல்லது Ccleanerஎன்றே விளிப்போம். குப்பை நீக்கி, கக்கை போக்கி, என்று தமிழ்ப் படுத்த (தமிழைப் படுத்த) வேண்டாம். அப்படியே விட்டு விடலாம். வேண்டுமானால் "க்க்" என்று சிறியதாக அழைக்கலாம். ஆனால் உங்களுக்கு விக்குகிறதோ என்று யாரேனும் தண்ணீரைக் கொண்டு வரப் போகிறார்கள்!


எச்சரிக்கை 1: 

இதில் உள்ள சில பயன்பாடுகள் விண்டோஸின் ரெஜிஸ்ட்ரி அளவிற்குப் போய் வேலை செய்வதால் ஒரு முறை இதன் உதவி பக்கங்களைப் படித்து விடுவது நல்லது. பயப்பட ஒன்றுமில்லை என்ற போதிலும் விவரம் அறிய உதவும்.

இதன் முகப்பு:



உபயோகம்:

a)Cleaner

CC யை தொடங்கியதும் அது சில முன்மாதிரிகளைக் (default)கொண்டிருப்பது தெரியும். அது கணிணி பயனாளர் அனைவருக்கும் பொதுவாக இருக்கும். அதை அப்படியே விட்டும் விடலாம். உங்களுக்கு மேலும் விவரம் தெரியுமாயின் அதற்கேற்றார்போல நீங்கள் தேர்வு செய்தும் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு சிலர் குக்கீஸ் எனப்படும் குறிப்பிட்ட வெப் சைட் செட்டிங்ஸ் கொண்ட ஃபைல்களை அழிக்க விரும்ப மாட்டார்கள். நீங்கள் ஜிமெயிலைத் திறந்தவுடன் நேராக உங்கள் கணக்கிற்குக் கொண்டு செல்லும் "Stay signed in" என்பதை தேர்வு செய்திருக்கலாம். உள் நுழைவது கந்தசாமி தான், முனுசாமி இல்லை என்பதை உணர்த்தும் தேர்வுகள் அல்லது செட்டிங்க்ஸ், பாஸ்வேர்ட் முதலியன குக்கீஸில் இருக்கும். இது CC யில் செலக்ட் ஆகி நீக்கப்பட்டிருந்தால் நீங்கள் ஜி மெயில் திறக்கையில் அது மறுபடி உங்களை பாஸ்வேர்ட் கேட்கும், ரகசிய ஒரு-முறை குறி எண்ணை உங்கள் அலைபேசிக்கும் மாற்று ஈமெயில் முகவரிக்கும் அனுப்பும். எனவே CC எதையெல்லாம் க்ளியர் பண்ண வேண்டும் என்பதில் தெளிவு தேவை.

இதில் இரண்டு பாகம் உண்டு - குறிப்பாக விண்டோஸ் சம்பந்தப் பட்டது, இன்னொன்று அப்ளிகேஷன்ஸ் எனப்படும். இரண்டிலும் வேண்டியதைத் தேர்வு செய்யலாம்.



தெரியாததைத் தேர்வு செய்ய வேண்டாம். விட்டு விடவும். குப்பையை நீக்குகிறேன் பேர்வழி என்று கணிணியையே காலி செய்யும் அளவிற்குப் போகலாம். பொதுவாக CC என்ன தேர்வு செய்திருக்கிறதோ அதே போதுமானது.

Analyze என்பதை க்ளிக் செய்தால் CC உங்களுடைய கணிணியில் எவ்வளவு குப்பை இருக்கிறது என்று காட்டும். நீங்கள் RunCleaner ஐ தேர்வு செய்கையில் ஒரு எச்சரிக்கை விடுத்து விட்டு அவையனைத்தையும் நீக்கி விடும்.

b) Registry

இதில் பொதுவாக அனைத்துமே செலக்ட் செய்யப் பட்டிருக்கும். இதிலும் Scan for Issues & Fix selected issues மூலம் குப்பைகளை நீக்கலாம். இதற்கு முன் உங்கள் Registryயை பேக்கப் செய்து கொள்ளக் கேட்கும் CC.

c) Tools

இது மூன்றாவது. என்ன? கண்ட்ரோல் பேனலில் உள்ள Add/Remove Programs போலவே இருக்கிறதில்லையா? இது ஒரு சக்தி வாய்ந்த ஆனால் ஆபத்தான இடம். கவனம் :)

இதன் மூலம் தங்களுக்குத் தேவையில்லாத ப்ரோகிராம்களை நீக்கி விடலாம் (Uninstall). மேலும் கணிணி தொடங்கும் போதே அதன் மென்னியைப் பிடிக்கும் "தொடங்கும் போதே தொடக்கி விடு" அல்லது "Start with Windows" என்று ஆர்வக் கோளாறில் தேர்ந்தெடுத்த பல ப்ரோகிராம்களை சரி கட்ட Startup உதவும்.



உதாரணத்திற்கு நான் ட்ராப் பாக்ஸ் ப்ரோகிராமை தொடங்கும் போதே தொடக்கத் தடை செய்து விட்டேன். ஆனால் இதிலும் கவனம் தேவை நண்பர்களே.

System Restore மற்றும் Drive Wiper என்பதை எல்லாம் பயன்படுத்தத் தேவையிருக்காது, பெரும்பாலும்.அப்படியே தேவைப் பட்டால் Drive Wiperஎன்பது ஒரு ட்ரைவ்வின் மொத்தத்தையும் நீக்கி விடும். கவனம்.

இன்னபிற:

இது தானாகவே அப்டேட் ஏதும் உள்ளதா தனக்கு என்று பார்த்து விட்டு அதைத் தரவிறக்கம் செய்ய உங்கள் அனுமதி கேட்கும். நீங்கள் பின் அதை நிறுவிக்கொள்ளலாம்.

இடது புறம் கீழே இருக்கும் "Online Help" மூலம் இதன் உபயோகம் குறித்து மேலும் பல விவரங்களை அறியலாம்.

இதை ஒரு முறை ஓட்டி விட்டு தங்கள் கணிணி எவ்வாறு வேலை செய்கிறது என்று பாருங்கள்.

இதுகாறும் படித்தமைக்கு நன்றி. தங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். இதே போல் மற்றொன்று உண்டு. அதன் பெயர் ரெஜ்-க்ளீனர். இது கொஞ்சம் சென்சிடிவானது. இதைப் பற்றி வேறொரு பதிவில் சொல்லலாம்.

என்னைப் பற்றி: ஞானபூமி தளத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பதில் பெரு மகிழ்ச்சியும் இந்தியத் தமிழன் என்பதில் அளவற்ற பெருமையும் கொண்ட ஒரு சாதாரணன்.

15 comments

CCleaner உண்மையில் பயனுள்ள மென்பொருள். தகவலுக்கு நன்றி!

முதல் பத்தி என்னை பற்றி சொல்வது போல உள்ளது. ஹிஹிஹிஹி...

Reply

பயனுள்ள பதிவை வெளியிட்டதோடு.. பதிவினிடையே வார்த்தை விளையாட்டும் விளையாடி இருக்கிறார். பதிவர்...

***மேலே படியுங்கள், மன்னிக்கவும், கீழே படியுங்கள்.*** இவ்வாறு.

அடுத்து சொல்வதென்றால் "க்க்" என்று சொன்னால் உங்களுக்கு விக்குகிறதா என நகைச்சுவையும் கலந்து விட்டிருக்கிறார்..

ஆக, தொழில்நுட்பப் பதிவிலும் இவ்வாறு இடைச்செருகல் செய்து படிப்பவர்க்கு ஒரு உற்சாக மனநிலையை கொண்டு வந்திருக்கிறார் பதிவர்.. உண்மையிலேயே வித்தியாசமான எழுத்து நடையுடன் கூடிய தொழில்நுட்ப்ப் பதிவு..

எழுதிய ஞானபூமிக்கும், வழங்கிய பிரபு கிருஷ்ணாவிற்கும் வாழ்த்துகள்..!!!

Reply

அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
சுவாரஸ்யமாகச் சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
பகைர்வுக்கு நன்றி

Reply

எனக்கு மிகமிகப் பயன்படும் பதிவு தோழா. மனமார்ந்த நன்றி!

Reply
This comment has been removed by the author.

CCleaner நான் உபயோகப்படுத்திக்கிட்டு இருக்கேன்.. நல்ல பதிவு நண்பா

நட்புடன்
கவிதை காதலன்

Reply

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

Reply

அருமையான பதிவு

Reply

நல்ல தகவல்..
பதிவின் ஊடே நகைச்சுவையும் கலந்திருப்பது நன்றாக இருக்கிறது!!

Reply

//இந்தியத் தமிழன் என்பதில் அளவற்ற பெருமையும் கொண்ட ஒரு சாதாரணன்//
இன்னும் உட்பிரிவு ?

Reply

இந்த கமாண்ட் பாக்ஸை வரவைப்பது எப்படி?

Reply

Blogger >> Settings >> Posts and Comments >> Comment Location >> Embedded.

Reply

http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_19.html

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் இருந்தால் வந்து பார்வையிடவும்.

Reply

Post a Comment