March 2012 | கற்போம்

Free Make - மிகச் சிறந்த Video Converter இலவசமாக

சில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு. 

Corrupt ஆன Zip File-இல் இருந்து எப்படி Fileகளை Extract செய்வது?

சில நேரங்களில் நாம் வைத்து இருக்கும் Zip File-இல் ஏதேனும் பிரச்சினை என்றால் அதில் இருக்கும் ஒரு File-ஐ கூட நம்மால் Extract செய்ய இயலாது. ஏதேனும் ஒரு file Damage/corrupt ஆகி இருந்தாலும் நமக்கு இந்த பிரச்சினை வரும். ஆனால் அதனுள் இருக்கும் Damage ஆகாத File-களை மட்டும் நாம் பெற முடிந்தால்? எப்படி செய்வது?

Recent Item History-களை தானாக நீக்குவது எப்படி?

நம் தனிப்பட்ட தகவல்களை அடுத்தவர்கள் பார்த்தால் நமக்கு எப்படி இருக்கும்? கணினியில் அப்படி யாரேனும்  உங்களுக்கே தெரியாமல் உங்களை கவனித்தால்? நீங்கள் கணினியில் என்ன செய்கிறீர்கள் என்பதை அடுத்தவர் அறியா வண்ணம் செய்வது மிகவும் முக்கியம்.  இதற்கு முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் Recent Items History என்பதை நீக்க வேண்டும். எப்படி?

Word Web - மிக அருமையான இலவச அகராதி(Dictionary)

பகிர்வதிலே வளர்ச்சி யுண்டாம் - பகிராவிடில்
தனியாவர்த்தனம் செய்வாய் காண்

என்று வள்ளுவர் இன்றிருந்தால் ஒரு குறள் எழுதியிருப்பார் பகிர்வதில் உள்ள மேன்மையைப் பற்றி. தொழில்நுட்ப அறிவினைத் தாய்மொழியாம் தமிழில் பகிர்வதில் ஆர்வமும் உயர்ந்த நோக்கமும் கொண்ட கற்போம் தளத்திற்கு முதலில் ஞானபூமியின் நன்றிகள்.

கூகிள் தேடலில் (Google Search) விரும்பத்தகாத தளங்களை தவிர்ப்பது எப்படி?

கூகிள் ஒரு அருமையான தேடல் களம். அதே நேரம் ஒரு கண்ணாடி. நாம் என்ன விரும்புகிறோமோ அதனை பிரதிபலிக்கும் திறம் கொண்டது. எந்த தளம், என்ன மாதிரியான தளம் என்பதை எல்லாம் பார்க்காமல் நாம் தேடுவதை மட்டும் எங்கிருந்தும் எடுத்து தரும். அப்படி தேடுதலில், பாதுகாப்பாய் நல்ல தகவல்களை மட்டும் எப்படி தேடுவது?


நீங்கள் கூகிள் தேடுபொறியில் (Google Search Engine) சில குறிச்சொற்களைக் (keywords) கொண்டு தேடும் போது, உங்களுக்காக பல அதிர்ச்சிகள் காத்து இருக்கலாம்.

நீங்களே விரும்பாத தளங்கள், சொற்களின் பயன்பாட்டால், தேடலின் முதல் பக்கத்தில் குவியலாம். விரும்பத்தகாத செய்திகளை உள்ளடக்கிய வலைத்தளங்களை உங்கள் தேடலில் வராமல் எப்படி தவிர்ப்பது என்று யோசிக்கிறீர்களா?

அப்ப சரியான இடத்திற்குத் தான் வந்து இருக்கீங்க!! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்:

கூகிள் தேடலின் போது வலது பக்கம் பாருங்கள். அங்கு இருக்கும் சக்கரத்தைச் சுட்டுங்கள். அதில் ' Search Settings' ஐ சொடுக்குங்கள்.



அடுத்து வரும் பக்கத்தின் முதலிலேயே "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!!

வரும் பக்கத்தில் , "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!!



தேர்வு செய்த பின்னர், விருப்பங்களைச் சேமிக்க மறவாதீர்கள்!!

ஒவ்வொரு நிலைக்கும் என்ன வேறுபாடு?

Strict filtering - வெளிப்படையான (sexually explicit) பாலின பக்கங்கள் அனைத்தையும், அதற்கு செல்லும் வழிகளைக் கொண்ட பக்கங்களையும் (links) தவிர்க்கும்

Moderate filtering - வெளிப்படையான பாலின பக்கங்கள் அனைத்தையும் தவிர்க்கும். வழிகள் தவிர்க்கப்படாது.
[இது தான் இயல்பிருப்பு (default) நிலையாகும்]

No filtering : எந்த தடையும் இல்ல. எல்லா விதமான பக்கங்களையும் காட்டும்.

எல்லா இடங்களிலும் செய்வது எப்படி?

நீங்கள் உங்கள் கூகிள் கணக்கைக் கொண்டு பல கணிணிகளில் வேலை செய்ய வேண்டி இருக்கலாம். எல்லா கணிணிகளிலும் இதனைச் செய்வது இயலாத காரியம். நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்து தேடும் போது, எந்த கணிணியிலும் அதனைச் செயல்படுத்த வழி உண்டு.

SafeSearch Filtering பகுதியில் "Lock Safe Search" என்று ஒரு இடம் உள்ளது. அதனைச் சொடுக்குங்கள்..

இதன்பின், நீங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து தேடினால், நீங்கள் தேர்ந்தெடுத்த அதே அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கும்.

தமிழ் வழித்தேடலிற்கு

மேற்கூறப்பட்ட வழி ஆங்கில வழி தேடலிற்கு (English Search) மட்டுமே பயன்படும். தமிழ் வழி தேடல் வைத்து இருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது.

நீங்கள் தமிழில் கூகிள் பயன்படுத்துபவராக இருந்தால், மொழிமாற்றம் செய்து ஆங்கில மொழிக்குச் செல்லுங்கள். பிறகு மீண்டும் தமிழிற்கு மாறிக் கொள்ளுங்கள். இனி தொடருங்கள் !!!

நீங்கள் பாதுகாக்கப்பட்ட தேடலைத் (SafeSearch Filtering) துவங்கிய பிறகும், சில தகாத வலைத்தளங்களை தேடலில் காண வாய்ப்பு உண்டு..

சில உதாரணங்கள்:
  • தமிழ் என்று தேடிப் பாருங்கள்... முதலில் வரும் பதில் உங்களைத் திகைக்க வைக்கும்.
  • தமிழ் மொழியின் உறவுகள் பெயரைத் தேடிப் பாருங்கள். கிடைக்கும் பதில்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கும்

மேலே கூறப்பட்ட செய்திகள் Moderate Filter மட்டும் அல்ல.. Strict Filter முறையிலும் வரும் என்பது தான் சோகமான செய்தி!!

பதில்களில் வரும் "அது" போன்ற வலைத்தளங்கள் மிக கேவலமானவை. அவற்றை எழுதி பிறரைக் குறி வைப்பவர்கள் மனிதர்களாக வாழவே லாயக்கு அற்றவர்கள்.

சில குறிசொற்களைக் கொண்டு வடிப்பானை (Filter) ஏமாற்றி வந்து விடுகிறன...

இவற்றைக் குழந்தைகள் காண நேர்ந்தால் என்ன ஆகும்?

எழுதும் பதர்கள் ஏனோ இவற்றைப் பற்றி யோசிப்பதில்லை. பின்னே, யோசித்தால் அவர்களின் பிழைப்பு என்னாவது?

இது தொடர்பான பதிவுகள்:

அம்மாவுக்கு நேர்ந்த கொடுமை

அந்த வகையான தளங்களை பின்னுக்கு தள்ளி, நல்ல தகவல்களை முன்னெடுக்கும் பொருட்டு எழுதியவை கீழே உள்ள இரண்டும்.


தமிழ் மொழிக்கு இழுக்கைத் தரும், தமிழர் பண்பாட்டைச் சிதைக்கும் இது போன்ற தளங்களைத் தேடலில் இருந்து நாம் களைய வேண்டாமா????
அவற்றைப் புறந்தள்ள வேண்டாமா?

கீழ்காணும் பக்கத்திற்குச் செல்லுங்கள்:



https://www.google.com/webmasters/tools/safesearch

குறிப்பிட்ட வலைத்தள முகவரியை உள்ளிட்டு, "Report Content" என்பதனைச் சுட்டுங்கள்.

இதனை ஒருவராக மட்டும் செய்தால் பெரிய பலன் இருக்காது. ஆனால், "எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்பது போல, பலரும் சேர்ந்து செய்தால் அது போன்ற தளங்களைத் தேடலில் இருந்து தவிர்க்கலாம். மேலும் தமிழ் வலைப்பதிவர்கள் தங்களால் இயன்ற வரை நல்ல தகவல்களை தமிழ் என்ற தலைப்பில் எழுத வேண்டும். இதுவும் ஒரு சிறந்த வழி தான். 

தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்.. புதர்களைக் களை எடுப்போம்!!


என்னைப் பற்றி:
ஆளுங்க என்பது எனது புனைப் பெயர். சோழர்கள் கோலோச்சிய நகரில் பிறந்து, சேரர்கள் ஆண்ட பகுதியில் கல்வி பயின்று , இன்று பாண்டியர் பூமியில் பணிபுரிபவன். தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.

அவிழ்மடல்:


அடியேன் உலகுடன் உரையாட வழிவகை செய்யும் வலைப்பூ. எனது தமிழ் ஆர்வத்திற்குச் சிறிதளவேனும் ஊக்கம் கொடுக்கும் தளம். 

தமிழ் தமிழ் தமிழ் - எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

இணையத்தில் உலகின் பெரும்பாலான மொழிகள் புழக்கத்தில் இருந்தாலும். நம் தாய்மொழி தமிழ்மொழிக்கு இடமே தனி. கிட்டதட்ட உங்களுக்கு தேவையான அனைத்தும் தமிழிலேயே இணையத்தில் கிடைக்கிறது. அவைகளைப் பற்றிய ஒரு அலசலே இந்தப் பதிவு.

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு


இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம். 

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி?

"உன் துணி அலமாரியைக் (wardrobe) காட்டு, நீ யாரென்று நான் சொல்கிறேன்" என்று ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்னார். அதே போல, உன் கணிணியைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன் என்றும் சொல்லலாம். நாள்பட்ட கோப்புகள், பயன்படாத ப்ரோகிராம்கள், வாழ்க்கையில் 3 அல்லது 4 முறை மட்டுமே பார்க்கப் படும் ஆனால் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் புகைப்படங்கள், பாடல்கள், முழுநீள திரைப்படங்கள்.

Hotmail/ஹாட்மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

கடந்த பதிவுகளில் யாஹூ மின்னஞ்சலில் பயன்படும் keyboard Shortcut -கள் மற்றும் ஜிமெயிலில் பயன்படும் keyboard Shortcutகளை கொடுத்து இருந்தோம். அதே போல இன்றும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒன்று Hotmail. இதிலும் நீங்கள் shortcut களை பயன்படுத்த முடியும். இதன் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட், ஜிமெயில், யாஹூ என்று எதன் Shortcut முறையையும் நீங்கள் இதில் கையாள முடியும்.

வித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்துவது எப்படி?

நாம் அனைவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நமது ப்ளாக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும்? நம் வலைப்பூவுக்கு வரும் வாசகர்களை வித விதமான வகையில் எழுத்துருக்களை(Font) பதிவில் பயன்படுத்தி கவரும் வழிதான் இன்றைய பதிவு. எப்படி செய்வது என்று காண்போமா? இதன் படி தமிழ் எழுத்துக்களையும் நிறைய ஸ்டைல்களில் காட்ட முடியும்.

Gmail/ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

இணையத்தில் இன்று பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் ஈமெயில் என்றால் அது ஜிமெயில் தான். இதில் நீங்கள் shortcut கள் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்கள் நேரம் குறையும். சில முக்கிய Shortcut களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

யாஹூ/Yahoo மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts


கணினி உபயோகிக்கும் அனைவரும் தங்கள் செய்யும் செயலை விரைவாக முடிக்க தங்களுக்கு தெரிந்த எளிய Shortcut களை பயன்படுத்துவர். அந்த வகையில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்குக்கும் சில எளிய Shortcut களை பயன்படுத்த முடியும். இன்று யாஹூ மின்னஞ்சலுக்கான Shortcut களை இன்று பார்க்கலாம்.  

மார்ச் மாத கற்போம் இதழ்

கற்போம் மார்ச் மாத இதழ். மிக அருமையான கட்டுரைகளுடன்.  ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். 

Discounts விலையில் Bigrock-இல் டொமைன் வாங்க

பதிவர்கள் பலருக்கும் டொமைன் வாங்கும் ஆசை உள்ளது. அப்படி டொமைன் வாங்க விரும்பும் நண்பர்களுக்கு கடந்த பதிவு ஒன்றில் எங்கே கஸ்டம் டொமைன் வாங்குவது? என்று சொல்லி இருந்தேன். இப்போது bigrock-இல் 10% Discount விலையில் டொமைன் வாங்கும் வாய்ப்பு உள்ளது.