சில நாட்களுக்கு முன் இந்திய பதிவர்களின் வலைப்பூ முகவரியை கூகுள் தளம் மாற்றிய பின் நிறைய பதிவர்கள் தங்களை வலைப்பூவை சொந்த டொமைன்க்கு மாற்றி வருகின்றனர். எல்லோராலும் பிளாக்கரில் உள்ள வசதி மூலமே கஸ்டம் டொமைன் பெற முடியாத நிலையில் எங்கு டொமைன் வாங்குவது என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பதிவு.
பிளாக்கர் தளத்தில் உள்ள வசதி மூலம் டொமைன் வாங்க இந்திய டெபிட் கார்டுகள் பல உகந்ததாக இல்லை. இந்த நிலையில் நண்பர்களின் உதவியோடு கிரெடிட் கார்டு மூலம் வாங்க பலர் முடிவு செய்கின்றனர். ஆனால் இதுவும் உகந்தது இல்லை. எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. எனவே சொந்தமாக டொமைன் வாங்க விரும்புபவர்கள் முதலாவதாக முடிவு செய்ய வேண்டியது தான் வாங்கினால் எங்கே வாங்குவது?
Godaddy தளம் உகந்தது என்றாலும் SOPA விசயத்தில் அதன் நிலைப்பாட்டில் அதன் மதிப்பு சரிந்து விட்டது. அத்தோடு சில வசதிகளுக்கு அவர்கள் தனியாக பணம் வசூலிக்கிறார்கள். எனவே நான் உங்களுக்கு சொல்வது,
இது முழுக்க முழுக்க இந்தியர்களுக்கே உகந்த ஒன்று என்றால் மிகையாகாது.
இப்போது bigrock-இல் 15% Discountவிலையில் டொமைன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கீழே உள்ள இணைப்பில் அதை அறியலாம்.
15% Discount விலையில் Bigrock-இல் டொமைன் வாங்க
இப்போது bigrock-இல் 15% Discountவிலையில் டொமைன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கீழே உள்ள இணைப்பில் அதை அறியலாம்.
15% Discount விலையில் Bigrock-இல் டொமைன் வாங்க
முதலில் டொமைன் வாங்க வேண்டும் என்றால் டெபிட்/கிரெடிட் கார்டு இரண்டுமே வேண்டாம் என்கிறது இந்த தளம். இதன் பெரிய பலமே இதுதான். கிரெடிட்/டெபிட் கார்டு இல்லாமல் எப்படி டொமைன் வாங்குவது என்று இங்கே படிக்கலாம்.
அடுத்து நீங்கள் Bigrock மூலம் வாங்கிய டொமைன் ஒன்றை உங்கள் வலைப்பூவில் எப்படி பயன்படுத்துவது? இதற்கும் அவர்கள் மிக எளிய வழியை தந்து உள்ளனர். சில நிமிடங்களில் இந்த வேலை முடிந்து விடுகிறது. அதை BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி? என்ற பதவில் கற்போம் மிக விரிவாக விளக்கி உள்ளது.
மேலும் பலர் ஒரே தளத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைத்து இருந்தால், ஏதேனும் ஒன்றுக்கு Sub-Domain உருவாக்க விரும்புவார்கள். அல்லது, சாதாரணமாக ஒரு Sub-Domain அமைக்க விரும்பும் நண்பர்களும் உள்ளார்கள் அதற்கும் இங்கே எளிய வழிதான். அதையும் எப்படி என்று அறிந்து கொள்ள BigRock டொமைனுக்கு Sub Domain அமைப்பது எப்படி? என்ற பதிவை படிக்கலாம்.
இதன் மூலம் நிறைய Sub-Domain களை நீங்கள் உருவாக்க முடியும்.
சரி கூகுள் மூலம் வாங்கினால் எனக்கு மின்னஞ்சல் முகவரி கிடைக்குமே இதில் என்ன கிடைக்கும் என்ற கேட்டால், அவர்கள் இரண்டு இலவச மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி தருகிறார்கள். இரண்டும் 2GB அளவு உடையவை. Bigrock இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி? எப்படி என்ற பதிவில் இதை தெளிவாய் கூறி உள்ளோம்.
இதன் மிகப் பெரிய வசதி நீங்கள் இந்த மின்னஞ்சலுக்கு வரும் வரும் ஈமெயில்களை Forward/Redirect செய்ய முடியும். இதை நீங்கள் மேலே கூறி உள்ள பதிவில் கடைசி வரியில் காணலாம்.
இந்த தளத்தில் .in டொமைன்கள் வெறும் 99 ரூபாய்க்கும், .com ரூபாய் 549 க்கும், .net ரூபாய் 499 க்கும் கிடைக்கிறது. (21-02-2012 அன்றைய நிலை).
மற்றபடி உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பின் அவர்கள் மிக எளிதாக அதை தீர்த்து வைக்கிறார்கள். மற்றபடி Bigrock தொடர்பான உங்கள் சந்தேகங்களை admin@karpom.com லும் கேட்கலாம். (இது கற்போம் தள மின்னஞ்சல் முகவரி, எங்களால் முடிந்த வரை உங்களுக்கு உதவுவோம்.)
என்ன நண்பர்களே டொமைன் வாங்க ரெடியா? இங்கிருந்தே ஆரம்பியுங்கள்.
- பிரபு கிருஷ்ணா
8 comments
மிகப்பயனுள்ள பதிவு
Replyரைட்டுங்கோ + நன்றிங்கோ!
Replyகஸ்டம்னு சொல்றீங்க. அப்ப அதை ஏன் வாங்கணும் சகோ.?
Reply:) :) :)
@ Abdul Basith
Replyஹா ஹா ஹா. அது வேற கஷ்டம, இது வேற கஸ்டம். ஆனா டொமைன் வாங்குறது உங்க இஷ்டம். ஹி ஹி ஹி
thank u prabu ialso last month ask u the same question
ReplyVery useful and informative.......i wish to use it for my http://internetnanban.blogspot.in ?
ReplyKarthikeyan
பயன்படும் தகவல் பிரபு!
Replyஇதைப் பின்பற்றியே தளம் வாங்கினேன்..
Replyநன்றி!!
(தாமதமான நன்றிக்கு மன்னிக்க)
Post a Comment