MS Office Word-சில கேள்வி பதில்கள் | கற்போம்

MS Office Word-சில கேள்வி பதில்கள்

கணினியை பயன்படுத்துபவர்கள் MS Office Word ஐ பயன்படுத்தாமல் இருப்பதில்லை. அடிக்கடி பயன்படுத்தும் போதும் இதில் சில சமயம் நமக்கு சில சந்தேகம் வருவது உண்டு. அப்படி எனக்கு தோன்றிய சந்தேகங்களையும்,  கிடைத்த பதில்களும் உங்களுக்கு இங்கே. உங்களுக்கு வேறு சந்தேகம் இருப்பின் கீழே கமெண்ட் பகுதியில் கேட்கலாம். 

1. ஒரு Word File- இல் உள்ள அனைத்து லிங்க்களையும்(Hyperlink) ஒரே கிளிக் மூலம் remove செய்வது எப்படி? 

இது மிகவும் எளிது. முதலில் CTRL+A கொடுத்து முழு Document-ஐயும் தெரிவு செய்து கொள்ளவும். பின்னர் CTRl+SHIFT+F9 இவற்றை ஒரு சேர அழுத்தவும். அவ்ளோதான் எல்லா லிங்க்களும் நீக்கப்பட்டு விடும். 

2. MS Office 2007 File களை 2003 இல் ஓபன் செய்வது எப்படி? 

2007 இன் file கள் அனைத்தும் Docx என்று முடியும். இதற்கு உங்கள் Word file Extension மாற்ற வேண்டும். இதற்கு My Computer ஓபன் செய்து  Tools-->Folder Options... என்பதை கிளிக் செய்யவும். 



 இதில்  "Hide Extensions For Known File Types"  என்பதை Unclick செய்து விடவும்.


இப்போது ஓபன் செய்ய வேண்டிய File பெயரில் .DOCX என்று உள்ளதை .DOC என்று மாற்றி விட்டு ஓபன் செய்யவும். 

நீங்கள் Office 2007 பயன்படுத்தினால் Save As என்பதை கிளிக் செய்து Word 97-2003 Document என்பதை தெரிவு செய்தால் 2003 -இல் எளிதாக ஓபன் செய்ய முடியும். இதனால் File Missing போன்ற பிரச்சினைகள் வராது. 

3. Resume/Bio-Data போன்றவற்றில் சரியானபடி படத்தை சேர்ப்பது எப்படி? 

இது சிலருக்கு மிக கடினமாகத் தோன்றும். சாதாரணமாக படத்தை மாற்றாமல், சிறிய வேலை செய்ய வேண்டும். என்ன என்று பார்க்கலாம். 

முதலில் படத்தை சேர்க்க Insert--> Picture என்று கொடுக்கவும். இப்போது வரும் படத்தை சரியான அளவுக்கு மாற்றிக் கொள்ளவும். 

இப்போது Format என்பதை  கிளிக் செய்து Text Wrapping என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் "Behind Text" என்பதை தெரிவு செய்து விட்டால். உங்கள் படத்தை சரியான படி எங்கே வேண்டுமானாலும் அமைக்க முடியும். 


4. Copy Paste செய்யும் போது Link,Bold,Italic என எல்லாவற்றையும் நீக்கி விட்டு Paste செய்வது எப்படி? 

இதற்கு நிறைய பேர் சொல்லும் பதில் Notepad-இல் paste செய்து விட்டு பின்னர் Word இல் Paste செய்யவும். ஆனால் அப்படி செய்யத் தேவை இல்லை. 

எதை பேஸ்ட் செய்ய வேண்டுமோ அதை பேஸ்ட் செய்து விடுங்கள். இப்போது பேஸ்ட் செய்த பகுதியின் வலது கீழ் மூலையில் ஒரு Paste Options என்று பகுதி இருக்கும்.  பரீட்சை அட்டை போன்ற வடிவில். அதை தெரிவு செய்து Keep Text only என்பதை கொடுத்து விடவும். இப்போது சாதாரண Text File மட்டுமே இருக்கும். எந்த வித Format ம் உங்கள் Text-இல் இருக்காது. (படத்தில் உள்ளதை தெரிவு செய்ய வேண்டும்.)


5. அடிக்கடி பயன்படுத்தும் Option/Command களை Tool Bar இல் சேர்ப்பது எப்படி? 

இதற்கு உங்கள் Word File இன் இடது மேல் மூலையில் உள்ள Save Icon க்கு அருகில் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியை கிளிக் செய்து வரும் option களை தெரிவு செய்யலாம். 


அதில் இல்லாததை சேர்க்க விரும்பினால், அந்த மெனுவில் "More Commands" என்று வருவதை கிளிக் செய்யவும். இப்போது ஒரு சிறிய விண்டோ வரும், அதில் இடது பக்கத்தில் உள்ளதில் இருந்து தேவையான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து ADD என்பதை கொடுக்க வேண்டும். பின்னர் Ok கொடுத்து விடவும். (படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணலாம்). 



6. MS-Word 2007 - இல் என்னென்ன Shortcut வசதிகள் உள்ளன. ?

அனைத்து Shortcut வசதிகளையும் பற்றி தெரிந்து கொள்ள இந்த PDF File-ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும். 


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். உங்களுக்கு வேறு சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

- பிரபு கிருஷ்ணா

10 comments

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

Reply

எனக்குள்ளும் இத்தகைய சந்தேகங்கள் வந்ததுண்டு. நல்ல தீர்வுகள். நன்றி.

Reply

MS Office பயன் படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

Reply

நல்ல பதிவு நண்பரே..

ஆனால், ஒரே ஒரு சந்தேகம்

//சமீபத்தில் Office 2003 இல் இருந்து 2007 க்கு மாறி உள்ளேன். என்னுடைய பழைய 2003 File களை 2007 இல் ஓபன் செய்வது எப்படி? //

இதற்கு DOC ஐ DOCX என மாற்றத் தேவையில்லை என்றே கருதுகிறேன். (நான் என்றும் அப்படி மாற்றித் திறந்ததில்லை)
2003 இல் உருவாக்கப்பட்டவை தானாகவே 2007 இல் திறக்கும். (ஒரு வேளை எனக்கு மட்டும் திறக்குதோ?)

Reply

@ ஆளுங்க (AALUNGA)

அநேகமாக நான் மாற்றி பதிவில் கூறி உள்ளேன் என்று நினைக்கிறேன். 2007 ஐ 2003 இல் ஓபன் செய்ய வேண்டும் என்று கேள்வி இருக்க வேண்டும்.

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி சகோ.

Reply

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதிலும் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

Reply

MS Word-ல் தெரியாத சில விசயங்களையும் தெரிந்துக் கொண்டேன். நன்றி சகோ.!

Reply

விண்டோஸ் XP OS இலவசமாகக் கிடைக்கும் தளங்கள் என்ன அதை எப்படி இன்ஸ்டால் செய்வது.

Reply

அதை நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கேட்டு பெறலாம். Pirated என்பதால் தளம் எதையும் நான் சிபாரிசு செய்ய இயலாது மன்னிக்கவும்.

Reply

Post a Comment