தற்போது கூகுள் இந்திய பிளாக்கர்களின் முகவரிகளை மாற்றிய பின் நிறைய நண்பர்கள் புதிய டொமைன்க்கு மாறி வருகிறார்கள். அப்படி மாறும் நண்பர்கள் பலர் Bigrock தளத்தை தான் தெரிவு செய்கிறார்கள். அப்படி உருவாக்கும் நண்பர்களுக்கு அந்த அக்கௌன்ட் மூலம் இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்க முடியும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
BigRock ன் மிகப்பெரிய சிறப்பு கிரெடிட்/டெபிட் கார்டு எதுவுமே இல்லாமல் வாங்க முடியும். இதன் மூலம் டொமைன் வாங்கி இருந்தால் அதை பிளாக்கர்க்கு பயன்படுத்த இந்த பதிவை படிக்கவும்.
சரி இப்போது மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
1. முதலில் BigRock தள முகப்புக்கு செல்லுங்கள்.
2. உங்கள் அக்கவுண்ட்க்குள் Log-In செய்து கொள்ளுங்கள்.
3. இப்போது "Domains--> List All Orders" என்பதை கிளிக் செய்யவும்.
4. உங்கள் "Domain Name" மீது கிளிக் செய்யுங்கள்
5. இப்போது அதில் வலது பக்கம் உள்ள மெனு பாரில் "Email" என்பதை கிளிக் செய்யவும்.
6. இப்போது Manage Email என்பதை கிளிக் செய்யவும்.
7. இப்போது வரும் அடுத்த பக்கத்தில் கீழே உள்ளது போல ஒரு படம் இருக்கும். அதில் Click Here To Verify என்பதை கிளிக் செய்யவும்.
அதில் Verification Failed அல்லது Failed To Verify என்று வரலாம். விட்டு விடுங்கள்.
8. இப்போது அதே பக்கத்தில் Add User என்பதை கிளிக் செய்யவும். இதை பார்க்க முடியாவிட்டால் முந்தைய Tab-இல் திரும்ப Manage Email என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது கீழே உள்ளவாறு தகவல்களை நிரப்பவும்.
9. இப்போது உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிக்கு உங்கள் கடவுச் சொல் அனுப்பப்படும். அதைக் கொடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைய http://webmail.mydomain.com (இதில் mydomain என்ற இடத்தில் உங்கள் டொமைன் பெயர் வரும்)
10. உங்கள் கடவுச் சொல்லை மாற்ற உங்கள் இன்பாக்ஸ் பக்கத்தில் உள்ள Settings என்பதை கிளிக் செய்து மாற்றலாம்.
11. இதற்கு வரும் மின்னஞ்சல்களை உங்கள் ஜிமெயில்/யாஹூ அக்கௌன்ட்டில் இருந்தே படிக்க விரும்பினால் Forwarding andPOP/IMAP Settings என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி தரலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.
- பிரபு கிருஷ்ணா
5 comments
பயனுள்ள செய்தி
Replyபயனுள்ள பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
Replymachi superu...........
ReplyThank you but i use godaddy..................
அவசியமான பதிவு.
Replyநன்றி.. உருவாக்கி விட்டேன்!
ReplyPost a Comment