February 2012 | கற்போம்

Facebook Fan Page க்கும் Time Line வசதி

சில மாதங்களுக்கு முன்பு facebook தளம் தனது பயனர்களுக்கு புதிய Time Line என்ற வசதியை அறிமுகம் செய்தது. மிக அழகிய கவர்ச்சியான வடிவில் இருந்த அதை கிட்டத்தட்ட எல்லோரும் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது இதே வசதி நீங்கள் Facebook Fan Page வைத்து இருந்தால் அதற்கும் கிடைக்கும். 

கூகுள் பிளஸ் நண்பர்களுடன் சாட் செய்ய தனி வசதி

அலுவலகத்தில் இருக்கும் போது நிறைய சமூக வலைத்தளங்கள் Block  செய்யப்பட்டு இருக்கலாம். அப்போது அந்த தளத்தில் உள்ள நண்பர்களுடன் நம்மால் தொடர்பு கொள்ள முடியாது. அந்த வகையில் உங்களுக்கு கூகுள் பிளஸ் தடை செய்யப்பட்டு இருந்தால் அதில் உள்ள நண்பர்கள் உடன் chat பயன்படும் வசதிதான் "கூகிள்  சாட்"

பிளாக்கர் பதிவில் இனி மிக எளிதாக Table உருவாக்கலாம்

அதென்னவோ தெரியவில்லை எனக்கும், பதிவிற்குள் ஒரு டேபிள் create செய்வது பற்றிய பதிவுக்கும் அதிக ராசி போல. தொடர்ந்து அதைப் பற்றிய பதிவுகளே எழுதுகிறேன். இந்த முறை என் வாசகர்களுக்கு மிக மிக மிக மிக(எவ்ளோ போட முடியுமோ அவ்ளோ போட்டுக்கோங்க) எளிதாக ஒரு டேபிள் உருவாக்குவது எப்படி என்று சொல்கிறேன்.

MS Office Word-சில கேள்வி பதில்கள்

கணினியை பயன்படுத்துபவர்கள் MS Office Word ஐ பயன்படுத்தாமல் இருப்பதில்லை. அடிக்கடி பயன்படுத்தும் போதும் இதில் சில சமயம் நமக்கு சில சந்தேகம் வருவது உண்டு. அப்படி எனக்கு தோன்றிய சந்தேகங்களையும்,  கிடைத்த பதில்களும் உங்களுக்கு இங்கே. உங்களுக்கு வேறு சந்தேகம் இருப்பின் கீழே கமெண்ட் பகுதியில் கேட்கலாம். 

சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

நண்பர்கள் சிலர் அனுப்பும் மெயில்களை திறந்து பார்த்தால் ஒரு பெரிய நியூஸ்பேப்பர் அளவுக்கு அவர்கள் யாருக்கெல்லாம் அந்த மெயில் அனுப்பி உள்ளனர் என்று இருக்கும்.அதை எல்லாம் தாண்டி வந்து படிப்பதற்குள்  போதும் போதும் என ஆகி விடும். இதை தவிர்த்து நீங்கள் யாருக்கெல்லாம் அனுப்பி உள்ளீர்கள் என்பதை  எப்படி மறைப்பது என இந்த பதிவில் காணலாம்.

எங்கே கஸ்டம் டொமைன் வாங்குவது?

சில நாட்களுக்கு முன் இந்திய பதிவர்களின் வலைப்பூ முகவரியை கூகுள் தளம் மாற்றிய பின் நிறைய பதிவர்கள் தங்களை வலைப்பூவை சொந்த டொமைன்க்கு மாற்றி வருகின்றனர். எல்லோராலும் பிளாக்கரில் உள்ள வசதி மூலமே கஸ்டம் டொமைன் பெற முடியாத நிலையில் எங்கு டொமைன் வாங்குவது என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பதிவு. 

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்

ஐபோனுக்கு அடுத்த படியாக சக்கை போடு போடும் ஃபோன்கள் android OS உள்ளவை. இதை பயன்படுத்துவது ஒரு குட்டி கம்ப்யூட்டர் என்ற அளவுக்கு மிக அதிகமான வசதிகள் உள்ளன. அந்த வசதிகள் முழுவதும் நமக்கு Applications என்ற பெயரில் Android Market என்ற தளத்தில் கிடைக்கிறது. ஆனால் கிட்டதட்ட 2 லட்சத்துக்கும் மேலான வசதிகளில் நமக்கு தேவையானவற்றை மட்டும் எப்படி தேடி எடுப்பது. எனவே சில எல்லோரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டி வரும். அவை எவை என்று அறிவோமா?

Facebook-ஆ Google+-ஆ இரண்டும் இல்லை

சமூக வலைத்தளங்களில் முகநூலுக்கும், கூகிள்+-க்கும் இடையே பங்காளி சண்டை இருப்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த சண்டையை சாதகமாக பயன்படுத்தி புதிதாக ஒரு வலைத்தளம் வந்தால் எப்படி இருக்கும், அதுவும் நமது இந்தியா-வில் இருந்து வந்தால் நமக்கு நற்செய்தி தானே. உண்மையில் அதைவிட நற்செய்தி ஒன்று உள்ளது, அந்த வலைத்தளத்தை பயன்படுத்தி பணமும் சம்பாதிக்கலாம் என்பது தான்.

ஜிமெயிலில் From Address மாற்றி மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

கடந்த முறை எழுதிய பதிவில் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி  Forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப மீண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் Receive செய்த முகவரியில் இருந்தே From Address மாற்றி அனுப்ப முடிந்தால்? அது எப்படி என்பது தான் இன்றைய பதிவு.

ஒரே Software மூலம் எல்லா Fileகளையும் ஓபன் செய்ய முடியுமா?

Image Credit: 123rf.com

ஒரே ஒரு மென்பொருள் கொண்டு நாம் அடிக்கடி பயன்படுத்தும் File Format களை ஓபன் செய்ய முடியுமா? Open Freely என்ற மென்பொருள் இதற்கு உதவுகிறது. வெறும் 2MB மட்டுமே உள்ள இந்த மென்பொருள் கிட்டத்தட்ட நிறைய வேலைகளை நமக்கு எளிதாக்கும்.ஏன் இதை பயன்படுத்த வேண்டும்?  எப்படி இதை பயன்படுத்துவது? என்று பார்ப்போமா? 

Bigrock இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி?

தற்போது கூகுள் இந்திய பிளாக்கர்களின் முகவரிகளை மாற்றிய பின் நிறைய நண்பர்கள் புதிய டொமைன்க்கு மாறி வருகிறார்கள். அப்படி மாறும் நண்பர்கள் பலர் Bigrock தளத்தை தான் தெரிவு செய்கிறார்கள்.  அப்படி உருவாக்கும் நண்பர்களுக்கு அந்த அக்கௌன்ட் மூலம் இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்க முடியும். எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

ஈமெயில் forward/Redirect செய்வது எப்படி?

நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து இருப்போம்.  சில நேரங்களில் சில மின்னஞ்சல் முகவரிகளை அடிக்கடி ஓபன் செய்து பார்க்காவிட்டால், கல்யாணத்துக்கு வரச்சொல்லி வந்த மின்னஞ்சலை நாம் வளைகாப்புக்கு பார்க்க வேண்டி வரலாம்(அனுபவம்).  இதை தவிர்க்க ஒரே மின்னஞ்சல் முகவரியில் நம்முடைய அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படிக்க முடிந்தால்? 

MS-Word மூலம் ப்ளாக்கரில் மிக எளிதாக Table உருவாக்குவது எப்படி?

நிறைய வலைத்தளங்களில் மிக அழகான HTML Table கள் பார்த்து இருப்போம். எப்படி அது போன்ற அழகிய Table களை நம் வலைப்பூவுக்கு சேர்ப்பது என்று யோசித்து இருப்போம். நிறைய தளங்களில் அது பற்றி படித்தும் இருப்போம். ஆனால் HTML பற்றி தெரியாத ஒருவர் கூட மிக அழகான Tableஐ MS-Word மூலம் உருவாக்குவது பற்றி இன்று உங்களுக்கு சொல்கிறேன்.

கற்போம் பிப்ரவரி மாத இதழ்

இந்த மாத கற்போம் இதழ். புதியதாக சில பதிவர்கள் தங்கள் பதிவுகளை தர இசைந்தமைக்கு நன்றி. மேலும் வரவேற்கிறோம். ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.