பதிவுலகில் நிறைய நண்பர்கள் இப்போது சப்-டொமைன் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.முன்னர் Custom Domain பற்றிய தொடர்எழுதிய போது நிறைய நண்பர்கள் அதை மின்னஞ்சல் மூலம் கேட்டு இருந்தனர். அதற்கு அடுத்து Bigrock மூலம் வாங்கிய டொமைனை எப்படி பிளாக்கர்க்கு பயன்படுத்த என்று சொன்ன போது அதைப் பற்றி சொல்லி இருக்கவில்லை. சில நாட்கள் முன்பு நண்பர் ஒருவர் அது குறித்து கேட்டு இருந்தார். அவருக்கும், சப்-டொமைன் தேவைப்படும் எல்லோருக்கும் இந்தப் பதிவு.
இங்கே உதாரணத்துக்கு கற்போம் தளத்துக்கு ஒரு சப்-டொமைன் உருவாக்கி உள்ளேன்.
1. முதலில் Bigrock மூலம் வாங்கிய டொமைனை பிளாக்கரில் பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவின் 9 ஆவது ஸ்டெப் வரை வரவும்.
2. அங்கே 9 ஆவது ஸ்டெப்பில் sub என்று உள்ள இடத்தில் உங்கள் சப்-டொமைன் பெயர் தர வேண்டும். உதாரணம் - test
மற்றபடி Value என்ற இடத்தில் "ghs.google.com" என்பதையே தந்து விட வேண்டும்.
3. Sub Domain களுக்கு www என்பது வேலை செய்யாது.
நான் செய்துள்ளது படத்தில் உள்ளது (படத்தின் மீது கிளிக் செய்து பார்க்கவும்)
இப்போது இதனை உங்கள் வலைப்பூவில் கொடுக்க வேண்டும்.
இப்போது கற்போம் தளத்தின் சப்-டொமைன் - test.karpom.com. இதை நீங்கள் test.karpom.com என்று கொடுத்தாலும் பார்க்க முடியும்.
அவ்வளவே. இதில் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.
அதே போல .in டொமைன் வெறும் 99 ரூபாய் தானே அதை வாங்கலாமா என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள். முதல் ஆண்டுக்கு மட்டுமே அந்த விலை பிறகு இரண்டாம் ஆண்டு முதல் அதன் விலை .com டொமைன்களை விட அதிகமாக இருக்கிறது. (தற்போதைய நிலை). எனவே முடிந்த வரை .com உள்ள டொமைன் வாங்குவது நலம்.

4. இப்போது பிளாக்கரில் Settings பகுதியில் Domain பெயர் கொடுக்கும் இடத்தில் இதனை தந்து விட வேண்டும். (உதாரணம்: test.karpom.com) சிறிது மணி நேரத்தில் இது வேலை செய்ய ஆரம்பிக்கும்.
பின்னர் அதற்கு கீழே Redirect mydomain.com to test.mydomain.com. என்று வருவதை அன்-கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது கற்போம் தளத்தின் சப்-டொமைன் - test.karpom.com. இதை நீங்கள் test.karpom.com என்று கொடுத்தாலும் பார்க்க முடியும்.
அவ்வளவே. இதில் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.
அதே போல .in டொமைன் வெறும் 99 ரூபாய் தானே அதை வாங்கலாமா என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள். முதல் ஆண்டுக்கு மட்டுமே அந்த விலை பிறகு இரண்டாம் ஆண்டு முதல் அதன் விலை .com டொமைன்களை விட அதிகமாக இருக்கிறது. (தற்போதைய நிலை). எனவே முடிந்த வரை .com உள்ள டொமைன் வாங்குவது நலம்.
கற்போமிற்காக
பிரபு கிருஷ்ணா
10 comments
கூகுள் மூலமாக டொமைன் வாங்கினா தான் சப் டொமைன் கிடைக்கும் நினைச்சேன் பிக் ராக் மூலமாகவும் கிடைக்குமா ...எத்தன சப் டொமைன் உருவாக்க முடியும்
Replyநன்றி சகோ
குறைந்த பட்சம் நான்கு அமைக்கலாம்.
Replyஅருமை நிறையவே அள்ளி கொடுக்கின்றீர்கள்
Replythank u usefull tips nanba,,,,
ReplyStalin Wesley அவர்கள் கூறியது போலவே தான் நானும் நினைத்தேன். தகவலுக்கு மிக்க நன்றி.
Reply4-வது ஸ்டெப்பில் நீங்கள் குறிப்பிட்டுள்ள test.karpom.com என்ற லிங்க் வேலை செய்யவில்லை நண்பா..
Replywww.test.karpom.com இப்படி முழுமையாக கொடுக்கும்போது மட்டுமே இயங்குகிறது.
நன்றி sub domain க்கு www என்பது தற்போது வேலை செய்யவில்லை.
Replyஇன்று(05-07-12), நான் Bigrock.in தளத்தில் .com domain 1year பதிவு செய்தேன் ஆனால், discount ஏதும் தரப்படவில்லை நண்பா..
ReplyInvoice Subtotal: INR 599.00
Service Tax: INR 74.04
Invoice Total: INR 673.04
என கட்டணத்தொகை நிர்ணயித்துள்ளனர். இதுவே நான் தளத்திற்காக பதிவு செய்வது முதல்முறை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? பதில் தாருங்கள் நண்பரே...
நீங்கள் இந்த இணைப்பில் உள்ளபடி செய்தீர்களா? http://www.karpom.com/2012/03/discount-for-bigrock-domains.html
Replyஅத்தோடு ஓராண்டுக்கு வாங்கினீர்களா? இல்லை இரண்டு ஆண்டுக்கா?
நீங்கள் என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். admin@karpom.com
ReplyPost a Comment