லினக்ஸ் அல்லது விண்டோஸ் - எந்த வெப் ஹோஸ்டிங் தெரிவு செய்வது? #4 | கற்போம்

லினக்ஸ் அல்லது விண்டோஸ் - எந்த வெப் ஹோஸ்டிங் தெரிவு செய்வது? #4

நிறைய வகையான வெப் ஹோஸ்டிங்க் இருந்தாலும் Operating System என்பதை பொறுத்து இரண்டு வகைப்படும் Linux மற்றும் Windows. இது பற்றிய ஒரு விளக்கம்,ஒப்பீடு தான் இந்தப் பதிவு.   எனக்கு தெரிந்தது, நான் படித்தது என்று பகிர்கிறேன். தவறு இருப்பின் திருத்துங்கள். 




முதலில் நேரடியாக ஒன்று, இதில் வெப் ஹோஸ்டிங்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம்க்கும், உங்கள் டெஸ்க்டாப்  ஆப்பரேட்டிங் சிஸ்டம்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெப் பப்ளிஷிங் சாஃப்ட்வேர் மற்றும் FTP பற்றி தெரிந்து இருந்தால் போதும். நீங்கள் விண்டோஸ்  அல்லது லினக்ஸ் என எதை வேண்டும் என்றாலும் தெரிவு செய்யலாம். 

எது முக்கியமானது என்றால், உங்கள் தளத்துக்கு நீங்கள் விரும்புவது கிடைக்குமா என்பதை கவனித்தல். இது தான் உங்கள் வெப் ஹோஸ்டிங்க் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும்.

Linux Web Hosting அல்லது Windows Web Hosting ?

வெப் ஹோஸ்டிங்க் என்று வரும்போது வெப் சர்வர்களுக்கு லினக்ஸ் ஆனது எளிதான ஒன்றாக கருதப் படுகிறது. வெப் மற்றும் இமெயில் சர்வர்களுக்கு இது சிறப்பான ஒன்று என சொல்லப்படுவது இதன் காரணம். 

Scripting Language என்பதை பொறுத்து இதை தெரிவு செய்யலாம். நீங்கள் php,perl, அல்லது mySQL போன்றவற்றை ஸ்கிரிப்ட் லாங்குவேஜ் ஆக தெரிவு செய்து இருந்தால் லினக்ஸ் இதற்கு உகந்தது. 

கொஞ்சம் அதிக செலவு என்றாலும் பரவாயில்லை சிறந்த ஆன்லைன் டேட்டாபேஸ் வேண்டும் என்று கருதினால்விண்டோஸ் 2000 or NT உகந்தது. எளிய செயல்பாடுகள் இதன் சிறப்பம்சம். 

ஏன் linux server ஆனது Windows Server ஐ விட சிறந்தது? 

ஸ்திரத்தன்மை  அல்லது நம்பிக்கை (Stable)

லினக்ஸ்/யுனிக்ஸ் சர்வர் ஆனது பாரம்பரியமான ஒன்று, அத்தோடு நிலையானது மற்றும் ஆரோக்கியமானது என்று நம்பப்படுகிறது. Network Admin Skill, Network load, Power சப்ளை, மற்றும் இதர பராமரிப்பு போன்றவை எளிது. லினக்ஸ் சர்வர்  பயன்படுத்தும் தளம்  99.9% Up-Time என்று இருக்கும். 

 செலவு: 

மிகக் குறைந்த செலவு. முழுமையான சர்வர் வசதி. அத்தோடு சர்வர்க்கு தேவையான Desktop Applications  இலவசமாக கிடைக்கிறது. குறிப்பாக Server Application களில் இன்றியமையாதது என்று சொல்லப்படும் FTP, Web Server, DNS Server,File Server போன்றவை இலவசம் அத்தோடு நம்பிக்கை உள்ளது. 

பயன்படுத்த எளிது

டெஸ்க்டாப் என்பதில் பயன்படுத்தும் போது லினக்ஸ் கொஞ்சம் கடினம் என்றாலும் வெப் ஹோஸ்டிங்க் என்று வரும்போது இந்த OS  உள்ள சர்வர் எளிதான ஒன்று. பதிவேற்றம் மற்றும் ஹோஸ்டிங்க் செயல்பாடுகள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இரண்டும் ஒரே நேரத்தை ஏறக்குறைய எடுத்துக் கொள்கின்றன. 

லினக்ஸ் பயன்படுத்தும் போது கிட்டதட்ட எல்லா Extension உள்ள Scripting லாங்குவேஜ்களையும் உங்கள் தளத்தில் பயன்படுத்தலாம். .cgi, .html, .htm, .pl, .php, .shtml, .xml, மற்றும் இதர. 

 மாறுவது எளிது: 

லினக்ஸ் பயன்படுத்தும் சர்வரில் இருந்து Windows பயன்படுத்தும் Server க்கு மாறுவது எளிது. ஆனால் windows to Linux எளிதல்ல. 
 விருப்பத்திற்கு  ஏற்ற மாற்றம்: 

ஆரம்பத்தில் HTML கொண்டு உருவாக்கப்பட்டதளம் சில தேவைகளுக்காக வேறு Script க்கு மாற வேண்டும் என்றால் அது Linux மூலம் எளிதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.  பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இது சாத்தியமாவது லினக்ஸ் சர்வரின் பெரிய பலம். 

அதே சமயம் Microsoft Technology க்கு Linux Based Server முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. நீங்கள் தனிப்பட்ட Applications அல்லது Visual Basic பயன்படுத்தி தளத்தை மேம்படுத்த நினைத்தால் அதற்கு Windows ஹோஸ்டிங்க் சிறந்தது என்று சொல்லலாம்.

நான் இங்கே கூறி உள்ளவை இந்த ஹோஸ்டிங்க் குறித்த ஆழமான,அதிகமான தகவல்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு. சரி ஏதோ எனக்கு எளிதாய் இருக்க எது என்று நீங்கள் கேட்டால் நான் லினக்ஸ் சொல்வேன். நிறைய வசதிகள் உள்ளதால் உங்கள் தளத்தை உங்கள் பக்கத்தில் இருந்து செயல்படுத்துவது எளிது. Web Server பக்கம் அது பாதுக்காப்பாய் இருக்கும்.


Image: http://masterhostings.com/

9 comments

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை அளித்து வரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

Reply

நான் லினக்ஸ் இல் தான் வேலை செய்கிறேன் நண்பரே !!!நண்பக தன்மைக்கு லினக்ஸ் தான் சிறந்தது !!!

http://pangusanthaielearn.blogspot.com/2011/12/online-live-demo.html

Reply

nanba enathu thalamum linux thaan iyangugirathu.........

Reply

லினக்ஸ் பல சந்தேகம் உள்ளது தொடர்ந்து லினக்ஸ் பற்றி எழுதுங்கள்

Reply

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .வாழ்த்துக்கள் .

Reply

லினக்ஸ் பல சந்தேகம் உள்ளது தொடர்ந்து லினக்ஸ் பற்றி எழுதுங்கள்

Reply

useful comparison of windows Vs linux web hosting. My thanks to all associated with karpom website.

Reply

பயனுள்ள பதிவு. ஹோஸ்டிங் சேவைகள் தற்பொழுது தமிழ் வழியாகவும் கிடைக்கின்றது. பயன்படுத்தவும் எளிதாக உள்ளது. http://www.net4tamil.com/

Reply

Post a Comment