Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி? | கற்போம்

Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?

கஸ்டம் டொமைன் என்பது நிறைய பேரின் விருப்பம். பிளாக்கர் மூலம் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வேண்டும், இன்னும் சிலவற்றுக்கு டெபிட் கார்டு வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் வாங்க வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. எப்படி என்று எல்லோரும் கேட்கிறீர்களா? பதிவை படியுங்கள்.


நான் முன்னர் எழுதிய Custom Domain குறித்த பதிவுகளுக்கு நிறைய பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியுமா என்று கேட்டனர், நான் அப்போது கூறிய பதில் ஆம். ஆனால் நண்பர்  தமிழ்கிழம்  ஜெயச்சந்திரன் அதெல்லாம் தேவை இல்லை, நான் அவை இல்லாமல் வாங்கி உள்ளேன் என்று சொன்னார். 

தமிழ் பதிவுலகத்துக்கு புதியவரான அவர் இதோ என் வலைப்பூவில் முதல் முறையாக Guest Post எழுதி உள்ளார். இது நிறைய பேருக்கு கண்டிப்பாய் தேவைப்படும் ஒன்று. இதோ பதிவு அவரின் நடையில், 


அன்பு வாசகர்களுக்கு தமிழ்கிழத்தின் கனிவான வணக்கங்கள். பல இடங்களில் தமிழர்களின் மூளை விரயமாவதைத் தவிர்க்க, தமிழர்களின் ஒற்றுமையை நிலை நாட்ட முதல் முயற்சியாக இன்று நண்பர் பிரபு கிருஷ்ணா அவர்களின் வலைப்பூவில் முதல் முறையாக விருந்தினர் பதிவு எழுத வந்திருக்கும் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பி இன்றைய பதிவுக்கு செல்வோமா...

நம்மில் பலருக்கு Custom Domain வாங்க வேண்டும் என்று வெகு நாள் ஆசைப்பட்டிருப்போம். ஆனால் online purchase-இல் இருக்கும் சிக்கல்களினாலோ அல்லது credit/debit கார்டு இல்லாத காரத்தினாலோ அதை வாங்காமல் இருந்திருப்போம்.மேலும் google மூலம் வாங்க விரும்பினால் Debit கார்டு-டெல்லாம் செல்லாது,கண்டிப்பாக international credit கார்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று நான் சொல்லப்போகும் வழிமுறையை பயன்படுத்தி எந்த ஒரு சிக்கலும் இன்றி நீங்கள் விரும்பிய domain-ஐ offline-இல் bigrock மூலம் சுலபமாக வாங்கலாம் (பல registrar-கள் offline முறையை வைத்திருந்தாலும் நான் பரீட்ச்சயப்பட்டது bigrock-இல் தான்).

முதலில் www.bigrock.in சென்று உங்கள் domain பெயரை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் கணக்கு இல்லயேல் புதிதாக ஒரு கணக்கு துவங்கிக்கொள்ளவும். அதன் பின்னர் உங்கள் bigrock வலைதளத்தில் Select Your Payment Method என்ற இடத்தில் தங்கள் நாட்டை தேர்வு செய்து pay offline என்பதை சொடுக்கவும்.



இந்தியா-விற்கு மட்டும் 

அதன் பின்னர் ICICI/HDFC வங்கிக்கு சென்று பின் வரும் அக்கவுண்ட்-இல் கட்ட வேண்டிய பணத்தை மட்டும் கட்டினால் போதும்.

I] Direct Deposit into our ICICI Bank Account

Beneficiary Name: BigRock Solutions Private Limited

Account No:001105021339 

Branch: Andheri (West), Mumbai

அல்லது 

II] Direct Deposit into our HDFC Bank Account

Beneficiary Name: BigRock Solutions Private Limited

Account No:00192320004842 

Branch: Versova, Mumbai

என்ற கணக்கில் பணம் காட்டலாம். பணத்தை கட்டிவிட்டு அந்த receipt-ஐ scan செய்து (அட அதெல்லாம் வேண்டாம் தோழா, சும்மா உங்க கைப்பேசி camera-விலே போட்டோ எடுத்து அனுப்புங்க போதும்) billing@bigrock.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அதன் பிறகு http://support.bigrock.in -க்கு சென்று ஒரு Submit A Ticket--Billing--> இதில் 

உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, Type (Billing And Payments), Subject (Funds Remittance என்று கொடுக்கவும்), பின்னர் கீழே பணம் கட்டியதன் தகவல்களை பதிவு செய்து விட்டால் அவ்வளவு தான் உங்கள் domain சற்று நேரத்தில் வேலை செய்யத்துவங்கும்.


அதுவும் பிடிக்கவில்லயா?

மும்பையில் மாற்ற முடிந்தவாறு Cheque/Pay Order/Demand Draft எடுத்து பின் வரும் தகவல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புங்கள் (இது கொஞ்சம் எரிச்சல் தரும் வேலை தான், அதனால் மேலே உள்ள வழியையே பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம்) Customer Username (Email Address) or Customer ID.

Name on the Cheque: BigRock Solutions Private Limited


Address :

Acme ITech Park

Old Nagardas Road, 

Next to Andheri Subway, 

Andheri (East), 

Mumbai, 400 069, 

India.

மேலே உள்ள முதலாம் வழியை பயன்படுத்தி நான் www.techneem.com (ரூ499/-) மற்றும் www.techneem.in (ரூ.99/-) என்ற இரண்டு domain-களை எந்த சிக்கலும் இன்றி வாங்கியுள்ளேன்.

நீங்கள் BigRock தளத்தின் மூலம் வாங்கிய டொமைனை பிளாக்கர்க்கு பயன்படுத்த சில மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். உங்கள் டொமைன் activate ஆன பிறகு


 BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

என்ற இந்த பதிவின் மூலம் மாற்றங்கள் செய்து கொள்ளவும். 

ஒரு மிக சிறந்த தகவலை கூறி உள்ள நண்பர் ஜெயச்சந்திரன் அவர்களை பாராட்ட வேண்டியது உங்கள் கடமை அல்லவா? அவரின் வலைப்பூவை தொடர தமிழ்கிழம்


அவரின் சில ஆங்கில பதிவுகள். 


BLACK HAT SEO TECHNIQUES: YOU MUST AVOID IT 


YOUTUBE PLANS TO CHALLENGE THE CABLE WITH 'CHANNELS'



◘பலே ட்வீட்◘

ஒரு நூலகம் மூடப்பட்டால் வருத்தப்பட இத்தனை பேர் இருப்பது நிஜமாகவே மகிழ்ச்சியளிக்கிறது!
கருணாநிதி கட்டிய தாயாளுவும், ராஜாத்திவும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். #பழக்கதோஷத்தில் அம்மாமாமாமா

45 comments

நல்ல தகவலை கொடுத்திருக்கார்.....

அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கண்டிப்பாய் அனைவருக்கும் பயன்படக்கூடிய பதிவு தம்பி பலேபிரபு...

வாழ்த்துக்கள் இருவருக்கும்!

Reply

இருவருக்கும் மிக்க நன்றி சகோதரா...

இலங்கையில் இப்படி ஒரு சிஸ்டமும் இருப்பதாக தெரியவில்லை சகோதரா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

Reply

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.

Reply

அருமையான பதிவு நன்றி தம்பி...!!!

Reply

99 ரூபாய்க்கு .in டொமைன் வாங்கலாமா ? தமிழ்கிழம் அவர்களின் பதிவும் நல்லா இருக்கு!

Reply

99 ரூபாய்க்கு .in டொமைன் வாங்கலாம், 425 ரூபாய்க்கு .com டொமைன் வாங்கலாம். நான் இங்கே (www.ehostings4u.com)தான் வாங்கினேன்.

Reply

இந்த இணையதளத்திலும்(http://ehostings4u.com) Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்கலாம்

Reply

தேவையான தகவல்.. நன்றி..

Reply

பயனுள்ள பதிவைத் தந்த நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் !

Reply

வந்து படித்து பின்னூட்டமிட்ட (மற்றும் பின்னூட்டம் இடாத) அனைத்து உள்ளங்களுக்கும், நண்பர் பிரபு கிருஷ்ணா அவருக்கும் இந்த கிழத்தின் நன்றிகள் கோடி-ஐ இங்கே சமர்பிக்கிறேன்..

Reply

பயனுள்ள தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

Reply

பயனுள்ள தகவலை நண்பர் திரு. தமிழ்கிழம் அவர்கள் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி பதிவிட்டுள்ளார் வாழ்த்துகள் நண்பரே!

இப்படி ஒரு பதிவை பதிவிட வாய்ப்பு தந்து சிறப்பித்த உனக்கு நன்றிகள் பிரபு!

Reply

நண்பர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி அருமையான தகவல் தந்து உள்ளார்.வாய்ப்பு தந்த பிரபு அவர்களுக்கும் நன்றி.

Reply

வணக்கம்,தமிழ்கிழம்-பலேபிரபு,அவர்களுக்கு,உங்கள் கட்டுரை
எல்லாம் மெத்தபடித்தவர்களுக்கு மட்டும்தானா? சில விஷயங்கள் சிலருக்கு சில சமயம் சிலது கூடசில நேரங்களில் சிலருக்கு சில சின்ன தொகுப்பு கூட புரியவில்லை!
blooger-ல் வலைப்பதிவை adsence-இல்லாமல் நிர்வகிப்பது எப்படி?
நன்றி.

Reply

@ சக்தி வீடியோஸ்

கண்டிப்பாய் சகோ. நீங்கள் உங்கள் சந்தேங்களை எனக்கு மின்னஞ்சல் செய்தும் கேட்கலாம். என் மின்னஞ்சல் முகவரி என் profile பக்கம் உள்ளது. நீங்கள் இங்கே கேட்டு உள்ளது எனக்கு புரியவில்லை. கொஞ்சம் அதிக விவரங்கள் உடன் மின்னஞ்சல் செய்யவும்.

Reply

தங்கள் வலைப்பதிவில் முதல் விருந்தினர் பதிவை பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் சகோ.!

பயனுள்ள தகவலைப் பகிர்ந்த தமிழ்கிழம் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு நன்றி!

Reply

@ suryajeeva

நன்றி சகோ.

Reply

@ ஆமினா

நன்றி சகோ.

Reply

@ முனைவர்.இரா.குணசீலன்

நன்றி சகோ.

Reply

@ ♔ம.தி.சுதா♔

நன்றி சகோ. இலங்கை பற்றிய செய்திகள் தெரியவில்லை.

Reply

@ MANO நாஞ்சில் மனோ

நன்றி அண்ணா.

Reply

@ கோமாளி செல்வா

ஆம் அண்ணா. இது முதல் வருடத்துக்கு மட்டும். பின்னர் மாறலாம்.

Reply

@ வேதாளம்

தகவலுக்கு மிக்க நன்றி.

Reply

@ koodal bala

நன்றி சகோ.

Reply

@ !* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி சகோ.

Reply

@ சம்பத் குமார்

நன்றி சகோ.

Reply

@ மாணவன்

நன்றி அண்ணா.

Reply

@ சண்முகம்

நன்றி சகோ.

Reply

@ FOOD

நன்றி அப்பா.

Reply

@ R.CHINNAMALAI

நன்றி சகோ.

Reply

@ தமிழ்வாசி - Prakash

நன்றி சகோ.

Reply

@ Abdul Basith

நன்றி சகோ.

Reply

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

@ தமிழ்கிழம்

ஒரு அருமையான, அனைவரும் எதிர்பார்த்த ஒரு பதிவை நான் ஏன் அடுத்தவன் வலைப்பூவில் எழுத வேண்டும் என்று நினையாமல் கேட்ட உடனே பதிவை எழுதிக் கொடுத்த, நண்பா உனக்கு நன்றிகள் பல.

Reply

நன்றி பிரபு மற்றும் தமிழ்கிழம். தங்களின் பதிவினால், எனது தமிழ் மற்றும் ஆங்கில வலைப்பூக்களை டொமைனுக்கு மாற்றி விட்டேன்.

Reply
Ganesh(standardincome@gmail.com) mod

Friends better try this site
www.unlimitedgb.com.
This is in covai only.
U can call them and speak with tamil easily.
International site.
Low cost for unlimited access.
payment methods direct bank deposit,online transfer also available.
I hope it helps u.
Admin u may translate my comment into tamil.
All the best...

Reply

@ suryajeeva

@ ஆமினா

@ முனைவர்.இரா.குணசீலன்

@ ♔ம.தி.சுதா♔

@ VANJOOR

@ MANO நாஞ்சில் மனோ

@ !* வேடந்தாங்கல் - கருன் *!

@ கோமாளி செல்வா

@ koodal bala

@ சம்பத் குமார்

@ சண்முகம்

@ FOOD

@ R.CHINNAMALAI

@ சக்தி வீடியோஸ்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த கிழத்தின் நன்றிகள் பல..


// நன்றி பிரபு மற்றும் தமிழ்கிழம். தங்களின் பதிவினால், எனது தமிழ் மற்றும் ஆங்கில வலைப்பூக்களை டொமைனுக்கு மாற்றி விட்டேன். //

வாழ்துக்கள் ஐய்யா..

Reply

அன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்
அல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை
எனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்
அனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்
உங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்
அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.

பி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.
சில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு
பயப்படுகிறேன்!...
http://www.kaleelsms.com/2011/09/blog-post_349.html

Reply

நானும் Bigrock மூலம் ஏற்கனவே pothigai.in என Netbanking முறையில் டொமைன் வாங்கிவிட்டேன்.

Reply

நன்றி...
இணையத் தொடர்பில் கணக்கு இல்லாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

Reply

தமிழ்கிழம் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு நன்றி!

Reply

நண்பர்களே.....!

நாங்கள் ஆரம்பித்துள்ள ZHosting லும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாமல் டொமைன் மற்றும் வெப்ஹோடிங் வாங்கலாம்.

Reply

Post a Comment