BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி? | கற்போம்

BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

நிறைய பதிவர்களுக்கு சொந்த டொமைன் வாங்க வேண்டும், அதில் பதிவுகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளதை நான் கடந்த முறை எழுதிய custom domain குறித்த பதிவுகளின் வாயிலாக அறிந்தேன். ஆனால் அவர்களிடம் Credit Card இல்லாத காரணத்தால் சொந்த டொமைன் வாங்க இயலவில்லை என்பதும் புரிந்தது. இப்போது வெறும் டெபிட் கார்ட் மூலம் பல தளங்களில் எளிதாக டொமைன் வாங்கலாம். அவ்வாறு வாங்கிய பின் சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதே இந்தப் பதிவு. 


நான் என் நண்பர் ஒருவர்க்கு வாங்கி செயல்படுத்தியது எப்படி என்று விளக்குகிறேன். 

டொமைன் வாங்குவது மிக எளிது. அது உங்களுக்கு எளிதாக வரக்கூடிய ஒன்றுதான். இப்போது அதற்கு பின் செய்ய வேண்டிய வேலைகளை சொல்கிறேன். இதில் உள்ள www.hthints.com எனது ஆங்கிலத் தளம் ஆகும்.


1. முதலில் BigRock தள முகப்புக்கு செல்லுங்கள்.

2. உங்கள் அக்கவுண்ட்க்குள் Log-In செய்து கொள்ளுங்கள்.



3. இப்போது  "Domains--> List All Orders"  என்பதை கிளிக் செய்யவும். 


4. உங்கள்  "Domain Name" மீது கிளிக் செய்யுங்கள்

5. இப்போது வரும் பக்கத்தில் "DNS Management" Tab ஐ தெரிவு செய்யவும்.



6. இப்போது "Manage DNS" என்பதை தெரிவு செய்திடுங்கள்



7. இப்போது ஒரு புதிய விண்டோ வரும் இதில்  Record எதுவும்  இல்லை என்று வரும். இதில்  "CNAME Records" என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.



8. இப்போது  "Add A Record" என்பதை கிளிக் செய்யுங்கள் 

9. இப்போது CNAME Record பகுதியில் கீழே உள்ளது போல செய்திடுங்கள்.

Host Name: www
Value: Choose 2nd Radio Button and Type "ghs.google.com"

மற்ற எதுவும் மாற்றம் செய்ய தேவை இல்லை.

நீங்கள் புதியதாக இரண்டாவது CNAME Record Add செய்ய வேண்டி உள்ளது. அதை எப்படி என்று அறிய - Blogger Custom Domain Settings - சில மாற்றங்கள்

10. இப்போது  "Add Record" என்பதை கிளிக் செய்து இதை Save செய்து விடவும். 

11. இப்போது  "A Records" என்பதை கிளிக் செய்யவும், அதில் New Record என்பதில் 

Host Name : Don't fill anything
Destination IPv4 Address *216.239.32.21




இதே போல பின்வரும் மூன்று IP களுக்கும் செய்ய வேண்டும். 


216.239.34.21
216.239.36.21
216.239.38.21


மொத்தமாக  4 "A Record" கள் உங்கள் டொமைன் மானேஜ்மென்ட் பக்கத்தில் இருக்க வேண்டும். 



இத்தோடு உங்கள் வேலை Bigrock இல் முடிந்து விட்டது.

12. இப்போது உங்கள் வலைப்பூவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.

13.  Blogger--> Dashboard-->Settings--> Add A Custom Domain

நீங்கள் ஏற்கனவே டொமைன் வைத்து உள்ளதால் Advanced Settings பக்கம் வரவும். இதில் உங்கள் தள முகவரி கொடுங்கள். குறிப்பாக முன்னால் www என்பதை மறந்து விட வேண்டாம். உதாரணம்:  www.songsnew.in

[ Redirect yourdomain.com to www.yourdomain.com. என்பது உங்களுக்கு வரும்போது கிளிக் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.இது வலைப்பூவில் உங்கள் டொமைன் முகவரி கொடுக்கும் இடத்திற்க்கு கீழ் வரும்.  ]

14. அவ்வளவுதான் நண்பர்களே இன்னும் ஒரு 5 அல்லது 6 மணி நேரத்தில் உங்கள் தளம்செயல்பட ஆரம்பிக்கும்.(blogger மூலம் வாங்கினால் இரண்டு நாட்கள் கூட ஆகலாம்.)

21 comments

நல்ல தகவல் நண்பா

Reply

நண்பா .org கிடைக்குமா ....

Reply

@ stalin

கிடைக்கும் சகோ. .com, .org, .net, .co.in, .in என எது வேண்டும் என்றாலும்.

Reply

bigrock வலைதளத்தில் எப்படி login செய்வது ?

Reply

@ நா.மணிவண்ணன்

நீங்கள் அதற்கு டொமைன் வாங்கி இருக்க வேண்டும். அப்படி வாங்கி இருந்தால் வலது மேல் மூலையில் உள்ள லாக்-இன் மூலம் உள்ளே செல்லலாம்.

Reply

பயனுள்ள பகிர்வு
நாம் புதிய டொமைனுக்கு மாறி விட்டால் blogspot டொமைன் (www.blogname.blogspot.com) வேலை செய்யாதா??

Reply

வணக்கம் நண்பரே..

blogger மூலமாகத்தான் domain address Godaddy யில் இருந்து வாங்கினேன் (அதுவும் டெபிட் கார்டு மூலமாக)

முகவரி www.tamilparents.com

இது வரை எந்த பிரச்சினையும் இல்லை.நீங்கள் கூறுவது போல் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டி வருமா ?

நன்றியுடன்
சம்பத்குமார்
www.tamilparents.com

Reply

உபயோகமான தகவலை தந்துள்ளீர்கள் .....

Reply

நல்ல பகிர்வு. நானும் யோசித்துக்கொண்டுதான் இருந்தேன், கிரெடிட் கார்ட் இல்லையே என்று. உள்ளாட்சி தேர்தல் ப்ணி முடிந்ததும், தொடர்புகொண்டு, ஆலோசனை பெற்றுக்கொள்கிறேன்.

Reply

புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ.!

Reply

@ விஜயன்

இல்லை சகோ. உங்கள் வலைப்பூவுக்கு வருபவர்கள் தானாக உங்கள் புதிய டொமைன்க்கு ரீடைரக்ட் செய்யப்படுவார்கள். எனவே எந்த பிரச்சினையும் இல்லை.

Reply

big rock முலம் sub domain உருவாக்குவது எப்படி நண்பரே

Reply

@ நிலவை தேடி

//big rock முலம் sub domain உருவாக்குவது எப்படி நண்பரே//

இதில் Step 9 இல் உள்ள

Host Name: www

என்பதில் www என்பதிற்கு பதில் உங்கள் சப்டொமைன் பெயரைக் கொடுக்க வேண்டும். உதாரணம் - tamil.toptenofworld.com

இங்கே tamil என்பது சப்-டொமைன் பெயர். இதில் www என்று கொடுக்க கூடாது. அது வேலை செய்யாது. அத்தோடு சப்-டொமைன் ப்ளாகரில் கொடுத்த பின் redirect என்ற வசதியை கிளிக் செய்யாமல் விட்டு விட வேண்டும்.

இது குறித்த ஒரு பதிவு விரைவில் எழுதுகிறோம்.

Reply

தாங்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி என் வலைப்பூவினை எளிதாக இணைத்து விட்டேன்!!
நன்றி!!

Reply

sir today i bought domain name as tngovernmentjobs.in for my blog www.tngovernmentjobs.blogspot.in. I cannot able to creat A RECORD IN rock site. please help me (my mobile 9841479877 nagarajan

Reply

வணக்கம் சார்.

நேற்று bigrock ல் domain வாங்கினோம்!

ஆனால் அதை எப்படி blog உடன்
இனைப்பது தெரியவில்லை!
உங்க்அல் பதிவை படித்து
பாதி புரிந்து கொண்டேன்




11 ஆவது ஸ்டெப்பில் இருந்து புரியவில்லை!

ப்லாகுடன் டொமைன் சேர்க்க உதவ முடியுமா சார்?

நன்றி...








Reply

அது கட்டாயமில்லை. நீங்கள் உங்கள் டொமைனை உங்கள் ப்ளாக்கில் பயன்படுத்தி பாருங்கள். பிரச்சினை என்றால் சொல்லுங்கள்.

Reply

still i am in confution sir..



நான் திரந்த blog ன் பெயர்

www.sudarvili.blogspot.com


நேற்று டொமைன் வாங்கியது


www.sudarvizhi.com



ஃபைனலாக எனது blog ல் செட்டிங்ஸ் செய்யனும்
எண்ணாள் செய்ய முடியவில்லை

எனது user name password
அனுப்புகிரேண்
உங்க்அல் ஈமெயில் கொடுத்தாள்
சரி செய்து தர முடியுமா.
--
maheshswis@gmail.com



Reply

admin@karpom.com க்கு உங்கள் தகவல்களை அனுப்பி வையுங்கள்.

Reply

Post a Comment