High Tech Hints ஒரு வளரும் பயிர் | கற்போம்

High Tech Hints ஒரு வளரும் பயிர்

இணையம் என்னும் தோட்டத்தில் பல மரங்கள் உண்டு. அந்த மரங்களுக்கு மத்தியில் முளைத்த ஒரு குட்டிப் பயிர்தான் இந்த "High Tech Hints". இதற்கு தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு வளர்ப்பவன் உங்கள் நண்பன், சகோதரன் பிரபுவாகிய நான்தான். ஆம் எனது புதிய தளம்தான் இது. 


கடந்த சில பதிவுகளில் பலே ட்வீட் க்கு பிறகு இந்தத் தளத்தின் பதிவுகளை நீங்கள் பார்த்து இருக்கலாம்.

ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதி வந்த நான் அப்போது எப்படி பிரபலப்படுத்துவது என்பது தெரியாமல் விழித்தேன். பின்னர் நிறைய தமிழ் தளங்களை கண்டு தமிழில் எழுதி வருகிறேன்.இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற வேட்கை தொடர்ந்து இருந்தது. கடந்த மாதத்தில் சகோ ப்ளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" அவர்களின் நட்பு கிடைத்தது, அப்போதுதான் தெரிந்தது அவருடைய வேட்கையும் என்னை போலவே இருந்தது . அவருடைய வழிகாட்டுதலில் ஆரம்பித்தது தான் இந்த High Tech Hints. அத்தோடு நண்பர்கள் நாற்று "நிரூபன்', நிலாரசிகன் "ஜெயமாறன்" ஆகியோர் உதவியுடன் அதை பிரபலப்படுத்தும் வழிகளும் புரிந்து இன்று உங்களிடம் அதை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் நிறுத்தி உள்ளது. 


The Way For Tech Updates and News, Bloggers Tips, Computer Tricks, Internet Tips And Tricks, And Video Tutorials


புதிய தொழில்நுட்ப செய்திகள், ப்ளாகர் குறித்த தகவல்கள், கணினி மற்றும் இணையம் குறித்த புதிய செய்திகள், வீடியோ டுடோரியல் என பலவற்றை தரப்போவது தான் இந்த தளம். 

தினமும் ஒரு பதிவு எழுதுவது என்பது என் நோக்கம் இதுவரை பகிர்ந்தும் வருகிறேன். எல்லாம் இந்த பலே பிரபு தளத்தின் உதவியால்தான். 

இப்போது Adsense: 

ஆறுமாதம் முன்னரே Adsense Account வாங்கிவிட்ட போதிலும் தமிழ் தளத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற காரணத்தால் பயன்படுத்தவில்லை.. இப்போதுதான் முறையாக பயன்படுத்த உள்ளேன். என் தளத்தில் வரும் விளம்பரங்கள் உங்களுக்கு பயன்படும் என்றால் மட்டும் நீங்கள் கிளிக் செய்யுங்கள்.உதவிக்காக செய்வது தவறாகும். எப்படி Adsense வாங்குவது என்பது என் Google Adsense குறித்த பதிவுகளில் நீங்கள் அறியலாம். மிக எளிதான வழி சொந்த டொமைன் வைத்து இருப்பதுதான். (தமிழ் வலைப்பூக்களுக்கு இது பொருந்தாது)

URL சிறியதாக இருந்தால் நினைவில் இருக்கும் என்ற காரணத்தால் High Tech Hints என்ற 13 எழுத்துக்களை பயன்படுத்தாமல் www.hthints.com என்று சுருக்கமாக பயன்படுத்தி உள்ளேன். முடிந்த வரை சிறிய URL பயன்படுத்துவதுதான் மற்றவர்களுக்கு எளிதில் நினைவில் வரும். 

இனி நீங்கள்தான் இந்த பயிருக்கு சூரியன், சூரியன் இல்லாமல் பயிர் வளருமா? நேரமிருந்தால் வாருங்கள். 

முகவரி: http://www.hthints.com/

சரி என் தளம் பற்றி மட்டும் சொல்லி விட்டேன் ஏதாவது உருப்படியாய் ஒரு தகவல் தர வேண்டுமே. 


கடந்த சில நாட்களாக தமிழ் வலைப்பதிவர்கள் பலருக்கும் உள்ள தொல்லை கும்பல் கும்பலாக இமெயில் வருவது. அதிலும் சில நண்பர்கள் தங்கள் பதிவுக்கான விளம்பரம் கூட அதில் செய்ய ஆரம்பித்துவிட்டனர். நான் இன்னும் பொறுமையாய் உள்ளேன், ஆனால் சில நண்பர்கள் கோபமுற்று Spam  செய்து விட்டனர். இதனால் நீங்கள் அனுப்பும் ஒரு முக்கிய செய்தி கூட அவர்கள் பார்வையில் இருந்து தப்பி விடும். என்ன தீர்வு இதற்கு. இதற்கு வழிதான் Bcc என்ற ஒன்றை பயன்படுத்துவது. எப்படி என்று ஏற்கனவே Gmail பற்றிய பதிவில் நீங்கள் காணலாம். 

◘பலே ட்வீட்◘

Social activist Medha Patkar coming to today to support anti-nuke protestors.

உயிரோடு இருந்தால்தான் ஊழலையே எதிர்க்க முடியும். உயிருக்கே ஆபத்தானது அணு உலை. - ஞாநி அவரது தளத்தில்...



13 comments

வாழ்த்துகள் நண்பா

Reply

தங்களது முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகா. . .

Reply

அடடா, நல்ல விஷயமாச்சே! வாழ்த்துக்கள்!

Reply

தமிழ்மணம் இணைச்சி ஓட்டும் போட்டாச்சு...

Reply

நண்பரே வாழ்த்துக்கள்

பயிர் மரமாகி விருட்சமாக வாழ்த்துக்கள்

Reply

வாழ்த்துகள் பாஸ் ..

Reply

வாழ்த்துக்கள் சார் .......

Reply

உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆங்கிலத்திலும் நீங்கள் பட்டையைக் கிளப்பி,,,பல பதிவுகள் மூலம் தொழில் நுட்பப் பிரியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள வாழ்த்துகிறேன்.

Reply

பணி சிறக்க வாழ்த்துகள்

Reply

உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆங்கிலத்திலும் நீங்கள் தூள் கிளப்ப வாழ்த்துகிறேன் சகோதரரே.

Reply

Post a Comment