இந்த பதிவு இந்த தொடரின் முக்கியமான ஒன்று. நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்து இருக்கும் போது அவை எல்லாவற்றையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவது தான் இதன் செயல். இதன் மூலம் நிறைய பலன்கள் உள்ளது. அத்தனையும் இந்தப் பதிவில் காண்போம்.
Sub-Domain என்றால் குழம்பிவிடாதீர்கள் உதாரணமாக எனது கவிதை வலைப்பூ முகவரி kavithai80.blogspot.com இதனை இப்போது நான் என்னுடைய baleprabu.comக்கு sub-domain ஆக kavithai.baleprabu.com என்று வைத்துள்ளேன். அதாவது blogspot என்பதற்கு பதில் உங்கள் தள Domain பின்னால் சேர்ந்து கொள்ளும். இதனால் உங்கள் blogspot க்கு வருபவர்களும் புதிய முகவரிக்கு Redirect செய்யப்படுவார்கள்.
இதன் பலன் என்ன:
முக்கியமான பலன் உங்கள் Domain, Sub-Domain இரண்டுக்கும் சேர்த்தே Alexa rank கணக்கிடும். இதனால் இரண்டிலும் Traffic அதிகம் இருப்பின் Rank நல்ல நிலையில் இருக்கும்.
இந்தத் தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க :
நீங்கள் Google மூலம் Domain வாங்கி இருப்பின் இந்தப் பதிவு உங்களுக்கானது. வேறு தளங்களின் மூலம் வாங்கி இருந்தால் இதே போல நீங்கள் முயற்சி செய்யலாம்.
முதலில் Google Aps தளத்துக்கு சென்று உங்கள் தள முகவரி கொடுத்து, Domain Management என்பதை கொடுத்து உள்ளே நுழையவும்.
இப்போது Domain Settings-->Domain Names--> Advanced DNS Settings--> இறுதியாக
Sign In To DNS Console என்பதை கிளிக் செய்தால் Enom தளத்தின் Domain Management பகுதிக்குள் வருவீர்கள். இங்கு உங்கள் User Name உங்கள் Domain Name (எனக்கு baleprabu.com), Password உங்கள் ஏற்கனவே Advanced DNS Settings பகுதியில் இருக்கும். இதனை Copy, Paste செய்யவும்.
இப்போது அடுத்த பக்கத்தில் Host Records என்ற பகுதியில் நீங்கள் உங்கள் Sub-Domain குறித்து பதிய வேண்டும்.
இதில் Host- Records பகுதியில் உள்ள Edit என்பதை கிளிக் செய்யவும். இப்போது Add New என்பதை கிளிக் செய்யவும்.
இங்கு
Host Name: உங்கள் Sub-Domain பெயர்
Address: ghs.google.com. (இதுவும் ஒரு Blog ஆக இருப்பின்)
Record Type: CNAME (Alias) என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
இப்போது Save செய்து விடுங்கள். இதே போல நிறைய தளங்களுக்கும் செய்ய முடியும். இதன் எண்ணிக்கை அனுமார் வால் போல நீண்டுகொண்டே செல்கிறது.
இப்போது Sub-Domain ஆக மாற்ற செய்ய விரும்பும் உங்கள் வலைப்பூவுக்கு வந்து Custom Domain மாறும் இடத்தில் Already Own a Domain என்பதை தெரிவு செய்து உங்கள் Sub-Domain கொடுக்க வேண்டும். அது இவ்வாறு இருத்தல் அவசியம்.
blog.mydomain.com
(android.karpom.com)
இங்கு www என்பது தேவை இல்லை, அப்படி வேண்டும் என்றால் sub domain-இல் www இருக்க வேண்டும். www.blog.mydomain.com - இதில் www.blog என்பது Sub Domain. பின்னர் பிளாக்கர் செட்டிங்க்ஸ் பக்கத்தில் டொமைன் பெயர் கொடுத்த உடன் "Redirect blog.mydomain.com To www.blog.mydomain.com" என்பதை கிளிக் செய்து விடவும்.
வழக்கம் போல உங்கள் வலைப்பூவில் இருந்து நீங்கள் Post செய்யலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
Google அல்லாமல் வேறு தளத்தின் மூலம் Domain வாங்கியவர்கள் அவர்கள் DNS Settings பகுதியில் இதை போலவே செய்ய வேண்டும். (சில மட்டும் மாறி இருக்கலாம்)
Bigrock Users - BigRock டொமைனுக்கு Sub Domain அமைப்பது எப்படி?
அவ்ளோதான் நண்பர்களே. இது குறித்து கடல் அளவு தகவல்கள் உள்ளபோதும் உங்களுக்கு ஒரு சொம்பு அளவு மட்டுமே அள்ளிக் கொடுத்துள்ளேன். Domain வைத்து இருப்பவர்கள் என்னை இமெயில் மூலம் தொடர்பு கொண்டு மற்ற சந்தேகங்களை கேட்கலாம். (admin@karpom.com).
◘பலே ட்வீட்◘
முகத்தின் அழகுக்கு மெனக்கெடும் பலர் தன் அகத்தின் அழகில் அக்கறை கொள்வதே இல்லை....
27 comments
தமிழ் 10, தமிழ் மணம் இரண்டும் கடுபேத்துகிறது மை லார்ட்... யாராவது இணைசுடுங்க நண்பர்களா
Replyஇரண்டு தளங்கள் வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் உதவும் பதிவு!
Replyதமிழ் 10, தமிழ் மணம் இரண்டும் கடுபேத்துகிறது மை லார்ட்... யாராவது இணைசுடுங்க நண்பர்களா//
tamil 10 attached ,tamilmanam same blood!
தொயில்நுட்ப பார்ட்டிகளுக்கு ஏத்த பதிவு, நமக்கு தான் ஒன்னியும் பிரியல நைனா..
Replyநண்பரே டொமைன் சம்பந்தமாக மிகவும் உபயோகமான பதிவு... பகிர்வுக்கு நன்றி நண்பரே...
Replyதமிழ் மணம் & all voted
Replyபயனுள்ள தகவல் நன்றி பாஸ் ...
Replyதேவையான தொழில்நுட்பத் தகவல்கள் நண்பா.
Replyதொடர்க.
அவசியமான தொழில்நுட்ப தகவல்.நன்றி!
Replyஇரண்டு பதிவு வைத்திருப்பவர் களுக்குப் பயனுள்ள பதிவு!
Replyபதிவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் ....தொடருங்கள் ...
Replyபதிவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்
Replyநன்றி
அருமையான தகவல் நண்பரே..
Replyநட்புடன்
சம்பத்குமார்
சப் டொமைன் பற்றிய தகவல்களை விளக்கப் பகிர்வாகத் தந்திருக்கிறீங்க. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
Replyமுகத்தின் அழகுக்கு மெனக்கெடும் பலர் தன் அகத்தின் அழகில் அக்கறை கொள்வதே இல்லை...//
Replyஅவ்...இது சூப்பரா இருக்கே..
உண்மை தான் பாஸ்...
பூசி மெழுகி அழகாக இருக்கும் பலரின் அகத்தில் அழுக்கு நிறைந்திருக்கிறது என்பது உண்மையே.
நல்ல பதிவு
Replyபகிர்வுக்கு நன்றி சகோ! இந்த தொடரை பார்த்து தான் டொமைன் வாங்கியுள்ளேன். sub-domain பற்றிய தகவலும் பயனுள்ளவை.
Reply//முக்கியமான பலன் உங்கள் Domain, Sub-Domain இரண்டுக்கும் சேர்த்தே Alexa rank கணக்கிடும். இதனால் இரண்டிலும் Traffic அதிகம் இருப்பின் Rank நல்ல நிலையில் இருக்கும். //
இப்போது தான் தெரிந்துக் கொண்டேன். நன்றி!
நல்ல விஷயங்களா சொல்றீங்க! ஜமாய்ங்க!
Replysub Domain இருக்குறதுநாலா தான் கூகுள் no.1 இடத்துல இருக்கு ...
Replymail.google.com
maps.google.com
news.google.com
video.google.com
தற்போது அறிமுகம் ஆகியிருக்கும்
plus.google.com(இது ஒன்னு போதும் ..)
இல்லேனா பேஸ் புக் என்னைக்கோ no.1
பிளேஸ்க்கு வந்துருப்பாங்க ....
கூகுள் காரன் ரொம்ப விவரமான ஆளுக ...
மாப்ள thanks!
Replyநீங்கள் forumotion-இல் எப்படி sub domain set செய்தீர்கள்?
Replyநானும் forumotion-இல் ஒரு forum வச்சு இருக்கேன். என்கிட்ட கிரெடிட் கார்டு இல்லை.
domain வாங்க வேற ஏதாச்சும் வழி உள்ளதா?
@ முஸ்லிம்
Replyசொந்த டொமைன் இருக்கும் என்றால் அந்த தளத்தில் உள்ள forum ஐ நாம் நம் டொமைன்க்கு கொண்டு வரலாம்.
கிரெடிட் கார்ட் தான் நண்பரே ஒரே வழி.
ம்....எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு....நன்றி சகோ.....
Replywww.nimzath.com
மீண்டும் ஒருமுறை நன்றி சகோ.! இப்போது தான் இந்த பதிவின்படி Sub-Domain அமைத்தேன்.
Replyநண்பா பிளாக்கர் மூலம் தான் டொமைன் வாங்கியுள்ளேன் ஆனால் சப் Sub-Domain ku
ReplyHost Name: உங்கள் Sub-Domain பெயர்
Address: ghs.google.com. (இதுவும் ஒரு Blog ஆக இருப்பின்)
Record Type: CNAME (Alias) என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
இப்படி பகுதிகள் காணப்படவே இல்லை
என்ன செய்வது ??
சில சமயங்களில் Godaddy தளம் மூலம் கூகுள் டொமைன் வாங்கி தரும். எனவே அவற்றுக்கு கொஞ்சம் மாறுபடலாம். ஆனால் அவற்றிலும் Cname பகுதி இருந்தால் அவற்றில் இதை செய்யலாம்.
Replyஅத்தோடு பிளாக்கர் நண்பன் உதவியுடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என்று நினைக்கிறேன். :-)
Pending தான் நண்பா க்ளைமாக்ஸ் சொதப்பல் போல (என்னோட தவறு)
Replywww என்று கொடுக்காமல் சேர்க்க வேண்டும். அதே போல பிளாக்கரில் Redirection வசதி கிளிக் செய்யப்படாமல் இருக்க வேண்டும். எப்படியும் இரண்டு முதல் மூன்று மணி நேரங்களில் வொர்க் ஆகி விடும்.
ReplyPost a Comment