கடந்த Adsense பதிவு பலரது சந்தேகங்களை தீர்த்து இருக்கும். ஆனால் இன்னும் சில சந்தேகம் சிலருக்கு உள்ளது. அதாவது Adsense Account ஒன்றை பணம் கொடுத்து வாங்கலாமா என்பது அது. அது பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
முதலில் நேரடியாக பதிலைக் கூறி விடுகிறேன். கண்டிப்பாக Adsense Account பணம் கொடுத்து வாங்கக் கூடாது. அது முற்றிலும் தவறு.
உங்களுக்கு தகுதி இருந்தால் கூகிள் தந்துவிட்டுப் போகிறது. அதை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும்.
நானும் கூட ஆரம்பத்தில் பத்து முறை Apply செய்தேன் அதன் பின்னர்தான் எனக்கு கிட்டியது.
உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கடந்த Adsense பதிவுகளில் கூறியது போல மொழி, கால அளவு, அத்துடன் உங்கள் பதிவின் தரம் என்பதை பொறுத்து அமையலாம்.
அப்படி மீறி நீங்கள் வாங்கி பயன்படுத்தினால், அதை கூகிள் கண்டுபிடித்தால் கண்டிப்பாக உங்கள் அக்கௌன்ட் முடக்கப்படும். அதன் பின்னர் உங்கள் ஈமெயில்க்கு நீங்கள் மறுபடி அக்கௌன்ட் பெறுவது என்பது குதிரைக்கொம்பாகி விடும்.
என்னுடைய கேள்வி:
Can We Buy Adsense Account To Paying Money To Someone?
இன்னொரு விஷயம் ஒரு ஈமெயில் ID க்கு நீங்கள் வாங்கிவிட்டு மறுமுறை திரும்பவும் மாற்றம் செய்ய முடியாது. எனவே உங்கள் பெயர், முகவரி போன்றவற்றை மிகத் தெளிவாக கொடுக்க வேண்டும். அவை சரியானபடி இருத்தலும் அவசியம். குறிப்பாக உங்கள் பெயர் உண்மை பெயராக மட்டும் இருக்கட்டும். உங்கள் பெயரில் பேங்க் அக்கௌன்ட் இருப்பின் அது போல கொடுக்க வேண்டும்.
அதே போல உங்கள் ஒரு ஈமெயில் ID க்கு Adsense Account Approval வாங்கிவிட்டு மற்றொரு ஈமெயில் ID க்கும் வாங்கக் கூடாது. இதை பெரும்பாலும் கூகிள் Reject செய்து விடும். இந்த விபரம் தெரியாமல் நான் முயற்சித்து இருக்கிறேன். ஆனால் நாம் ஒரு தளத்துக்கு Approve வாங்கிவிட்டால் அதை எத்தனை தளத்துக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது கடந்த பதிவில் நான் சொல்லி உள்ளேன்.
- பிரபு கிருஷ்ணா
