Photoshop: 32 Passport size போட்டோ ஒரே லேயரில் | கற்போம்

Photoshop: 32 Passport size போட்டோ ஒரே லேயரில்

 ஒரே ஒரு A4 பேப்பர் சைஸ் இல் நீங்கள் 32 பாஸ்போர்ட் போட்டோக்களை பெற முடியும். போட்டோஷாப் மூலம் நாம் இதனை செய்ய இயலும்.



1.உங்கள் போட்டோவை போட்டோஷாப்பில் ஓபன் செய்யவும்.(ஏற்கனவே பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கணினியில் இருந்தாலும்)

2. Image--> Image Size
அதனை கீழே உள்ள படத்தில் இருப்பது போல செய்து கொள்ளவும்.
கீழே வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளவை மாற்றாமல் செய்யவும்.



3.இதில் "inches" என்று காட்டபட்டுள்ளதை  "cm" எனவும் மாற்றி கொள்ளவும். அவ்வாறு செய்தால், width=3.5cm, Height=4.5cm. இதனை மறந்து விட வேண்டாம். இப்போது ஓகே கொடுக்கவும்.

4. இப்போது நீங்கள் பார்த்து கொண்டு இருப்பது உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. (இங்கு கொடுத்துள்ள resolution ஐ  மறந்து விட வேண்டாம். 200 ஆக மட்டும் வைத்து கொள்ளவும். பாஸ்போர்ட் போட்டோ இன் சைஸ் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சிறிது மாறலாம். இதனை document size என்பதில் உள்ள  width , height என்பதில் மாற்றிக்கொள்ளவும்.  resolution ஐ மாற்ற வேண்டாம்)

5. இப்போது edit--> define pattern என்பதை கிளிக் செய்து. உங்கள் போட்டோவை add செய்யவும்.


6.இப்போது ஒரு புதிய இமேஜ் ஓபன் செய்யவும்
File--> New

7. இதன் image Size ஐ கீழே உள்ளபடி மாற்றவும்.


 கவனிக்க இங்கும் resolution 200 ஆகவே உள்ளது.  அத்துடன் width=12 inches, Height=8 inches. என்று வைத்து கொள்ளவும் (A4 சைஸ் பேப்பர்க்கு சமம்.)

8. இப்போது உங்களுக்கு ஒரு புதிய வெற்று இமேஜ் கிடைத்து இருக்கும்.

9. இப்போது Edit--> fill செல்லவும்.


இங்கு use என்பதில் pattern ஐ செலக்ட் செய்யவும்.

10. இப்போது custom pattern இல் உங்கள் படத்தை செலக்ட் செய்யவும்.


11. இப்போது ஓகே கொடுத்து விட்டால் உங்களுக்கு குறைந்த பட்சம் 32 போட்டோ இருக்கும். அதிகமாக இருந்தால் கிராப் செய்து கொள்ளவும். 


டிஸ்கி: நீங்கள் கொடுத்துள்ள  resolution சைஸ் வேறு வேறாக இருந்தால் 32 போட்டோக்கள் உங்களுக்கு வராது.  

இதனை நீங்கள் "டிஜிட்டல் கலர் லேப்" இல் கொடுத்தால் குறைந்த விலைக்கு இவ்வளவையும் பெற முடியும். மிக அதிகபட்சமாக அவர்கள் இதனை 100 ரூபாய்க்கு தர இயலும். ஒரு A4 sheet பிரிண்ட் போட எவ்வளவு என்று கேட்டுக் கொள்ளுங்கள் இதனால் பிரச்சினை இல்லை. நான் இதை நாமக்கலில் வெறும் 30 ரூபாய் க்கு வாங்கினேன்.  

இதனை சாதாரண studio வில் நீங்கள் எதிர்பார்க்க இயலாது. 




◘பலே ட்வீட்◘


சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி கும்பிடும் பழக்கம் இந்த பகுத்தறிவாதிகளாக காட்டிக் கொள்வோர்க்கு போய்விடவில்லை.
                                                                                                        _karaiyaan@twitter.com
மிகவும் விரும்பிய பெண்ணை அவளது திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து பார்க்கும் நிலைமை கடினமானது - அவள் மனைவியேஆனாலும் சரி.
                                                                                                                 _kuttysuvaru@twitter.com
ஊரையே கொள்ளையடித்தவன் எல்லாம் கோட்டையில இப்பவும் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் உலகத்தை உலகுக்குக் காட்டியவர் உள்ளேபோய்ட்டார்.
 _tbiththan@twitter.com

5 comments

சூப்பர் தகவல்

Reply

@ISAKKIMUTHUவருகைக்கு நன்றி நண்பரே!!

Reply

மிகவும் உபயோகமான தகவலிது..!! நன்றி!!

Reply

@பால் [Paul]வருகைக்கு நன்றி நண்பரே!!

Reply

அருமை நண்பா
நானும் ஒரு பிரிண்ட் போட்டுப்பார்த்தேன்

Reply

Post a Comment